• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மருத்துவக் குறிப்பா?

2022_dec_36
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்

ஃபார்வேர்டு மெசெஜுக்கு சொல்லுங்க நோ

“குழந்தைகளின் வளர்ச்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அவர்களுக்கான சத்தான சமச்சீர் உணவு. ஆனால் இந்தியா இத்தகைய உணவுகள் கிடைக்காமல் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஏராளம். 36% குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ற உயரம் இல்லாமலும், 19% குழந்தைகள் தங்கள் உயரத்திற்கேற்ற பருமன் இல்லாமலும் இருக்கிறார்கள்.

6 முதல் 59 மாதம் வரையிலான குழந்தைகளில் 67% பேர் இரத்த சோகையுடன் இருக்கிறார்கள். வசதி படைத்தோர், வசதியற்றோர் என பலதரப்பட்ட குழந்தைகளும் இதில் அடங்குவர்.

உரிய ஊட்டச்சத்து கிடைக்காத காரணத்தால் அவதியுறும் குழந்தைகளும், அதற்கான வாய்ப்பிருந்தும் உண்ணாத குழந்தைகளும் இதில் உள்ளனர்.
பிஞ்சுகளுக்குத் தாய்ப் பால் வழங்குவதன் அவசியத்தைப் பெற்றோர் உணர்ந்திட வேண்டும். முதல் 6 மாதத்திற்கு தண்ணீர், பால் உள்பட வேறு எதுவும் குழந்தைக்குத் தேவையில்லை; தேவையான அனைத்தும் தாய்ப்பாலில் உள்ளது என்கிறார்கள் மருத்துவதுர்கள்.

அதே நேரம் நோய் எதிர்ப்பு சக்திக்கும் தாய்ப்பால் மிகவும் முக்கியமானதாகும். பிற உணவுகள் கொடுக்கத் தொடங்கிய பின்னும் தாய்ப்பால் மிகவும் முக்கியமாகும்.  கோவிட் காலத்திற்குப் பிறகு உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி தொடர்பாக நாம் கவலை கொண்டிருக்கிறோம் இல்லையா? இதை மேம்படுத்த ஊட்டச்சத்தும் மிகவும் அவசியமாகும்” என்று யுனிசெப் அமைப்பின் சார்பில் டேராடூனில் நடைபெற்ற கிரிட்டிகல் அப்ரைசல் ஸ்கில்ஸ் பயிற்சி முகாமில் பங்கேற்ற ஊட்டச்சத்து நிபுணரும் யுனிசெப்பின் குழந்தைகள் மேம்பாட்டு வல்லுநருமான காயத்ரி சிங் தெரிவித்தார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், தாமஸ் ராய்ட்டர்ஸ் பவுண்டேசனும் இணைந்து செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்வதற்காக இந்தப் பாடத்தை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், “இத்தகைய ஊட்டச்சத்து கிடைக்கப் பெறாத குழந்தைகளுக்காகத் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்திருக்கும் காலை உணவுத் திட்டம் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. குறைந்த அளவே உண்ணும் வகையில் தான் சிறிய குடல் குழந்தைகளுக்கு இருக்கிறது. அதனால் தான் அடிக்கடி உணவு உண்டாலும் கூட, அடிக்கடி பசி உணர்வு வருகிறது. ஆனால், வறுமையின் காரணமாக காலையில் உணவு உண்ணாமல் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசின் திட்டம் எத்தனை முக்கியமானது என்பதை அனைவரும் அறிவார்கள்” என்றும் எடுத்துக் கூறினார்.

மருத்துவத் துறை சார்ந்து செய்திகளில் வரும் பல்வேறு பொய்ச் செய்திகளையும், புரளிகளையும் உரிய மருத்துவர்கள் மூலம் தெளிவுபெற்று ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்பதற்கான அடிப்படைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. யூ டியூபில் வருகிறது; வாட்ஸ் அப்பில் வருகிறது என்று கண்ட கண்ட கசாயங்களைக் குடிப்பதும், நோய்த் தடுப்பூசிகளை மறுப்பதும் எத்தகைய கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் வல்லுநர்கள் எடுத்துரைத்தனர்.

பிஞ்சுகளே, மருத்துவம் தொடர்பாக வரும் எந்தச் செய்தியையும், கற்றுத் தேர்ந்த மருத்துவரிடம் விளக்கம் பெற்றே நீங்களும் பிறருக்குச் சொல்ல வேண்டும். பெரியோர்கள் எதையோ ஃபார்வேர்டு செய்து கொண்டேயிருக்கும் வியாதிக்கு நீங்களும் ஆட்பட்டுவிடக் கூடாது!

– ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

 

21
அதிசய மலர் கதம்பழகிஅதிசய மலர் கதம்பழகி5th December 2022
துணுக்குச்சீட்டு5th December 2022துணுக்குச்சீட்டு

மற்ற படைப்புகள்

2022_sep_17
செப்டம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
7th September 2022 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2022_dec_18
டிசம்பர் 2022பாசத்திற்குரிய பேத்திபேத்திபேரன்களே
5th December 2022 by ஆசிரியர்

படித்தீர்களா பெரியார் தாத்தா

Read More
ஜூலை 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
16th July 2024 by ஆசிரியர்

குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டம்

Read More
2020_jul_v33
ஜூலை 2020பிஞ்சுகள் பக்கம்
30th July 2020 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் – தீப்பெட்டி தந்திரம்

Read More
2023_jan_38
ஜனவரி 2023பிஞ்சுகள் பக்கம்
6th January 2023 by ஆசிரியர்

செயத்தக்க… ப.மோகனா அய்யாதுரை

Read More
இலக்கணம்டிசம்பர் 2022
6th December 2022 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்-38

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p