விளையும் பயிர்...

பாட்டெழுதிய சிறுவர்

கடைக்குச் சென்ற பெரியம்மா வாழைப்-பழங்களை வாங்கி வந்தார். பழங்களைப் பார்த்ததும் பிள்ளைகள் பெரியம்மாவைச் சூழ்ந்து கொண்டார்கள். அனைவருக்கும் ஒவ்வொரு பழம் கொடுத்தார். கொடுத்த பிள்ளைகளுள் மூத்த பிள்ளையிடத்தில் பெரியம்மாவுக்குப் பிரியம் அதிகம். ஆகையால் மற்றவர்களைவிட அதிகம் கொடுக்க நினைத்தார். அனைத்துக் குழந்தைகளின் முன்பு கொடுத்தால் அவர்களும் அதிகமாகக் கேட்பார்கள்.

எனவே, மீதியிருந்த பழங்களை அறை-யினுள் சென்று வைத்தார். பின்பு மூத்த பிள்ளையைப் பார்த்து, அறைக்குள் இருக்கும் பழங்கள் அனைத்-தையும் உனக்காக வைத்துள்ளேன். யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சாப்பிட்டுவிடு என சைகை மொழியிலேயே பேசிச் சென்றார் பெரியம்மா.

மூத்த பையனுக்கோ ஒன்றும் புரியவில்லை. அருகிலிருந்த சின்னப் பையனோ நன்கு புரிந்து கொண்டான். யாரும் பார்க்காத நேரம் மெதுவாக அறையினுள் சென்று பழங்களை எடுத்துச் சாப்பிட்டுவிட்டான். சிறிது நேரம் சென்ற-பின்னர், மூத்த பிள்ளையிடம் பெரியம்மா, அறையினுள் உனக்காகப் பழங்கள் வைத்தேனே. எடுத்துச் சாப்பிட்டாயா என்று கேட்டார். இல்லை என்றதும், உடனே போய் எடுத்துச் சாப்-பிட்டு-விடு. தம்பிக்குத் தெரிந்தால் விடமாட்டான் என்றார்.

மூத்த பிள்ளை ஆசையாகச் சென்று பார்த்தான். பழங்களுக்குப் பதில் தோல்களே இருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டான். பெரியம்-மாவிடம் கூறினான். பெரியம்மா சின்னப் பிள்ளையிடம் விசாரணை செய்தார். நான்தான் சாப்பிட்டேன் என்றான் சின்னவன். கோபப்-பட்டுத் திட்டினார் பெரியம்மா. சின்னப் பிள்ளையின் அப்பாவின் காதுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. நடந்ததைப் பாட்டாக எழுதிக் கொடுத்து அப்பாவை வியப்பில் ஆழ்த்து-கிறான் சின்னப் பிள்ளை.

இப்படி, சிறு வயதிலேயே பாட்டெழுதி பிற்காலத்தில் தமிழ்நாடு போற்றும் தலைசிறந்த கவிஞராகத் திகழ்ந்தவர் கனக சுப்புரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட பாரதிதாசன்.

 

Bookmark and Share