உலக நாடுகள் - வடகொரியா

வை.கலை

அமைவிடமும் பரப்பளவும்:

கிழக்காசியாவில் உள்ள கொரியன் தீபகற்பத்தின் வட பகுதியாக அமைந்துள்ளது. இதன் எல்லைப் பகுதிகளாக சீனா மற்றும் தென் கொரியா நாடுகள் அமைந்துள்ளன இதன் இருபுறமும் கொரியா வளைகுடாவும் ஜப்பான் கடலும் அமைந்துள்ளன.

நாட்டின் மொத்த பரப்பளவு 1,20,540 சதுர கி.மீ.

மக்கள் தொகையும் கல்வியும்

2008 ஜூலை கணக்கெடுப்-பின்படி நாட்டின் மொத்த மக்கள் தொகை 2,34,79,089 பேர்.

மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.79%

மொத்த மக்கள் தொகையில் பெரும்பான்மை மக்கள் புத்த மதத்தையும் கன்பூசியஸ் மதத்தையும் பின்பற்றுபவர்கள்.

நாட்டின் கல்வியறிவு பெற்றுள்ளவர்கள் 99%பேர்.

பொருளாதாரத் தகவல்கள்: _ நாட்டின் நாணயம் கொரியன் ஓன் (North korean won) என்று அழைக்கப்படுகிறது.

நாட்டின் முக்கிய இயற்கை வளங்கள் நிலக்கரி, கால்சியம், டங்ஸ்டன், துத்தநாகம், கிராபைட், இரும்பு, தாமிரம் போன்றவைகளாகும்.

நாட்டின் முக்கிய சக்தி, நீர்மின்சக்தி ஆகும்.

நாட்டின் முக்கிய ஏற்றுமதிகள் கனிமங்கள், உலோகப் பொருட்கள், துணிகள், மற்றும் மீன் தயாரிப்புகள் ஆகியவை.

 

நாட்டின் முக்கிய இறக்குமதிப் பொருட்கள் பெட்ரோலியம், எந்திரத்தளவாடங்கள், மற்றும் உணவு தானியங்கள்.

ஆட்சி அமைப்பு முறைகள்

வட கொரியா ஒரு சோசலிச (கம்யூனிச) நாடாகும்.

நாட்டின் தலைவர் அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

வரலாற்றுக் குறிப்புகள்:

கி.பி. 108 க்கு முன் தனி அரசாக அமைத்திருந்தது.

கி.பி. 108 இல் சீனா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1392 இலிருந்து யி வம்சத்தினரால் ஆளப்பட்டது.

1910இல் கொரியா முழுவதையும் ஜப்பான் ஆக்கிரமித்தது.

1945 இரண்டாம் உலகப்போரின் முடிவில் நேச நாடுகளால் கைப்பற்றப்பட்டது. இதன் வட பகுதியை (வட கொரியாவை) சோவியத் யூனியனும், தென் பகுதியை (தென் கொரியா) அமெரிக்காவும் கைப்பற்றின.

1946 இல் சோவியத் யூனியனின் மேற்பார்வையில் வடகொரியா கம்யூனிஸ்ட் கட்சி (கொரிய உழைப்பாளர் கட்சி) கிம் சங் தலைமையில் உருவாக்கப்பட்டது. _ 1948 இல் விடுதலைப் பெற்றது.

முக்கியத் தகவல்கள்:

இதன் தலைநகர் யாங்ஹாங் (Pyong yang) _ சுதந்திர நாள் 1945 ஆகஸ்ட் 15 (ஜப்பானிடமிருந்து).

Archives


Warning: include(archive/2009/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/may/page04.php on line 118

Warning: include() [function.include]: Failed opening 'archive/2009/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/may/page04.php on line 118

Warning: include(archive/2009/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/may/page04.php on line 119

Warning: include() [function.include]: Failed opening 'archive/2009/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/may/page04.php on line 119

Warning: include(archive/2008/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/may/page04.php on line 119

Warning: include() [function.include]: Failed opening 'archive/2008/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/may/page04.php on line 119