• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by விழியன்

அதிசய மலர் கதம்பழகி

2022_dec_42
கதை கேளு கதை கேளுடிசம்பர் 2022

விழியன்

மூச்சு வாங்கியபடி குளத்தின் அருகே சென்றுவிட்டது குட்டி யானை சிரா. குட்டி யானை சிராவிற்கு அந்தக் குளம் என்றால் ரொம்பவே பிடிக்கும். அந்தக் குளம் காட்டின் நடுவில் இருக்கின்றது. சின்னஞ்சிறு குளம்தான். நிறைய செடிகளும் கொடிகளும் பூக்களும் நிறைந்து இருக்கும். சிரா அந்தக் குளத்திற்குள் இறங்காது. ஆனால், குளத்தின் ஓரத்தில் நின்று தன் தும்பிக்கையால் தண்ணீர் எடுத்து, பூக்களின் மீது மழைபோலப் பொழியும். செடிகள் மகிழும். குட்டித் தவளைகள் குதித்து ஓடும். வெட்டுக்கிளிகள் சிதறி அடித்துக்கொண்டு ஓடும். ஒரு நாள் குளத்தில் இருந்த பூ ஒன்று சிராவிற்கு நன்றி சொன்னது.
“குட்டி யானையே ரொம்ப நன்றி. இது வெயில்காலம். மழை பொழிந்தால்தான் என் மீது தண்ணீர் பொழியும். எனக்கோ ஒரே ஒருநாள்தான் வாழ்க்கை. நல்லவேளை உன்னால் தண்ணீர் என்மேல் விழுந்துவிட்டது”

“அட… நான் நாள்தோறும் இப்படித்தான் செய்வேன். இனியும் செய்வேன்.” அன்றில் இருந்து பிறக்கும் ஒவ்வொரு பூவுக்கும் சிரா அங்கே வருவது நன்றாகத் தெரியும். தண்ணீரைப் பீய்ச்சி அடித்துவிட்டு, பூக்களிடம் “உங்க பெயர் என்ன?” என்று கேட்கும். அதுவே நாள்தோறும் வழக்கம். இன்றும் அப்படித்தான். ஆனால் ஒருவிதமான பதட்டம் இருந்தது. தண்ணீர் ஊற்றியது; பூ மகிழ்ந்தது. பெயரைக் கேட்டது. அந்தப் பூ மஞ்சளும் நீலமும் கலந்த நிறத்தில் இருந்தது. பார்த்தாலே மனம் அமைதியாகும் அளவிற்கு சாந்தமாக இருந்தது.

“கதம்பழகி”

“அருமையா இருக்கே!”

“ஏன் சிரா பதட்டமா இருக்கீங்க?”

“காட்டுல ஒரு சிங்கம் இருக்கு, அதுகிட்ட மட்டும் பத்திரமா இருக்கணும்னு அப்பா சொல்லி இருக்காங்க. அந்தச் சிங்கம் என்னைத் துரத்திக்கிட்டு வருது”
“அச்சச்சோ”

“அடேய் பூவே, என்னை இப்படிப் பயமுறுத்தாதே. நானே பயத்துல இருக்கேன்”

யானையின் கால்களைப் பார்த்தது கதம்பழகி. ஆம், அதன் கால்கள் வெடவெடவென ஆடிக்கொண்டு இருந்தன. என்ன செய்யலாம்னு யோசனை செய்துகொண்டு இருந்தது. இரண்டு குரல்கள் தூரத்தில் இருந்து கேட்டன.

“சிரா, அந்தச் சிங்கம் பக்கத்துல வந்துடுச்சு”. ஒன்று குட்டிக் குரங்கு கும்குமாக்கியின் குரல். மற்றொன்று குட்டிக் கரடி கண்ணாத்தாளின் குரல். அவை இரண்டுமே குளத்தின் அருகே இருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டன. “மேல வா சிரா…” எனக் கத்தியது கண்ணாத்தாள். மூவருமே நண்பர்கள். ஒன்றாக விளையாடுவார்கள். கதம்பழகி சில நொடிகள் யோசித்தது.

“சிரா, என் மேல ஏறிக்கோ” என்றது.

மரத்தில் இருந்த கும்குமாக்கி குரங்கும், கரடி கண்ணாத்தாளும், சிராவும் விழித்தார்கள். குளத்தில் கால் வைக்காமல் வெளியே நிற்பதற்குக் காரணமே அங்கிருக்கும் தண்ணீர் வெளியேறிவிடும் என்றுதான். இதில் பூ மீது கால் வைக்கச் சொல்கின்றதே என யோசித்தது சிரா. அதே வேளையில் கதம்பழகி மெல்ல தலை சாய்த்தது.

சரி, வெச்சுத்தான் பார்ப்போமே என முன்னங்காலை எடுத்து பூ மீது வைக்கச் சென்றது. சர்ர்ரென சின்னப்பூ மிகப்பெரிய பூவாகி அதன் தண்டு நீண்டு சிராவினை மேலே எழுப்பிவிட்டது. குளத்தில் இருந்து ஒரு நீண்ட மரம் வளர்ந்து இருப்பதுபோலத் தெரிந்தது. சிரா மேலே செல்லவும் சிங்கம் வரவும் சரியாக இருந்தது.

சிங்கம் யானையைத் தேடியது. கர்ஜித்தது. காணாமல் போகவே இன்னும் கோபம் கொண்டது. ஆனால் நண்பர்கள் இருவரும் பதட்டத்தில் இருந்தார்கள். ஆமாம், சிராவின் வால் நன்றாகத் தெரிந்தது. வாயைத் திறந்தால் சிரா மாட்டிக்கொள்ளும். சிங்கம் மேலே பார்த்தது. மரத்தின் மீது சத்தம் சலசலப்பு வருதே என்றும் பார்த்தது. திரும்ப குளத்தினைப் பார்த்தது.

“செடியின் தண்டு ஏன் இவ்வளவு பெரியதாக என்று கூடவா யோசிக்காது”

“நாம இருப்பதுகூட அதுக்கு தெரியல”

குட்டிச் சிங்கம் அங்கிருந்து கொஞ்ச நேரத்தில் நகர்ந்தது. வெகு தூரத்திற்குச் சென்றதும் கதம்பழகி மேலிருந்து சிராவைக் கீழே இறக்கியது. சிரா நன்றி சொன்னது. நண்பர்களும் நன்றி சொன்னார்கள். அனைவர் மீதும் தண்ணீரை தன் தும்பிக்கையால் பீய்ச்சி அடித்தது.

இதனிடையில் குட்டிச் சிங்கத்தின் அம்மா அதனிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தது- _ “புல்புல், இந்தக் கீரையை மட்டும் சாப்பிடு கண்ணு” என்று.

22
நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன்நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன்5th December 2022
மருத்துவக் குறிப்பா?5th December 2022மருத்துவக் குறிப்பா?

மற்ற படைப்புகள்

2019_dec_a7
கதை கேளு கதை கேளுடிசம்பர் 2019
27th November 2019 by விழியன்

கடைசி நொடிகள்

Read More
2020_may_v31
கதை கேளு கதை கேளுமே 2020
9th May 2020 by விழியன்

ரீப்பரி ரீப்பரி ரிபப்பரி

Read More
2020_sep_v6
கதை கேளு கதை கேளுசெப்டம்பர் 2020
1st October 2020 by விழியன்

யானைக்கு விருந்து

Read More
2022_dec_19
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th December 2022 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2017_feb_pinju20
கதை கேளு கதை கேளுபிப்ரவரி
3rd February 2017 by கொ.மா.கோ.இளங்கோ

“அக்கா… அக்கா… நீநிகா’’

Read More
2022_dec_13
அறிவியல்டிசம்பர் 2022
5th December 2022 by ஆசிரியர்

விண்ணியல்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p