மந்திரமா? தந்திரமா?
சல்லடையில் தண்ணீர் நிற்பது எப்படி?

உங்களது வீட்டில் பல வகையான பருப்புகளை சலித்து பிரித்து எடுக்கும் சல்-லடை உள்ளதே, அந்த சல்லடையில் தண்ணீ-ரை ஊற்றினால் கீழே ஒழுகாமல் இருக்குமா? இருக்காதா? அது எப்படி தண்ணீர் ஒழுகாமல் இருக்கும்-? நிச்சயம் தண்ணீர் கீழே ஒழுகும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்தானே. ஆனால் மந்திரவாதி என்று ஒருவன் செய்தால் எப்படி செய்வான் என பார்ப்போம்.
இதோ பாருங்க இந்த சல்லடையில் தண்-ணீர் நிற்குமா? என நம்மிடம் சல்லடையை காண்பித்துவிட்டு இப்போது என் மந்திர சக்தி-யால் இந்த செம்பில் உள்ள தண்ணீரை சல்ல-டையில் ஊற்றி அப்படியே ஒழுகாமல் நிற்க செய்யப் போகிறேன் என்று கூறி மந்திரக் கோல் என்ற கருப்பு நிற குச்சியை சல்ல-டையின் மேலே காட்டி ஏதோ புரியாத மொழி-யால் முணு முணுப்பான் மந்திரவாதி. இப்படி செய்தவுடன் நம் மக்கள் அவனுடைய கையில் உள்ள மந்திரக் கோல்தான் சக்தியைக் கொடுக்-கிறது என்று நம்பி விடுவார்கள். பிறகு மந்திர-வாதி ஆயிரம் கண்கள் உடைய இந்திரனே சல்லடையின் கண்களை சற்று நேரம் மூடி இருக்குமாறு அருள் செய் ஜெய் ஜக்கம்மா என்று வேகமாக சத்தம் போட்டுக் கொண்டே சல்லடையில் தண்ணீரை ஊற்றுவான், தண்ணீரும் கீழே ஒழுகாமல் இருக்கும். என்ன குழந்தைகளே வியப்பாக இருக்கிறதா? அது எப்படி என்று இப்போது உங்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கிறேன்.
இது போன்ற தந்திர செயல்களை செய்வ-தற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே ஒரு சல்ல-டையில் சோற்றுக் கற்றாழையின் சாற்றை பிழிந்து அதை சல்லடை முழுக்க பூசி நன்றாக வெயிலில் காய வைத்து விட்டால் சல்லடை-யில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. நம் ஏமாளி மக்களிடம் காட்டினால் சல்லடையின் துளைகளெல்லாம் அப்படியே அடைபடாமல் இருப்பது போல் தெரியும். அதன் பிறகு நான் மேலே குறிப்பிட்டது போல மந்திரவாதி சல்ல-டையில் தண்ணீரை ஊற்றி நம்மை நம்ப செய்து ஏமாற்றுவான். நம் மக்களும் இதுபோன்ற செயல்களை பார்த்து விட்டு தெய்வ சக்தியும், மந்திர சக்தியும்தான் இதற்குக் காரணம் என்று முடிவு செய்து விடுவார்கள்.
இதற்கு மிக முக்கிய காரணம் அறிவின் கூர்மையும், சோற்றுக் கற்றாழையின் தன்மையும்-தான். இது போலத்தான் சாமியார்கள் மந்திரம் என்ற பெயரில் தந்திர செயல்களை செய்து பாமர மக்களை சிந்திக்க விடாமல் ஏமாற்று-கின்றனர் என்பதை அன்பு குழந்தைகளே நீங்கள் உங்களது பெற்றோர்-களிட-மும், மற்றவர்-களிடமும் விளக்கிக் கூறவேண்டும். சரியா? -வெங்கட. இராசா, ம.பொடையூர
|