அறிவியல் சோதனை
வண்ணத்தட்டு செய்து பார்
100 மி.மீ. ஆரம் கொண்டதாக ஒரு வெள்ளை அட்டை வட்ட வடிவமாக வெட்டி எடுத்துக் கொள். அதை மையத்திலிருந்து வெளிவட்டம் நோக்கி ஏழு பங்காக பிரித்துக் கொள். (43 மி.மீ. இடைவெளிகளைச் சுற்றளவுகளாகக் குறித்துக் கொண்டு பிரித்தால் ஏழு பங்குகள் வரும்)
ஒவ்வொரு பகுதியிலும் ஊதா, இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு வண்ணங்களையும் வரிசை மாறாமல் தீட்டவும்.
வட்டத்தின் நடுவே ஒரு குண்டூசியைக் குத்தி சக்கரம் போல் நன்கு சுற்றும்படியாக வைத்துக் கொள்.

குண்டூசியை நன்கு பிடித்துக் கொண்டு வட்டத்தைச் சுழலவிடு. ஏழு வண்ணங்களும் இப்பொழுது சுழன்று உன் கண்களுக்கு குழப்பத்தை உண்டாக்கும். இப்பொழுது சுழற்சியை அதிகப்படுத்து; நீ வண்ணம் தீட்டுவதற்கு முன்பிருந்த வெள்ளை அட்டையாக அது மாறிவிடும்.
|