கதை கேளு கணக்குப் போடு
எட்டும் ஒன்பதும்

யாழினி, பூங்குழலி இருவரும் நல்ல தோழிகள். இருவரும் பள்ளி விட்டு வீட்டுக்கு வரும்போது அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் எதனையாவது கேள்விகேட்டு, பதிலினை யோசித்துச் சொல்லிக் கொண்டே நடந்து வருவார்கள்.

அப்படி ஒரு நாள் அவர்கள் இருவரும் நடந்து வரும்போது, எட்டு என்னும் எண் உனக்குத் தெரியுமல்லவா? எட்டு எட்டுகளை வைத்துக் கொண்டு 1000 என்ற எண்ணை வரவழைக்க முடியுமா, என்று கேட்டாள் யாழினி.

பூங்குழலி அதற்குப் பதில் சொல்லாமல், 9 என்னும் எண் ஓர் அதிசய எண்; அந்த அதிசயம் என்னவென்று உன்னால் சொல்ல முடியுமா? என்று தானும் ஒரு கேள்வியினைக் கேட்டுவிட்டு, யாழினியின் கேள்விக்கான பதிலினை யோசிக்கத் தொடங்கினாள்.

தோழிகள் இருவரும் பதிலினை யோசித்துக் கொண்டே நடந்தார்கள். கண்டுபிடித்தார்கள். நீங்களும் கண்டுபிடித்துவிட்டீர்கள்தானே?


Bookmark and Share