உலகநாடுகள்

அமைவிடமும் பரப்பளவும்:
_ இந்நாடு மத்திய ஆசியாவில், சீனாவிற்கு வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
அய்ரோப்பாவின் கிழக்கு முனையில் யூரல் நதியால் பிரிக்கப்படுகிறது.
_ துர்க்மேனிஸ்தான், கிர்கிஸ்தான், சீனா, இரஷ்யா, உஸ்பகிஸ்தான் போன்ற நாடுகளையும் காஸ்பியன் கடலையும் எல்லைகளாக கொண்டுள்ளது.
_ நாட்டின் மொத்த பரப்பளவு 27,17,300சதுர கிலோ மீட்டர்கள்.
மக்களும் மொழியும்
_ 2008 ஜூலை கணக்கெடுப்பின் படி நாட்டின் மொத்த மக்கள் தொகை 1,53,40,533 பேர் இவர்களில் 47% பேர் முஸ்லீம்கள், 44% பழைமை இரஷ்ய மதங்களை பின்பற்றுபவர்கள், 2% கிருத்துவர் மற்றவர்கள் 7% பேர்.
_ மொத்த மக்கள் தொகையில் 64.4% பேர் கஸாக் மொழியை பேசுகின்றனர். அதுவே கசாக் தலைமை மொழியாக உள்ளது. ஆனால் வியாபாரங்களிலும் அலுவலகங்களிலும் 95% பேசப்படும் மொழி இரஷ்யன் மொழியாகும்.
_ நாட்டின் கல்வியறிவு சதவீதம் 99.5% ஆகும்
_ சராசரி வாழ்நாள் 67.54 ஆண்டுகள்.
_ மனித வள மேம்பாட்டு குறியீட்டு அட்டவணையில் 73 ஆம் இடத்தைப் பெறுகிறது.
பொருளாதாரத் தகவல்கள்:
_ நாட்டின் நாணயம் டெங்கே (ஜிமீஸீரீமீ) _ நாட்டின் முக்கிய இயற்கை வளங்கள் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி இரும்பு, மாங்கனிஸ், நிக்கல், கோபால்ட், தாமிரம், காரியம், துத்தநாகம், பாக்ஸைட், தங்கம், யுரேனியம் ஆகியவைகளாகும்.
_ முக்கிய விளைபொருட்கள் கோதுமை, பார்லி, உருளைக்கிழங்கு, இலவம் பஞ்சு, சூரிய காந்தி ஆகியவை.
_ முக்கிய ஏற்றுமதி பொருட்கள் தானியங்கள். பெட்ரோலியம், வேதி மூலப் பொருட்கள், கால்நடை ரோமம் மற்றும் மாமிசங்கள் ஆகியவைகளாகும்.
_ முக்கிய இறக்குமதிகள் எந்திரங்கள் மற்றும் அறிவியல் கருவிகள், உணவுப் பொருட்கள்.
_ வறுமைக் கோட்டிற்குக் கீழ் 19% மக்கள் வசிக்கின்றனர்.
_ வேலை வாய்ப்பற்றவர்கள் 7.6 % மக்கள் வசிக்கின்றனர்.
_ வேலை வாய்ப்பற்றவர்கள் 7.6% பேர்
_ நாட்டின் மொத்த இருப்புப் பாதையின் நீளம் 13, 700 கிலோ மீட்டர். சாலைகளின் நீளம் 2,58,029 கிலோ மீட்டர்.
அரசு அமைப்பு முறை:
_ கஸாக்ஸ்தானின் தலைநகர் அஸ்தானா (கிணீஸீணீ) _ இது ஒரு குடியரசு நாடாகும். குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராக உள்ளார். அவர் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
(தற்போதைய குடியரசுத் தலைவர் நாசர் பாயேவ்)
_ அரசாங்கத்தின் தலைவராக பிரதமர் இருக்கிறார். (தற்போதைய பிரதமர் கரீம் மாசி மவ்)
_ நாட்டின் சட்டங்கள் இஸ்லாமிய மற்றும் ரோமானிய சட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை.
_ இந்நாடு இரண்டு அவைகளையுடைய பாராளுமன்றத்தைக் கொண்டுள்ளது.
_ உச்ச நீதி மன்றமும் அரசமைப்புக் கவுன்சிலும் நீதித்துறையின் அதிகாரம் பெற்றவை.
வரலாற்றுச் சுவடுகள்:
_ நீண்ட காலங்களாக மங்கோலிய தர்த்தார் ஆதிக்கத்திலிருந்து 18 ஆம் நூற்றாண்டில் இரஷ்யப் பேரரசுடன் இணைந்தனர்.
_ 1920 இல் சோவியத் யூனியனில் தன்னாட்சி பெற்ற பகுதியாக மாறியது.
_ 1936 இல் முழு உரிமையுடைய சோவியத் யூனியன் குடியரசானது.
_ 1991 சோவியத் யூனியன் உடைந்தபோது தனி நாடாக பிரகடனப்படுத்திக் கொண்டது.
|