மனித இனவரலாறு 65
ஆப்ரிக்காவில் இட ஆய்வு

ஆப்பிரிக்கா கண்டத்தை இருண்ட கண்டம் என்று அய்ரோப்பியர்கள் அழைத்து வந்தனர். ஏனெனில், வடபகுதியில் சகாரா என்னும் பெரிய பாலைவனம் அமைந்து உள்ளது. இக் கண்டத்து நெடிய கடற்கரையில் கப்பல்கள் வந்து தங்குவதற்கு வசதியாகத் துறைமுகங்கள் அதிகம் இல்லை.

ஆப்பிரிக்காவின் வட பாகம் (எகிப்து) நாகரிக வளர்ச்சி அடைந்த பகுதி. மத்திய பாகமும் தென்பாகமும் காடுகள், மலைகள் அடர்ந்த பகுதியாகையால் வெளிநாட்டு மக்களால் குடிபுக முடியவில்லை.

ஹென்றி ஸ்டான்லி (Henry Stanley) அமெரிக்கச் செய்தியாளர் (Journalist) 1871இல் ஆப்பிரிக்காவை ஆய்ந்த இங்கிலாந்து நாட்டு டேவில் லிவிங்ஸ்டனைக் கண்டார்.

ஆப்பிரிக்காவின் தென் கோடியில் உள்ள நன்னம்பிக்கை முனை போர்ச்சுகல் தேசத்து வாஸ்கோடகாமாவால் 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து காடுகள், மலைகள், ஏரிகள் அடங்கிய மத்திய ஆப்பிரிக்காவிற்குச் சென்று பார்க்க வேண்டும் என்ற அவா அய்ரோப்பிய மக்களுக்கு ஏற்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் மாங்கோ பார்க் நைஜர் நதி தீரத்தையும், டாக்டர் லிவிங்ஸ்டன் என்னும் ஆங்கிலப் பாதிரி சாம்பசி நதி தீரத்தையும், நைல் உற்பத்தி இடத்தையும், ஸ்டான்லி என்பவர் காங்கோ நதி தீரத்தையும் ஆய்வு செய்தனர்.

இவர்கள் ஆய்வினால் கைத் தொழில்களுக்கு வேண்டிய மூலப் பொருள்களை ஆப்பிரிக்காவிலிருந்து பெறக் கூடுமென்றும், அக் கண்டத்திற்குத் தொழிற்சாலை சாயின்களை அனுப்பலாம் என்றும் அய்ரோப்பிய மக்களுக்கு விளங்கிற்று.

19 ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பிய நாடுகள் போட்டியிட்டு, ஆப்பிரிக்காவைப் பங்கு போட்டுக் கொள்வதில் முனைந்தன.

Bookmark and Share