கதை கேளு கணக்குப்போடு

பூக்கள் எத்தனை? வண்ணத்துப் பூச்சிகள் எத்தனை?

ஒரு குளத்தின் நடுவில் தாமரைப் பூக்கள் சில மலர்ந்து காண்பவர் கண்களைக் கவர்ந்து கொண்டிருந்தன. அந்தக் குளத்தை நோக்கி சில வண்ணத்துப்பூச்சிகள் பறந்து வந்தன. குளத்தில் மலர்ந்திருந்த தாமரைப் பூக்களின் அழகு வண்ணத்துப்பூச்சிகளின் கண்களைக் கவர்ந்தன.

தாமரைப் பூக்களின் அழகு மனதைக் கொள்ளை கொள்கிறது. பார்ப்பதற்கே பட்டு மெத்தைபோல் உள்ளது. சிறிதுநேரம் இந்தப் பூக்களின்மீது அமர்ந்து தேனருந்தி, இளைப்பாறிச் செல்லலாம் என்று ஒரு வண்ணத்துப்பூச்சி கூறியது. மற்ற வண்ணத்துப்பூச்சிகளும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டன.

ஒவ்வொரு பூவின்மீதும் ஒரு வண்ணத்துப்பூச்சி சென்று அமர்ந்தது. அப்போது ஒரு வண்ணத்துப்பூச்சிக்கு மட்டும் உட்காருவதற்குப் பூ கிடைக்கவில்லை.

எனவே, ஒரு பூவுக்கு இரண்டு வண்ணத்துப் பூச்சிகள் அமர்ந்து தேனருந்தி, இளைப்பாற முடிவுசெய்தன. ஒவ்வொரு பூவிலும் இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் அமர்ந்தன. அப்போது ஒரு பூ மட்டும் மீதி இருந்தது.

அப்படியானால், குளத்தில் இருந்த மொத்தப் பூக்கள் எத்தனை? அதில் தேனருந்தி இளைப்பாற வந்த வண்ணத்துப்பூச்சிகள் எத்தனை?

 

Bookmark and Share