புதுசா யோசிங்க...

மூன்று குரங்குகள் அமைத்து, அதில் ஒரு குரங்கு காதுகளை மூடிக்கொண்டும், இன்னொரு குரங்கு கண்களை மூடிக் கொண்டும், மற்றொன்று வாயினை மூடியபடியும் அமைக்கப்பட்டிருக்கும்.

இவற்றின் விளக்கங்களாக, தீயவற்றைக் கேட்காதே, தீயவற்றைப் பார்க்காதே, தீயவற்றைப் பேசாதே என்று அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் கணினி யுகத்தின் தன்மைக்கேற்ப, அதிக ஒலியைக் கேட்காதே; அதிக ஒளியைப் பார்க்காதே; துரித உணவுகளைச் சாப்பிடாதே என்றும் எடுத்துக் கொள்ளலாமே!

இதன் மூலம், காதுகளும், கண்களும், உடல்நலமும் பாதுகாக்கப் படுமல்லவா?

Bookmark and Share