விடுகதைகள்
1. திறந்தால் சீறிக் கொண்டு வருவான். ஆனால் தாகமும் தீர்ப்பான். அவன் யார்?
2. பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன?
3. ஊரைச் சுமந்தபடி உயரத்தில் பறப்பான். அவன் யார்?
4. கடித்தால் துவர்ப்பு; தண்ணீர் குடித்தால் இனிப்பு. அது என்ன?
5. தேடிக்கிடைத்த இரையை கூடிக்கூடி உண்பவன். அவன் யார்?
6. மழைக்குக் குடை பிடிக்காதவன், கடிக்க உணவுமானவன். அவன் யார்?
7. இரவில் பயமுறுத்தும் முட்டைக் கண்ணனுக்கு பகலில் கண்ணு தெரியாது. அவன் யார்?
8. கருப்பனிடம் இரண்டு கத்தி, கனமான குத்துக்கத்தி, துருப்பிடிக்காத வெள்ளைக்கத்தி அது என்ன?
9. கடுகு போல் வாயிருக்கும் கணக்கற்ற பல்வரிசை அடுக்கடுக்காய் எலும்பின்றி ஆயிரத்துப்பல் வரிசை. அது என்ன?
10. குளம்படி ஓசைக்காரன், சவாரிக்குக் கெட்டிக்காரன். அவன் யார்?
விடைகள் :
1.சோடா கலர்,
2. தேங்காய்,
3. விமானம்,
4. நெல்லிக்காய்,
5. காகம்,
6. காளான்,
7. ஆந்தை,
8.யானைத்தந்தம்
9. நத்தை,
10. குதிரை
|