உலக நடப்பு உங்களுக்கு தெரியுமா?
1. கடந்த மாதம் ருஷ்யாவில் நிகழ்ந்த விமான விபத்தில் தனது மனைவியுடன் உயிரிழந்த லெச் கசின்ஸ்கி எந்த நாட்டின் குடிஅரசுத் தலைவர் ?
அ) அய்ஸ்லாந்து ஆ) கிரீன்லாந்து இ) போலந்து
2. கிரிக்கெட் விளையாட்டு ஏற்கெனவே சூதாட்டமாக உள்ள நிலையில் அண்மையில் மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு மோசடிகள் நடந்துள்ளதாக கூறப்படும் கிரிக்கெட் போட்டிகளின் பெயர் என்ன?
அ) அய்.சி.சி. ஆ) அய்.பி.எல்.டி 20 இ)கிரிக் 20 3. கடந்த ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவி பயணம் தோல்வி அடைந்து கடலில் விழுந்த இந்திய செயற்கைகோள் ராக்கெட்டின் பெயர் என்ன?
அ) ஜி.எஸ்.எல்.வி-டி.3 ஆ) இன்சாட் டி-3 இ) ஜி.சாட்-2 4. அண்மையில் இந்திய திட்டக் குழுவின் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ளவர்கள் எத்தனை பேர் ?
அ) 25.2 கோடி ஆ) 35.41 கோடி இ) 40.71 கோடி
5. அடிக்கடி வாய்த்துடுக்காகப் பேசியும், அளவுக்கு அதிகமாக அரசுப் பணத்தை நட்சத்திர உணவகங்களில் செலவழித்தும், பதவிக்கு வருவதற்கு முன்பாக கறுப்புப்பணம் குறித்து கண்டித்துப் பேசிவிட்டு பதவி ஏற்ற பின்பு தனியார் கிரிக்கெட் நிறுவன விவகாரத்தில் தலையிட்டு பொருளாதார பலன் பெற்றதாக குற்றம்சாட்டப்பெற்று அண்மையில் பதவி விலகிய மத்திய அமைச்சர் யார்?
அ) கபில் சிபல் ஆ) சசி தரூர் இ) ஜெய் ராம் ரமேஷ் மழையே!
விடைகள்
விடைகள்: 1. இ 2. ஆ 3. அ 4. இ 5. ஆ
மழை
நீ மேகங்களின் கண்ணீர்
எங்கள் தாகங்களின் தண்ணீர் !
உன்வரவு தள்ளிப் போனால்
எங்கள் வாழ்வு தளர்ந்து போகும்!
உன்அளவு குறைந்து போனால்
எங்கள் ஆற்றல் குழைந்து போகும்!
நீ இல்லா உலகம் உயிர் இல்லா சடலம்!
வருவாய்! அமுதம் தருவாய்!
இணையிலா வளங்கள் சுரப்பாய்!
உன்னுடைய களிப்பு
எங்களது செழிப்பு!
உன்னுடைய வெறுப்பு
எங்களது இறப்பு!
ஆகாயம் உன் பிறந்த வீடோ?
இவ்வுலகம் உன் புகுந்த வீடோ?
வீடுவிட்டு வீடுவர வரதட்சணை கேட்கும்
இந்தக் கொடிய உலகில்
நீ மட்டும் விதிவிலக்கோ?
நீ உயிர்களுக்குத் தேன்
உன்னைக் கண்டு குதூகலித்தேன்!
நீ எங்களது உயிர்நாடி
எங்கள் உயிர் வாழ்கிறது உன்னை நாடி!
- ந. சரவணன். 10ஆம் வகுப்பு,
பெரியார் நூற்றாண்டு நினைவு
மெட்ரிக் பள்ளி, திருச்சி
|