பள்ளி யடைந்திடும் முன்பு - சாலையில்
பார்த்து நடந்திடு தம்பி
துள்ளி வந்திடும் வாகனம் - புறந்
தள்ளிச் சென்றிடும் தம்பி!

ஓட்டுநர் உரிமம் இலாதவர் - வண்டி
ஓட்டுவ துண்டு தம்பி
ஓட்டுநர் பலபேர் விதி s- மீறி
ஓட்டுவ துண்டு தம்பி!

தோழனைத் தொட்டு ஆடியே - சாலையில்
துள்ளி நடந்திடில் தம்பி
மரணம் வருமே நாடியே - நெஞ்சில்
கவனம் வைத்திடு தம்பி!

தங்கமாய் நினைத்தே உன்னை - தாய்
தந்தை அனுப்புவார் தம்பி
அங்கத்தில் வந்திடும் ஊனம் - சாலை
ஆபத்தில் சிக்கினால் தம்பி!

ஒருவர் ஒருவராய்த் தொடர்ந்து - சாலை
ஓரமாய் நடக்கணும் தம்பி
இருவர் இருவராய் இணைந்து - சாலையின்
இடையே கடக்கணும் தம்பி!

துள்ளி வந்திடும் வாகனம் - புறந்
தள்ளிச் சென்றிடும் தம்பி
பள்ளி யடைந்திடும் முன்பு - சாலையில்
பார்த்து நடந்திடு தம்பி!


- முசிறி மலர்மன்னன்

Bookmark and Share

 

 

february
march
may
june
august
september
october
november
december