பின் அட்டைக் குறிப்புகள்

படம்-1: கட்டங்கள் வளைந்து செல்லவில்லை. நேராகத்தான் இருக்கின்றன. மய்யப் பகுதியில் உள்ள கருப்புக் கட்டங்களை நோக்கினால் அதில் வெண்மையான சிறு புள்ளிகள் இருப்பதைக் காணலாம். அவை நான்கு புறத்திலிருந்தும் உள் நோக்கி இருப்பதைக் கவனிக்க முடியும். அதன் காரணமாகத்தான் மய்யப்பகுதி உள்ளிழுக்கப்பட்டிருப்பதைப் போன்று நமக்குத் தெரிகிறது..

படம்-2: சிவப்பு வட்டம் ஒழுங்கான வட்டம்தான். பார்வைக்கு ஒரு பக்கம் முழுமையானதாகவும், மறுபக்கம் வளைந்தும் இருப்பதுபோல் காணப் படும். சிவப்பு வட்டத்தின் வலது பகுதி, பெரிய வட்டத்தின் மய்யத்திலிருந்து வரும் ஆரங்கள் நெருக்கமாக இருக்கும் பகுதியையும், இடது பகுதி, ஆரங்கள் விரிந்து இருக்கும் பகுதியையும் தொட்டுச் செல்வதால் நமக்கு அப்படித் தெரிகிறது.

படம்-3: பக்கத்தில் வைத்துப் பார்த்தால் வெறும் கோடுகளாகத் தெரியும் இந்தப் படத்தை கொஞ்சம் தள்ளி வைத்துப் பார்த்தால் பெரியார் தாத்தா இளம்வயதில் தலைப்பாகை, முறுக்கு மீசையுடன் வியாபாரியாக இருந்த காலத்து நிழற்படம் தெரியும்.

 

 

Bookmark and Share