மந்திரமா? தந்திரமா?
வெற்றுத் தாளில் எழுதாமல் எழுத்துக்கள் தோன்றுவது எப்படி?

ஒரு வெற்றுத் தாளில் பேனாவால் எழுதாமல் எழுத்துகளை வரவழைக்க முடியுமா? இது போன்ற அரிய ஒரு செயலை ஒருவர் செய்து காட்டினால் நம் மக்கள் அனைவரும் அவரை மிக சக்தி படைத்த சாமியாராக்கி விடுகின்றனர். வெற்றுத்தாளில் எழுத்துகளை வரவழைப்பது எப்படி என்று பார்ப்போம்.

ஒரு வெள்ளைத் தாளை எடுத்து அதில் நாம் வெளிச்-சத்துக்குப் பயன்படுத்தும் மெழுகுவர்த்தியால் உங்களுக்குப் பிடித்த வார்த்தைகளைத் தாளில் அழுத்தமாக எழுதிக் கொள்ளுங்கள். இப்படி எழுதிய பிறகு அந்தத் தாளைப் பார்த்தால் எழுதாத வெள்ளைத் தாள் போன்றே இருக்கும் எந்தவொரு மாற்றமும் இருக்காது. பிறகு, அந்த மெழுகுவர்த்தியால் எழுதி வைக்கப்-பட்ட வெள்ளைத்தாளைப் பட்டும் படாமலும் தீயில் காகிதம் பற்றிக் கொள்ளாதவாறு மேலே தூக்கி, காகிதம் முழு-வதும் அனல்படும்படிக் காட்டுங்கள். சற்று நேரத்தில் நீங்கள் வெள்ளைத் தாளில் என்ன எழுதினீர்களோ அந்த வார்த்தை மிகத் தெளிவாகத் தெரியும்.

-வெங்கட. இராசா, ம.பொடையூர்

Bookmark and Share