• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

விண்ணியல்

2022_dec_13
அறிவியல்டிசம்பர் 2022

நிலவில் குடியேறும் நாள் தொலைவில் இல்லை?

சரவணன் ராஜேந்திரன்

மனிதர்களை நிலவிற்குகொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் வெற்றி.

நாம் படித்திருப்போம் -_ 1969_-இல் நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய நிகழ்வை,,,,

அவர் ஒரு விண்வெளி ஆய்வாளர். அவர் நிலவை நோக்கிச் சென்றது, நிலவில் இறங்கியது எல்லாமே ஒரு ஆய்வுப்பணி நோக்கத்திற்காகத் தான். இப்போது சுமார் 50 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்று நவீன உலகம் பெரிதும் மாறிவிட்டது. அதே போல் மக்கள் தொகையும் 800 கோடியைத் தொட்டுவிட்டது.
இனி மனிதர்கள் புவிக்கு அண்மையிலுள்ள கோள்களுக்குச் சென்று குடியேறும் நிலை ஏற்படும். இப்படி கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே பேசப்பட்டு வந்தது.

அது தொடர்பாகத்தான் இந்த விண்வெளி ஆய்வு மய்யம், அங்கு பல ஆண்டுகளாக தங்கி ஆய்வு செய்யும் விண்வெளி வீரர்கள், நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் இறங்கியது என பல வெற்றிகரமான ஆய்வுகள் நடந்தன.

இப்போது ஆய்வுப்பணிகள் மட்டுமின்றி பயணிகள் விமானத்தில் அனைவரும் பயணம் செய்வது போல, விண்வெளியிலும் பயணம் செய்து நிலவை அடைந்து அங்கு மனிதக் குடியேற்றத்தை ஏற்படுத்தும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்தச் சோதனையின் இறுதியாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் நிலவுக்கு மனிதனை அனுப்பும் ‘ஆர்ட்டெமிஸ்-1’ திட்டத்தின் விண்கலம் வெற்றிகரமாகத் தன் சோதனை ஓட்டத்தை நிறைவு செய்தது.

நாசாவின் ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (NASA SLS) ராக்கெட் மூலம் ஓரியான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மய்யத்தில் இந்தச் சோதனை நவம்பர் 16 அன்று நடத்தப்பட்டது.

ஏற்கெனவே ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தலா ஒரு முறை என ஏற்கெனவே இரண்டு முறைகள் திட்டமிடப்பட்டு பிறகு இந்தச் சோதனை தள்ளிவைக்கப்பட்டது.

இம்முறை சோதனை ஏவுதலில் மனிதர்கள் இல்லை என்றாலும், 100 மீட்டர் உயரமுள்ள இந்த ராக்கெட் வருங்காலங்களில் மனிதர்களை நிலவுக்குக் கொண்டுசெல்லும் திட்டங்களில் பயன்படுத்தப்படும்.

ஆர்ட்டெமிஸ்-1, சந்திரன் ஆய்வில் ஒரு புதிய அத்தியாயத்தின் சகாப்தத்தின் தொடக்கமாக இருக்கும். ஆர்டெமிஸ்-1, மனிதனை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியின் முதல் படி.

1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக நிலவில் மனிதர்களை தரையிறக்கும் நாசாவின் திட்டம்தான் இந்த ஆர்ட்டெமிஸ் மி. இதை அடைய புதிய விண்கலத்தையும் அதை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல புதிய ராக்கெட்டையும் உருவாக்கியுள்ளனர்.

ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் உள்ள அடிப்படையான சாதனம் அதன் ராக்கெட். இது எஸ்.எல்.எஸ்(SLS) எனப்படும் விண்வெளிக்கு ராக்கெட்டை செலுத்தும் கட்டமைப்பு (Space Launch System) ஆகும். இது புவிக்கு அப்பால் ஒரு விண்கலத்தை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1960 மற்றும் 70களில் அப்பல்லோ நிலவுப் பயணங்களுக்கான ராக்கெட் சாடர்ன்- 5 (Saturn V) ராக்கெட்டுக்குப் பிறகு எஸ்.எல்.எஸ் மிகவும் ஆற்றல் வாய்ந்த ஏவூர்தி (Rocket) ஆகும்.

ஏவுதளத்தில் ஆர்டெமிஸ் மி ராக்கெட் 98 மீ (320 அடி) உயரத்தில் நிற்கும். இது பிரிட்டனில் பிக் பென் கடிகாரக் கோபுரத்தை விட இரண்டு மீட்டர் அதிக உயரம் கொண்டது.

சாட்டர்ன் ராக்கெட்டுகளைப் போல, இது பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டைப் பூமியிலிருந்து செலுத்தத் தேவையான அழுத்தத்தை ராக்கெட் பூஸ்டர்கள் கொடுக்கின்றன. ஒரு நொடிக்கு ஆறு டன் கன எரிபொருளைப் பயன்படுத்துகிறது. இரண்டு நிமிடங்களில் அவை வெளியேற்றப்பட்டு மய்ய நிலை ராக்கெட் பின்னர் எஸ்.எல்.எஸ். பூமியின் சுற்றுப்பாதையில் தள்ளும்.

இதன் மிகப்பெரிய எரிபொருள் கொள்கலன் மைனஸ் – 180 செல்சியசை விட குளிரான திரவ வாயுவால் நிரப்பப்படுகிறது. இது கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் லிட்டர் (440,000 கேலன்கள்) திரவ ஹைட்ரஜனையும் 740,000 லிட்டர் (160,000 கேலன்கள்) திரவ ஆக்ஸிஜனையும் எட்டு நிமிடங்களில் எரித்துவிடும். எரிபொருள் வெளியேறியவுடன், மய்ய நிலை பிரிந்து, விரைவில் அடுத்த அடுக்கு இயந்திரங்கள் ஓரியான் கேப்சூலை சுற்றுப்பாதையில் செலுத்துகின்றன.
இப்போது ஓரியான் விண்கலம் சந்திரனுக்குச் செல்ல தயாராகி உள்ளது.

இந்த பயணத்திற்கு சில நாள்கள் எடுக்கும். மேலும் ஓரியான் 70,000 கிமீ (40,000 மைல்கள்) தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் செல்ல அழுத்தம் கொடுத்து முன்னோக்கி (Thrusters) செலுத்தும் முன்பு, மேற்பரப்பில் இருந்து 100 கிமீ (60 மைல்) அருகில் வரும். அந்தப் பயணத்தைத் தொடங்க இறுதியாக ஓர் அடுக்கு உள்ளது. (Interim Cryogenic Propulsion Stage (IPCS))

அய்.சி.பி.எஸ். பூமியைச் சுற்றி ஓரியானை விரைவுபடுத்தி, நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி அதை விண்வெளிக்குத் தள்ளும். இந்தச் செயல்பாடு (Translunar injection) என்று அழைக்கப்படுகிறது. ஓரியான் சந்திரனுக்குச் சென்றவுடன் அய்.சி.பி.எஸ் பிரிந்துவிடும்.

ஓரியான் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது: (1) காப்ஸ்யூல் (மனிதர்கள் அமரும் பகுதி) (2) சர்விஸ் மாட்யூல் இயந்திரம். இரண்டும் சேர்ந்து சுமார் 8 மீட்டர் (26 அடி) நீளம் இருக்கும்.

இந்த சர்வீஸ் மாட்யூல் இயந்திரத்தின் கணினிப் பகுதி அய்ரோப்பிய விண்வெளி முகமையால் கட்டமைக்கப்பட்டுள்ளது. விண்கலத்தை இயக்குவதற்கான வழிகாட்டும் கணினிகளையும் மற்றும் கருவிகளையும் இது கொண்டுள்ளது.

கேப்ஸ்யூல் என்பது மனிதர்கள் இருக்கும் இடம். எதிர்காலப் பயணங்களில் ஓரியான் நான்கு விண்வெளி வீரர்களை நிலவுக்கு அழைத்துச் செல்லும். ஆனால் இப்போது முதல் கட்டமாக ஆர்ட்டெமிஸ் மிஇல் சோதனை பொம்மைகள் ஏற்றப்பட்டுள்ளன. அப்பல்லோவை விட இதன் உள்ளே இருக்கும் இடம் பெரியது. இது ஒரு நடுத்தர அளவிலான வேனின் அளவைக் கொண்டது.

அதிகபட்சமாக 21 நாள்கள் வரை குழுவினர் கேப்ஸ்யூலில் தங்கலாம்.

இந்த முதல் ஆர்ட்டெமிஸ் திட்டம் மனிதர்கள் இல்லாமல் 42 நாள்களுக்குச் செயல்படும். நாசா கலத்தில் விண்வெளி வீரர்கள் இருப்பதற்கான வரம்புகளுக்கு அப்பாலும் இதை அழுத்தத்திற்கு உள்ளாக்கி ஓரியானை சோதனை செய்ய நாசா விரும்புகிறது.

எல்லாம் சீராக நடந்தால், ஆர்டெமிஸ்- மிமி இதேபோலத் தொடரும். ஆனால் அப்போது விண்வெளி வீரர்கள் குழுவினருடன் செல்லும்.

அடுத்த ஆர்ட்டெமிஸ் பயணத்தில் சுற்றுப்பாதையில் இருக்கும் விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து மனிதர்கள் இதுவரை செல்லாத தூரத்தில் இருப்பார்கள்.
ஓரியான் விண்கலத்தின் நோக்கம் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் விண்வெளி வீரர்களைக் கொண்டு செல்வதுதான். ஆனால் அது அங்கு தரையிறங்குவதற்கான வகையில் வடிவமைக்கப்படவில்லை.

எதிர்காலப் பயணங்களில், விண்வெளி வீரர்கள் கலத்தின் சுற்றுப்பாதையில் உள்ள தரையிறங்கும் வாகனத்திற்கு மாற்றப்பட்டு மேற்பரப்பிற்குக் கொண்டு செல்லப்படுவார்கள்.

நாசாவுக்காக இந்தத் தரையிறங்கும் வாகனம் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் கட்டமைக்கப்படுகிறது. கேட்வே எனப்படும் நிலவைச் சுற்றி வரும் முதல் விண்வெளி நிலையத்திற்கான திட்டங்களும் உள்ளன.

எதிர்காலத்தில், ஓரியான்’ கேட்வேயுடன் இணைக்கப்-பட்டு விண்வெளி வீரர்கள் தரையிறங்கும் கலத்துக்கு (Landing Craft)  மாற்றப்படுவார்கள். நிலவின் மேற்பரப்பில் அவர்களின் பணி முடிந்த பின், அவர்கள் மீண்டும் விண்வெளி நிலையத்திற்கு மாற்றப்பட்டு மீண்டும் ஓரியான் மூலம் புவிக்கு வருவார்கள்.

புவிக்குத் திரும்புவதற்கு, ஓரியான் நிலவைச் சுற்றி வேகத்தை அதிகரித்து, புவியை நோக்கிப் பாயும்.

புவியை நெருங்கும் போது, கேப்ஸ்யூல், சர்விஸ் மாட்யூலில் இருந்து பிரிகிறது. கேப்ஸ்யூல் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது ஒலியை விட 32 மடங்கு வேகத்தில் பயணமாகும். வளிமண்டலம் கேப்ஸ்யூலின் வேகத்தைக் குறைக்கும். ஆனால் வெப்பத் தடுப்பான் தோராயமாக 2,700 செல்சியஸ் (5,000 பாரன்ஹீட்) வெப்பநிலையில் இருந்து குழுவினரைப் பாதுகாக்க வேண்டும். இரண்டு மில்லியன் கிலோமீட்டர்கள் (1.3 மில்லியன் மைல்கள்) பயணம் செய்த பிறகு, கேப்ஸ்யூல் இறுதியாக பசிபிக் பெருங்கடலில் விழும்.

அமெரிக்கக் கடற்படையின் உதவியுடன், நாசா ஓரியான் கேப்சூலை மீட்டெடுத்து, தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் பணியை வரும் மாதங்களில் மேற்கொள்ளும்.

2024ஆம் ஆண்டில் நான்கு புதிய விண்வெளி வீரர்களுடன் SLS ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் ஆர்ட்டெமிஸ் மிமி திட்டத்திற்காக கேப்ஸ்யூலின் பாகங்கள் மீண்டும் பயன்படுத்தப்படும். பின்னர் 2025ஆம் ஆண்டில், ஆர்ட்டெமிஸ் மிமிமி நாசாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மனிதர்களை சந்திரனின் மேற்பரப்புக்குக் கொண்டு செல்லும் பணியை நிறைவு செய்யும்.

 

31
கோமாளி மாமா-32கோமாளி மாமா-325th December 2022
வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம்5th December 2022வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம்

மற்ற படைப்புகள்

9
அறிவியல்செப்டம்பர் 2024பிஞ்சு 2024
2nd September 2024 by வினோத் ஆறுமுகம்

அறிவின் விரிவு – 2 : A1 டாக்டர்

Read More
2019_dec_a36
அறிவியல்டிசம்பர் 2019
28th November 2019 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : அழகிய நாய்க்குட்டி

Read More
2020_jan_v13
அறிவியல்ஜனவரி-2020
26th December 2019 by ஆசிரியர்

அறிவியல் படக்கதை – அய்ன்ஸ்ரூலி

Read More
2019_dec_a9
அறிவியல்டிசம்பர் 2019
27th November 2019 by ஆசிரியர்

அறிவியல் படக்கதை : அய்ன்ஸ்ரூலி

Read More
2021_nov_v30
அறிவியல்நவம்பர் 2021
2nd November 2021 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி – அறிவியல் படக்கதை : ஒளிரும் உயிர்கள்

Read More
2021_may_m6
கணக்கும் இனிக்கும் (தொடர்)மே 2021
6th May 2021 by ஆசிரியர்

எப்படி கூட்டினாலும் 15 வரனும்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p