இது கின்னஸ் பக்கம்!
உலகின் பெரிய நாய்

இப்போது வாழும் நாய்களிலேயே உயரமான நாய் எது தெரியுமா? ( ம்ஹூம்... இரண்டு கால் நாய்களல்ல... நான்கு கால் நாய்களில்...)

ஜெய்ண்ட் ஜார்ஜ் என்ற அமெரிக்க நாய்தான்!

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் டுக்சான் பகுதியைச் சேர்ந்த டேவிட் நாசர் என்பவர் வளர்க்கும் 'கிரேட் ஜேன்' என்ற ஜெர்மன் வகையைச் சேர்ந்த இந்த நாயின் உயரம் என்ன தெரியுமா? "நடந்தால் இரண்டடி.. இருந்தால் நான்கடி.. படுத்தால் ஆறடி போதும்" என்று பாட்டு கேட்டிருக்கிறோம் அல்லவா?

நமது ஜெயிண்ட் ஜார்ஜ் இருக்கிறாரே! இவர் படுத்தால் 7 அடி 3 அங்குலம் வேண்டும். ஆம். அதுதான் இந்த நாயின் மூக்கு முதல் வால் வரையிலான நீளம்! அதாவது 87 இன்ச். இவரது உயரம் 43 இன்ச் அதாவது 3அடி 7 இன்ச். 2010 பிப்ரவரி 15-ஆம் நாளன்றைய கின்னஸின் பதிவு இது! 2009-ஆகஸ்ட் வரை உயரமான நாய் என்ற இடத்தில் இருந்தது கிப்சன் என்ற நாயாகும். குட்டி நாய் குலைத்தாலே நமக்குக் குலை நடுங்கும். ஜெய்ண்ட் ஜார்ஜ் எழுந்தால் போதும். யப்ப்ப்ப்ப்ப்பா! - சமா.இளவரசன்

Archives


Warning: include(archive/2009/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/may/page13.php on line 92

Warning: include() [function.include]: Failed opening 'archive/2009/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/may/page13.php on line 92

Warning: include(archive/2009/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/may/page13.php on line 93

Warning: include() [function.include]: Failed opening 'archive/2009/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/may/page13.php on line 93

Warning: include(archive/2008/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/may/page13.php on line 93

Warning: include() [function.include]: Failed opening 'archive/2008/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/may/page13.php on line 93