கரிநாக்கு - படம்: வாசன்,

கோவை பி.என்.பாளையத்தில் ஒரு வீட்டில் தினேஷ், பிரியா இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். தாயார் வேணி பரிமாறிக்கொண்டிருந்தார்.

தன் தாயாரைப் பார்த்து தினேஷ் பேசுகிறான்.

ஏம்மா கரிநாக்குன்னா என்னம்மா?

கரிநாக்கா? யார்ரா, சொன்னது?

எங்க எல்லாருக்கும் தெரியும். 8-பி வகுப்பில குணான்னு ஒரு பையன். அவனுக்குத்தான் கரி நாக்காம்.

ஆமாமா. எனக்கும்கூட என் பிரண்டு மதுமிதா சொன்னா... கரிநாக்குன்னா என்னம்மா?

அதெல்லாம் ஒன்னுமில்ல... பேசாம சாப்பிடுங்க!

போம்மா... யாரக் கேட்டாலும் சொல்ல மாட்டோங்கிறாங்க. உங்ககிட்ட கேட்டுட்டு வர்றேன்னு ஜெயஹரிப்பிரியா, மதுமிதாகிட்ட சத்யம் பண்ணிட்டு வந்திருக்கேன். நானுந்தான் கார்த்திக்கும், திருவும் கரிநாக்குன்னா என்னன்னு எங்கிட்ட கேட்டாங்க. நானும் நாளைக்குச் சொல்றேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.

அதெல்லாம் உங்களுக்குப் புரியாது. வாயை மூடிட்டு சாப்பிடுங்க.

 

வாயை மூடிட்டு எப்படிம்மா சாப்பிடறது?

 

நக்கலு... ம்... முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள பெரிய மனுசன் மாதிரி. சாப்பிட்டு, உட்கார்ந்து படிங்க.

 

உங்க மாமாவுக்கு என்ன நோக்காடு. சூடி ழுடின. சூடி ழுடின-ன்னு சொல்லுவாரு.

அதெல்லாம் இருக்கட்டும்மா..
கரிநாக்குன்னா என்னம்மா....

சிலரோட நாக்குல கருப்பா இருக்கும். அவங்க எதுனாச்சும் சொன்னா, அப்படியே பலிக்குமாம். அவ்வளவுதான்.

நிஜமாவே கரிநாக்கு உள்ளவங்க சொன்னா பலிக்குமாம்மா...

எனக்குத் தெரியாது. சிலர் அப்படி நம்புறாங்க. அவ்வளவுதான். சட்டு, புட்டுன்னு சாப்பிட்டு முடிங்க.

தினேஷ்.... கரிநாக்குன்னா என்னன்னு அம்மா சொன்னாங்களா?

அவங்க சரியா சொல்லலடா... ஏதோ நம்பிக்கைன்னு சொன்னாங்க. அவ்வளவுதான்.

டேய்... உனக்கு ஒன்னு தெரியுமா? நம்ம மோகன் இருக்கானே அவனுக்கு இங்கிலீஸ் சரியா வராதுல்லே. அவன் குணாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்தா போதும்.....

இங்கிலீஸ்ல பாசாயிடுவேன்னு சொல்லிட்டு திரியறான்.

 

Sample Tags

நான் ஒரே, ஒரு தலைவரைத்தான் கண் டேன்; அவரைத்தான் என் தலைவராகக் கொண் டேன். அவர்தாம் பெரியார்; அவரைவிட்டு அகத்தால். ஒருபோதும் பிரிந்தது கிடையாது என்று உவகையுடன் அறிவித்தார் அண்ணா. 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் காஞ்சிபுரத்தில் எளிய நெசவாளர் குடும்பத்தில் அண்ணா பிறந்தார். இவரது தந்தையார் பெயர் நடராஜன். தாயார் பெயர் பங்காரு அம்மாள். வளர்ப்புத் தாயார் பெயர் இராசாமணி அம்மையார் (தொத்தா)

இளம் வயதிலேயே கல்வி கற்பதில் ஆர்வம் மிகக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் சிறிய பிள்ளைகளுக்கும், நீண்ட முடி வளர்த்து கொண்டை போட்டு விடுவதுதான் பழக்கம். ஆனால், அண்ணாவுக்கோ கிராப் வைத்துக் கொள்ள ஆசை. அவர் எப்படி கிராப்புக்கு மாறினார் என்று அவரே கூறுகிறார் கேளுங்கள். சிறுவயதில் எனக்கு நீண்ட முடி வளர்த்துப் பின்னலிட்டு, காதில் கடுக்கன் போட்டுத்தான் பள்ளிக்கு அனுப்புவார்கள். எனக்கு கிராப்பு வைத்துக் கொள்ள ஆசை. இதை தொத்தா விடம் (வளர்ப்புத் தாய் இராசாமணி அம்மை யார்) கேட்க பயம். ஒரு முறை ஆங்கிலத்தில் 100க்கு 90 மார்க் வாங்கிருந்தேன். அதைக் கொண்டு போய் தொத்தாவிடம் காண்பித்து என் கிளாசில் எல்லோரும் கிராப்பு வைத்திருக் கிறார்கள். நானும் வைத்துக்கொள்கிறேன் தொத்தா என்று கேட்டேன், சம்மதித்தார்கள் என்று தான் கிராப்புக்கு மாறிய கதையை அண்ணா கூறியுள்ளார்.

Archives

?பெரியார் பிஞ்சு

2008