உலகப்புகழ் பெற்ற மனிதர்கள் - 22
ஜூலியஸ் சீசர்

கு.வெ.கி.ஆசான்

அரசு அதிகாரத்திற்கு அடையாளமாக 2000 ஆண்டுகள் நீடித்த ஒரு பெயர் சீசர் என்பதாகும். பண்டைக் காலத்தில், சீசர் எனும் குடிவழியைச் சேர்ந்தவர்கள் அய்ந்து பேர், ரோம் பேரரசை ஆண்டனர். இவர்களுக்கு முன்னோடியானவர், ஜுலியஸ் சீசர். அவருக்குப் பேரரசர் என்ற பட்டம் இல்லை. இருப்பினும், தெற்கு மற்றும் மேற்கு அய்ரோப்பா, மேற்கு ஆசியா, வடக்கு ஆஃபிரிக்கா ஆகிய பகுதிகளில் விரிந்த நிலப்பரப்பைத் தம் உறுதியான ஆட்சியின்கீழ் கொண்டுவந்தார். அதன் மூலம் ரோம் பேரரசுக்கு வலுவான அதிகாரத்தை அவர்தாம் முதலில் உண்டாக்கினார். இவருக்குப் பின்பு, அகஸ்டஸ் என்ற பட்டத்துடன் ஆண்ட ஆக்டோவியன், டைபீரியஸ் (Tiberius) ஆகியோர் பேரரசிற்குப் புகழைத் தேடித்தந்தனர். ஆகையால் சீசர் என்ற பெயரை கெய்சர் என ஜெர்மன் பேரரசரும், ஜார் என ரஷியப் பேரரசரும் 20ஆம் நூற்றாண்டில் தங்கள் பட்டங்களாகக் கொண்டிருந்தனர்.

பிறப்பு

ஜுலியஸ் சீசர் ரோம் நகரில் கி.மு. 100 ஜுலை 13 இல் பிறந்தார். இவருக்கும் தந்தைக்கும் ஒரே பெயர்: கேயஸ் ஜுலியஸ் சீசர் என்பதாகும். தாயின் பெயர், அவ்ரேலியா கொட்டா: இவருடைய முன்னோர்களில் ஒருவர் அறுவைச் சிகிச்சையின் மூலம் பிறந்தார். அதைக் குறிக்கும் சிசேரியன் என்பதை ஒட்டிய சீசர், அவருடைய குடும்பத்திற்குப் பொதுப்பெயர் ஆயிற்று எனப் பிளினி எனும் வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இப்பொழுதுகூட குழந்தையின் பிறப்பிற்கான அறுவையை, சிசேரியன் என்கிறார்கள். இரு கட்சிகள்

ஜுலியஸ் சீசருடைய காலத்தில் ரோமில் இரண்டு பிரிவினரிடையே மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன. செனட் சபைக்கு ஆதரவான பழமைவாதிகள், செல்வம் மிக்கவர்களுக்கு ஆதரவாளர்கள். எளிய வெகுமக்களின் தலைவர்கள் அவர்களை எதிர்த்தனர். எளியவர்களுக்குப் பொதுச் சபைகள் ஆதரவு தந்தன. சீசரின் உறவினரான மரியஸ் வெகுமக்களின் தலைவர். அவருக்கும், செனட் சபையின் ஆதரவு பெற்ற சுல்லாவுக்கும் மோதல் ஏற்பட்டது.

அது உள்நாட்டுப் போராக வளர்ந்தது. இறுதியில் வெற்றிபெற்ற சுல்லா, தன்னைச் சர்வாதிகாரியாக நியமித்துக்கொண்டார். மரியஸின் ஆதரவாளர்களைக் கொன்றார் அல்லது நாடு கடத்தினார். இந்தக் கடுமையான நடிவடிக்கை, சீசர் மீதும் பாய்வதற்கு இருந்தது. இருப்பினும், சுல்லாவின் ஆதரவாளர் சிலரின் பரிந்துரையால், ஜுலியஸ் சீசர் தப்பினார். கடற்கொள்ளையரை ஒழித்தார்

தம்முடைய 18 ஆம் அகவையில், கி.மு. 82 இல், சீசர் ராணுவத்தில் சேர்ந்தார். இக் காலத்தில் துருக்கி எனப்படும் ஆசியா மைனரில் சில பகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றி நற்பெயர் எடுத்தார். கி.மு. 78 இல் சுல்லா இறந்த பின்பு சீசர் ரோம் திரும்பினார். சிறந்த சொற்பொழிவாளர் என்ற பெயரைத் தாங்கி, வழக்குரைஞர் தொழில் செய்தார். தமது விவாதத் திறனை வளர்த்துக்-கொள்ள, அதைப்பற்றிய படிப்பிற்காக, கிரீஸ் நாட்டிற்குக் கிழக்கில் உள்ள ரோட்ஸ் தீவு சென்றார். வழியில் ஏஜியன் கடலைக் கடக்கும் பொழுது, கடற் கொள்ளையரால் கடத்தப்பட்டார். விடுதலைத் தொகை கட்டி விடுதலையானார். விடுவிக்கப்பட்டவுடன், கப்பற் படையைத் திரட்டி, கொள்ளையர்களைப் பிடித்து, சிலுவையில் அறைந்து கொன்றார். ஆசியாவில் இருந்த போண்டஸ் நாட்டினர், ரோம் பேரரசில் ஊடுருவினர்; அதை முறியடித்தார்.

போர்கள், பதவிகள்

ரோம் திரும்பிய சீசர் அரசியலில் ஈடுபட்டார். பல்வேறு பதவிகளை வகித்தார். அய்பீரியா (ஹிஸ்பேனியா) வின் ஆளுநர் ஆனார் (இப்பொழுது ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளைக் கொண்டதாக அந் நிலப்பரப்பு இருக்கிறது.) அங்கு நடத்திய போர்களில் சில பகுதிகளை வென்றார்.

ரோம் திரும்பிய சீசர் கி.மு. 59இல் கான்சல் எனும் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்-பட்டார். நில விநியோகச் சட்டங்களைக் கொண்டுவந்தார். நிருவாகத்தை முறைப்படுத்தினார்; அதைத் தூய்மையுடைய தாக்குவதற்கு நடவடிக்-கைகள் எடுத்தார். செனட் சபையில் நடந்தவற்றைப் பதிவு செய்து, பொது இடத்தில் வைக்கச் செய்தார்.

கான்சல் பதவி முடிந்த பின்பு, கி.மு.58 இல், இத்தாலியின் வடமேற்கில் இருந்த கால் ( Gaul) பகுதியின் ஆளுநர் ஆனார். (ஃபிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளைக் கொண்ட பகுதிகளுக்கு அப்பொழுது கால் எனப் பெயர்) அந் நிலப்பரப்பில் கடுமையான போர்களை நடத்தி, அதை முழுதும் ரோம் ஆட்சியின்கீழ் கொண்டு-வந்தார். ரைன் நதியைக் கடந்து, மேற்கு நோக்கி வந்த ஜெர்மனிய இனக் குழுக்களை விரட்டியடித்தார். கி.மு. 55, 54 ஆண்டுகளில், ரோம் படையை முதல் முதலாக இங்கிலாந்தில் செலுத்திச் சில வெற்றிகளைப் பெற்றார்.

பாம்பே- சீசர் மோதல்

ராணுவத் தளபதியாகப் புகழ் பெற்றிருந்த பாம்பே, பெரும் செல்வந்தரான கிராசஸ், மற்றும் ஜுலியஸ் சீசர் ஆகியோர், தங்களிடையே உடன்படிக்கை செய்து கொண்டு, ரோம் சாம்ராஜ்யத்தை ஆண்டனர். ரோம் வரலாற்றில் இது முதல் மூவராட்சி எனப்படுகிறது. கி.மு. 53இல் போர்க்களம் ஒன்றில் சிராசஸ் கொல்லப்பட்டார். ஆகையால் மூவராட்சி முடிவுக்கு வந்தது. பாம்பே, மற்றும் சீசர் இருவருக்கும் இடையில் அதிகாரப் போட்டி வலுத்தது. கி.மு. 50இல் கால் மாநில வெற்றிகளுக்குப் பின்பு, வலிமையும் புகழும் மிக்கவராகத் திரும்பினார், சீசர். சட்டப்படி அவருடைய படைகள் கலைக்கப்படவேண்டும் என, பாம்பே சொன்னார். சீசர் மறுத்தார். வடக்கில் இருந்த ரூபிகன் நதியைத் தம் படையுடன் கடந்து இத்தாலியினுள் -நுழைந்தார். அதனால் உள்நாட்டுப்போர் மூண்டது. பாம்பே, கிரீஸ் நாட்டிற்குத் தப்பிச் சென்றார். அங்கு, பர்சாசலஸ் என்ற இடத்தில் நடந்த போரில், பாம்பேயைச் சீசர் தோற்கடித்தார். அங்கிருந்து எகிப்துக்கு பாம்பே சென்றார். ஆனால் அங்கு கொல்லப்பட்டார்.

கிளியோபாட்ரா

அந் நாட்டு மன்னர் டாலமிக்கும் சீசருக்கும் நடந்த போரில் டாலமி இறந்தார். அவருடைய மனைவி கிளியோபாட்ரா. அந்தப் பேரழகியும் சீசரும் காதலர் ஆயினர்; கூடிக்களித்தனர். பின்பு, ஆசியா மைனரில் வெற்றியுடன் போர் ஒன்றை முடித்துக் கொண்டு ரோம் திரும்பினார்.

முடிவுற்றார்

சீசர் வெளிநாடுகளில் இருந்த பொழுதே அந்த வெற்றி வீரரை செனட் சபை சர்வாதிகாரி ஆக்கியது. வடக்கு ஆஃபிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பகுதிகளில் சீசருக்கு எதிராகக் கிளர்ச்சிகள் நடந்தன. அந்த இடங்களுக்கு நேரில் சென்று அவற்றை ஒடுக்கினார். ரோம் திரும்பிய சீசருக்கு பெரும் வரவேற்பு இருந்தது. இருப்பினும் அவர் குடியாட்சி முறைக்கு எதிரானவர் என நினைத்தவர்கள் சதி செய்தனர்; கி.மு. 44 மார்ச் 15 இல் செனட் அரங்கில் குத்திக்கொன்றனர். அவருடைய நம்பிக்கைக்கு உரிய பூரூட்டஸ் அவர்களில் ஒருவர்.

சாவுக்கு அஞ்சி வாழ்வதைவிட, சாவதேமேல் என்பது சீசரின் புகழ்பெற்ற சொல். ஜுலியஸ் எனும் அவர் பெயரை மறையாமல் வாழ்விப்பதாக ஜுலை மாதம் இருக்கிறது.

Archives


Warning: include(archive/2009/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/may/page05.php on line 108

Warning: include() [function.include]: Failed opening 'archive/2009/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/may/page05.php on line 108

Warning: include(archive/2009/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/may/page05.php on line 109

Warning: include() [function.include]: Failed opening 'archive/2009/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/may/page05.php on line 109

Warning: include(archive/2008/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/may/page05.php on line 109

Warning: include() [function.include]: Failed opening 'archive/2008/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/may/page05.php on line 109