மனித இனவரலாறு

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், முக்கியமாகப் பிரிட்டனில் கைத்தொழில் முறைகளில் ஏற்பட்ட மாறுதல், தொழிற் புரட்சி என வழங்கப் பெறுகிறது. இது மிகப் பெரிய மாறுதல். கைத்தொழிலும், வாணிகமும் பல மடங்கு பெருகுவதற்கு ஏதுவான மாறுதல். எனவே இம்மாறுதலைப் புரட்சி என்று சொல்வது பொருத்தமே. இத் தொழிற்புரட்சி பிரிட்டனில் தொடங்கி 19 ஆம் நூற்றாண்டில் பிற அய்ரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலும் பரவியது.

ஜெர்மனியில் 1871 இல் பேரரசு நிறுவப்பட்ட பின்னரும், அமெரிக்காவில் உள் நாட்டுப் போருக்குப் பின்னரும், ரஷ்யாவில் 1917_க்குப் பின்னர்தான் தொழிற் புரட்சி தொடங்கியது இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளில் 20 ஆம் நுற்றாண்டில் தொழிற்புரட்சி தொடங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அனேகமாக எல்லா உலகநாடுகளிலும் தொழிற்சாலை முறை ஏற்பட்டது.

18 ஆம் நுற்றாண்டின் இடைக்காலம் வரை மக்களின் வீடுகளிலோ, அல்லது பணிப்-பட்டறைகளிலோ (work shops) தன் தேவை நிறைவுக்குடடும்ப (அ) கிராம முறையில் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

நாகரிகம் வளர்ந்து பொருளாதாரச் செயல் விரிவடையவே, தன் தேவை _ நிறைவு என்ற நிலை மறைந்தது. பின்னர் பல திறப்பட்ட கம்மியர்கள் தலையெடுத்துச் சந்தைக்காகப் பொருள்களை உற்பத்தி செய்யும் முறை தோன்றியது. ஆனால் பிரிட்டனுடைய சரக்கு-களுக்கு வெளிநாடுகளில் தேவை ஏற்பட்டதும் சங்க முறை முறிந்தது. தேவைப் பெருக்கத்தை ஈடுகட்ட உற்பத்தியின் வேகத்தை பெருக்கக் கூடிய வழிவகைகள் நாடப்பட்டன.

பெரிய, பெரிய தொழிற்சாலைகள் பிரிட்டனில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டு வளர்ச்சி அடைந்தமைக்கான காரணங்களை அடுத்த இதழில் காண்போம்.

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008