தேர்வு அச்சம் தேவையா?

தேர்வுக் காலம் என்று வந்தால் போதும், குழந்தைகள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை. பள்ளியில் ஆசிரியர்கள்- வீட்டில் பெற்-றோர்கள் என்று ஒரே சித்திரவதை தான். இயல்-பாக குழந்தைகள் தேர்வுக் காலம் வந்தவுடன் அவர்களாகவே பாடங்களை படிக்கத் தொடங்கு-வார்கள். அவர்களை ஊக்கப்படுத்தினாலே போதும். ஆனால் அதில் பெற்றோர் கொடுக்கும் அழுத்தமே மாணவர்களை பயமடையச் செய்கிறது.

தேர்வுக் காலங்களில் சரியாக சாப்பிடாமல், தேவையான அளவு தூங்காமல் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். குழந்தை-களுக்கு விளையாட்டு, தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்குகளை எப்போதும் ஒரே சீராக வைத்துக் கொள்ள கற்றுத்தர வேண்டும். மற்ற நாட்களில் அதைப்பற்றி கவலைப்படாமல் தேர்வு நேரத்தில் மட்டும் கட்டுப்பாடாக இருப்பதன் மூலம் மேலும் தேர்வு பற்றிய பயம் குழந்-தைகளுக்கு அதிகமாகிறது. குழந்தைக-ளோடு ஆண்டு முழுவதும் தொலைக்காட்சி பார்த்து-விட்டு, தேர்வுக் காலங்களில் மட்டும் குழந்தை-களை வேறு அறையில் படிக்கச் செய்துவிட்டு தொலைக்காட்சி பார்ப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். தேர்வுக் காலம் வந்தவுடன் பெற்றோர்களே தொலைக்காட்சியைப் பார்ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளைப் பார்த்து இந்த தேர்வுதான் உன் வாழ்க்கையை நிர்ணயிக்கும். இதில் மதிப்-பெண் குறைந்தால் உன் வாழ்க்கையே போய்-விடும் என்பது போல மிரட்டுவது தான் குழந்-தைகளின் பயத்திற்கும் அவர்களின் விபரீத முடிவிற்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. எனவே குழந்தைகளிடம் அதிக மதிப்பெண் பெற்றால் நீ விரும்பும் துறையை எடுத்துப் படிக்கலாம் என்ற ஆர்வத்தை, ஆசையை ஏற்படுத்த வேண்டும் என்கிறது குழந்தைகள் குறித்த ஓர் ஆய்வு. இந்த ஆய்வின் தொடர்ச்சியாக மனநல மருத்துவர் ஷாலினி அவர்களிடம் தேர்வுக்குத் செல்லும் மாணவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?, பெற்றோர்கள் எப்படி குழந்தைகளை வழிநடத்த வேண்டும் என்றுகேட்டோம். உற்சாக மாக டாக்டர் ஷாலினி பதில் அளித்தார் :- குழந்தைகள் சந்தோஷமாக படித்தால் மட்டுமே அவர்கள் மனதில் பதியும். எனவே குழந்தைகள் மனதில் பதிய அவர்களின் ஆர்-வத்தை தூண்டும் விதமாக கற்பிக்க வேண்டும். தவிர குழந்தைகளை மிரட்டி படிக்க வைப்பது பலனைத் தராது. பயிற்சி கொடுக்கும்-போதே உலக நடப்புகளோடு ஒப்பிட்டு உளப்பூர்வமாக அதை கற்பிக்க வேண்டும். அப்படியும் படிப்பில் ஆர்வம் இல்லாத குழந்தையென்றால் கடைசி நேரத்தில் இந்த குழந்தைக்கு முக்கிய சில வினாக்களை தேர்ந்-தெடுத்து சொல்லித் தர வேண்டும். அதைத் தவிர்த்து தேர்வின் மீது பயத்தை உருவாக்-கினால் நன்றாக படிக்கும் குழந்தைகள் கூட பயத்தில் தேர்வுகளை சரியாகச் செய்வதில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமாக படிப்பதில் ஆர்வம் ஏற்படும்.

குறிப்பாக சில குழந்தைகள் இரவில் படிப்-பதை விரும்பும். சில குழந்தைகள் பகலில் படிப்பதை விரும்பும். எனவே வலுக்கட்டாய-மாக இரவில் கண்விழித்து படிக்க வைப்பது பயன்தராது.

எனவே பொதுவான ஆர்வத்தை தூண்டு-வது போல் இருக்க வேண்டுமேயொழிய பயத்தை தருவதாக இருக்கக் கூடாது.

பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள்? தேர்வில் வெற்றி பெறுவதுதான் வாழ்வின் வெற்றி என்று! அப்படி நினைப்பது தவறு. இன்று வாழ்க்கையில் வெற்றி பெற்ற பலர் தேர்வில் பெரிதாக வெற்றி பெற்றவர்கள் இல்லை.

பிரிட்டிஷ்காரர்கள் இந்தக் கல்வி முறையை தொடங்கியபோது அவர்களுக்கு வேலைக்கு தேவையான ஆட்களை எடுக்க இம்முறையை புகுத்தினார்கள். பத்தாம் வகுப்பில் இவ்வளவு மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று கூறி-னார்கள். அது அந்தக் கால நடைமுறை. இந்த முறையை மாற்ற தற்போது முயற்சிகள் மேற்-கொள்ளப்படுகின்றன. அந்த மாற்றம் வந்தால் குழந்தைகள் தங்களுக்கான துறையை தேர்ந்-தெடுத்து அதில் பிரகாசிப்பார்கள். இன்று நாம் இந்த கல்வி முறையில் இருப்பதால் நமக்கு இந்த மதிப்பெண் முறை தேவைப்படுகிறது என்பதை தவிர வேறு எதுவு-மில்லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொண்டால் குழந்தைகளுக்குத் தேவையற்ற அழுத்தத்தை தர மாட்டார்கள். அதற்காக கவனிக்காமலே இருந்தாலும் குழந்தைகள் மெத்தமனாக ஆகிவிடுவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் நாம் எதை உயர் நிலை (பிவீரீலீ ணீ) என்று கூறுகிறோமோ அதையே குழந்தைகள் நம்புகின்றன. தேர்ச்சி பெறுவது உயர்நிலை. தோல்வியடைவது தாழ்நிலை என்று நாம் கூறினால் குழந்தைகள் மதிப்பெண் பெறுவதையோ தோல்வியடைவதையோ அறிவுப் பிரச்சினையாக, திறமைப் பிரச்சனை-யாக இல்லாமல் தங்களுடைய மானப் பிரச்சினையாக எடுத்துக் கொள்கின்றனர். எனவேதான் தேர்வு முடிவில் தோல்வி ஏற்பட்டால் விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தை அதிக மதிப்பெண் பெற்றால் தான் அது பெரு-மை என்றும், குறைவான மதிப்பெண் பெற்றால் அது பெருமை இல்லை என்றும் நினைக்-கிறார்-கள். எனவே குறைவான மதிப்பெண் பெற்றவர் களையோ, தோல்வியடைந்தவர்களையோ உதாசினபடுத்துகிறார்கள். அதனால் குழந்தை விபரீதமான முடிவுகளை எடுக்கின்றது. திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் போதும். தேர்வு முடிவுகள் வெளியாகும் போது வீட்டிலேயே கவுன்சிலிங் கொடுத்தால் அதுவே நல்ல பலனைத் தரும். அவர்கள் மனதைத் தேற்ற வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகள் விபரீதமான முடிவுகளை எடுப்-பதைத் தடுக்க முடியும். அப்படியும் குழந்-தையின் மனநிலை மாறவில்லையென்றால், அப்-போது மனநல மருத்துவரை அணுகலாம்.

ஆனால் அதற்கெல்லாம் தேவை-யேயில்லாமல் செய்வது குழந்தைகளிடம் நாம் ஏற்படுத்தும் மனோபாவத்தில்தான் உள்ளது என்றார் டாக்டர் ஷாலினி.

பிஞ்சுகளே! தேர்வு என்றால் பயம் வேண்டாம். மகிழ்ச்சியாக எதிர்கொள்வோம். ஏனென்றால் அது நம்மை நாமே சோதித்துக் கொள்ள நமக்கு வழங்கப்படும் வாய்ப்பு. அவ்வளவு தானே!

- நேர்காணல்:- வை.கலையரசன்

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008