பெருமக்கள் பார்வையில் பெரியார்

சீமான்களின் சீற்றத்தாலும் சுடப்பட முடியாத அளவு, பொதுமக்களின் தொடர்பு எனும் உரம் ஏறிய உள்ளமும் உடலும் படைத்தவர்! தமிழகத்தின் தன்மானத்திற்கு வித்தூன்றிய தலைவர்.

சாக்ரடீஸ், லெனின், பிராட்லா, பெர்னாட்ஷா, ரூசோ முதலிய பேரறிஞர்களும், புரட்சிக்காரர்களும் எதற்காக உலகிலே போற்றப்படுகிறார்களோ அவ்வளவையும் ஒருங்கே திரட்டி ஓருருவில் பார்க்க வேண்டுமானால், அது பெரியார்தான்!

தந்தை பெரியார் அவர்களின் பெரும்பணி ஒரு தனி மனிதனின் வரலாறு அல்ல; ஒரு சகாப்தம், ஒரு காலகட்டம், ஒரு திருப்பம்.

உலகின் வரலாற்றில் தனது வாழ்நாளில் தனது கொள்கை வெற்றியினைப் பார்த்து மகிழும் வாய்ப்பைப் பெற்ற சமுதாயப் புரட்சியாளர் தந்தை பெரியார் மட்டும்தான்.

அறிஞர் அண்ணாசுருங்கச்சொல்லின் நாயக்கரவர்கள் (பெரியார்) தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களையும்விடப் பெரிய தியாகி என்றுதான் சொல்லவேண்டும்.

வ.உ.சிதம்பரனார்


உண்மையிலேயே தமிழ்நாட்டில் இன்றைக்குள்ள அரசியல் சமுதாய விழிப்புக்கு முக்கியக் காரணம், பெரியார் அவர்களின் தொண்டாகும். அவருடைய சேவையை அடிப்படையாகக் கொண்டது-தான் இன்றைய தினம் நாம் அனு-பவித்துக் கொண்டிருக்கும் சுதந்திர நாட்டின் வாழ்க்கையாகும்.

காமராசர்


இவர் இயற்கைப் பெரியார். நான் என் வாழ்நாளில் இதுகாறும் செய்த ஆராய்ச்சிகளுள் அகப்படாத பல பெரியார் கருத்துகளும், அரிய யோசனைகளும் இப்பெரியாரின் இயற்கையறிவிலே உதித்திடக் காண்கிறேன்.

தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்_இது பெரியாருக்குத்தான் பொருந்தும்.

- திரு.வி.கலியாணசுந்தரனார்.வாசற்படி நிலை நெற்றியில் தட்டுகிறது என்றால், தலை வணங்குவார். அதைத் தவிர, அநியாயத்திற்குத் தலைவணங்கும் தலை அல்ல அது... இதை அவசரப்பட்டு, சந்தர்ப்பவாதம், கோழைத்தனம் எனக் கூறக்கூடாது. அவருக்கு லட்சிய வெற்றிதான் குறி. அதற்காக, விலகுவார்; வளைவார்; சிரிப்பார்; சீறுவார்... குறியை நோக்கியே நடை இருக்கும்.

ப.ஜீவானந்தம்


சீரார் ஈ.வெ.ரா. அவர்களுக்கும் எனக்கும் உள்ள அகநகும் நட்பு யார் என்ன சொன்னபோதிலும் என்றும் குறையாது.

சி.இராஜகோபாலாச்சாரியார்


பெரியார் அவர்கள் விடுதலைக்கு மட்டுமன்றி, சுயமரியாதைக்காகவும் போராடினார். இதுபற்றிய அவரது கருத்து இன்றைக்கு மட்டும் பொருந்து-பவை அல்ல; நாளைக்கும் அதன்பின் வரும் காலம் அனைத்துக்கும் பொருந்து-பவை. இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து உலகத்திற்கும் அவை பொருந்துபவை ஆகும்.

வி.பி.சிங்அட்டையில்....

சுட்டியால் வரைந்த பெரியார் படம்

ஓவியர் வே.ஜீவநந்தன் படித்தது வழக்குரைஞர் பணிக்கு! ஆனால், ஆர்வம் இவரை ஓவியராகவும், வடிவமைப்பாளராகவும் பணியாற்ற வைத்திருக்கிறது. நீங்கள் அட்டையில் காணும் தந்தை பெரியாரின் ஓவியம், முழுக்க கணினியிலேயே வரையப்பட்டது.அதாவது கணினியில் உள்ள சுட்டியை (mouse) மட்டுமே பயன்படுத்தி இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார் ஓவியர் ஜீவா. நமது பிஞ்சுகள் பலரும், கணினியில் - இல் படம் வரையும் திறன் பெற்றவர்கள் தானே... நீங்களும் முயலலாமே!

Bookmark and Share