அந்திவானம்

அந்தி வான அழகைப் பார்
சிந்தும் காட்சி இன்பம் பார்
மேற்கில் மறையும் சூரியன் பார்
ஈர்க்கும் வான விந்தை பார்
மேகம் போடும் கோலம் பார்
நாகம் படம் எடுக்கும் பார்
காடும் மலையும் நகரும் பார்
ஆடும் மாடும் மேயும் பார்
தங்கம் போலே மின்னும் பார்
மங்கும் ஒளியின் மகிமை பார்
வெள்ளி ஆற்றின் ஓட்டம் பார்
அள்ளிப் பருக மறையும் பார்
வான வில்லின் வண்ணம் பார்
காணக் காண இன்பம் பார்
கட்டணம் இன்றிக் காண்போம் வா
மொட்டை மாடியில் முன்னே வா

-மு.பாலசுப்பிரமணியன், புதுச்சேரி

Bookmark and Share