எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீர்கள் [6]
நதிக்கரை கோட்டைகள்

அன்புள்ள மிஸ்!

வாய்மொழித் தேர்வு எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. உங்கள் மாணவர்கள் பிரெஞ்சு நதியான லோயிரின் நதிக்கரைக் கோட்டைகள் பற்றி மிகுந்த ஞானத்தோடு பேசினார்கள்.

பின்னர்தான் தெரிந்தது அவர்கள் இத்தனை ஆண்டுகளாக அதை மட்டும்தான் அறிந்திருந்தனர் என்பது. மிஞ்சிப் போனால் பாடத்திட்டத்தின் சில பகுதிகளை வாசிக்கவும், மொழிபெயர்க்கவும் தெரிந்திருந்தனர்.

மிஸ்! உங்களது கல்வி ஆய்வு அதிகாரிகள் இதை மிகவும் பாராட்டக் கூடும். ஏனெனில் அவர்கள் பாடத்திட்டத்திற்கு வெளியே ஏதும் கேட்பதில்லையே. இந்த வகை பிரெஞ்சு மொழி அறிவு பயனற்றது அல்லவா, மிஸ்-?

யாருக்காக இதை இப்படிச் செய்கிறீர்கள், மிஸ்? நீங்கள் ஆய்வாளருக்காகவும், ஆய்வாளர் மேலதிகாரிக்காகவும், மேலதிகாரி கல்வி அமைச்-சருக்காகவும் செய்கிறார்கள். இதுதான் உங்கள் பள்ளியின் மிக மோசமான தன்மையாகும். இதனா-லேயே அது அழிந்தும் வருகிறது.

உங்கள் மாணவர்களின் இலக்கு என்பது பெரும் துயரமானதுதான். ஒவ்வொரு நாளும் அவர்கள் மதிப்பெண்ணுக்காக, தேர்ச்சி அறிக்கைக்காக, சான்றிதழுக்காக மட்டும்தான் வேக-வேகமாகப் படிக்கிறார்கள். ஆனால், அந்த வேகத்தில் அவர்கள் கற்கும் விசயங்களின் சிறந்த, நுட்பமான விசயங்களைத் தவற விட்டு விடுகிறார்கள்.

மொழிகள், அறிவியல், வரலாறு என்ற அனைத்தும் முற்றிலும் வெற்றி பெறும் மதிப்பெண்-களாகவே மாறி விடுகின்றன. அவ்வாறு சான்றிதழ் பெறுவதன் மூலம் தனிப்பட்ட ஆசை, வெறும் பொரு-ளாதாரப் பயன்பாடாகிவிடுகிறது.

பனிரெண்டாவது வயதில் சமூக ஏணியில் ஏறுபவர்-களாக அவர்களை மாற்றிக் கொள்வதுதான் உங்கள் பள்ளியில் மகிழ்ச்சிகரமான மாணவனாக இருப்பதற்கான வழியாகும். நல்ல நாடகம்தான்! ஆனால், சிலர்தான் ஏறுகிறார்கள். பலர் தம் இளம் வயதிலேயே பள்ளியின் மீது வெறுப்புக் கொண்டு விடுகின்றனர். நீங்கள் எப்படி அழைத்தும் பலனின்றிப் போய் விடுகிறது.

ஆங்கிலம்

அடுத்த வகுப்பறையில் ஆங்கிலத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. உள்ளதிலேயே மி-குந்த குழப்பமானது அதுதான். ஆங்கிலம் மிகவும் பயனுள்ள ஒரு மொழி என்று நம்புகிறேன். நாம் அதை அறிந்திருந்தால்தான் அது பயனுள்ள மொழியாகும்.

முதன்முதலில் ஒர் அந்நிய மொழியைக் கற்பது மிக முக்கியமான நிகழ்வாகும். மாணவர்களுக்கு அது வெற்றிகரமாக துவக்கப்படவேண்டும். இல்லையெனில் சிக்கல்கள் எழக்கூடும். அவர்-களால் குட்நைட் என்று கூடக் கூற முடியாது.

ஓர் இத்தாலியனுக்கு இவ்வகை வெற்றி பிரெஞ்சு மொழியிலேயே சாத்தியப்படுவதை அனுபவத்திலிருந்து கண்டுள்ளோம்.

பிரெஞ்சு பேசும் யாராவது வரும்போது மாணவர்கள் அவர்களுடன் பேச ஆர்வம் கொள்-கிறார்கள். அன்றைய இரவுகளில் அந்தப் புதிய மொழியை அறிந்து கொள்ள அவர்கள் விடாது முயற்சிப்பார்கள்.

ஆயத்தப்படுதல், தடைகளை தாண்டும் திறன், மொழிச் சிக்கல்களை எதிர்கொள்ளும் மனநிலை ஆகிய மொழித்திறனின் முக்கிய கருவிகள் அவர்கள் கைவசமுள்ளன.

கணக்கும் கொடுமையும்

அன்புள்ள மிஸ்! நீங்கள் உருவாக்கிய கணக்குப் பாடங்களில் வரைவியல் பகுதியில் கேட்கப்பட்ட கேள்வி மனதில் நவீன சிற்பக் கண்காட்சியினை மனக்-கண் முன் நிறுத்துகிறது. அரைக்கோளம் ஒன்றின் மேல் உள்ள உருளையின் மேற்பரப்பு...

மேற்பரப்புகளை அளக்க ஒரு கருவியும் கிடையாது. நீளம் அகலமெனும் பரிமாணங்களை அறியாமல் பரப்புகளைப் பற்றியே வாழ்க்கையில் ஏதும் குறிப்பிடப்படுவதில்லை. இதுபோன்ற கணக்குகளைக் குதர்க்க புத்திக்காரர்களால் மட்டுமே கேட்க முடியும்.

புதிய சிர்த்திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் இது போன்றவை இனியும் இடம் பெறாதாம்.

கார்லா இந்த ஆண்டுத் தேர்வில் புதிய பாடத் திட்டத்தில் உள்ள கணக்கு ஒன்றைச் செய்தாள்.

அரைக்கோளம் உருவம் கொண்ட ஒரு பாய்லர்... மீண்டும் மேற்பரப்பு பற்றிய கணக்கு. புதிய ஆசிரியர் பழையவரிடமிருந்து தலைப்பை மட்டும் மாற்றி தன்னை நவீனமாகக் காட்ட முயற்சிக்கிறார் பாருங்கள், மிஸ்.

விமர்சனத்திற்கு உட்படாதவர்கள் காலத்திற்கேற்ப மாற்றம் பெறுவதில்லை.
உங்களின் கட்டாயப் பள்ளிகள்
ஆண்டு தோறும் 4,62,000 குழந்தைகளை பெயிலாக்கி வெளியேற்றுகின்றன.
அவர்கள் மீண்டும் படிக்கிறார்கள்.
அவர்கள் பள்ளியை இழக்கவில்லை.
ஆனால் தங்களின் வகுப்புத் தோழர்களை இழக்கின்றனர். மீதம் இரண்டு பேர் பள்ளிக்கு
வருவதேயில்லை. ஆனால்,
அவர்களின் வியர்வை
வயல்வெளிகளில் ஓடி
நமக்கு உணவாக வருகிறது.

தமிழில்: ஜே.ஷாஜஹான்
நன்றி: வாசல் பதிப்பகம்

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008