• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

வாசக நேயர்களே! ஊன்றிப் படித்து ஒத்துழைப்புத் தாருங்கள்!

2023_jan_2
ஜனவரி 2023பிஞ்சுகள் பக்கம்

ஆசிரியரின் வேண்டுகோள் அறிக்கை!

நாள்: 27.12.2022 ஆசிரியர், பெரியார் பிஞ்சுபல புதிய அம்சங்களும் இடம் பெறும்!கழகப் பொறுப்பாளர்களே,  பகுத்தறிவாளர்களே, இன உணர்வாளர்களே, முற்போக்காளர்களே உங்கள் ஆதரவுமூலம் அறிவாயுதங்களைப் பரப்ப ஒத்துழைப்புத் தாருங்கள்!ஒத்துழைப்பை நம்பி, உங்கள் தோழர்களாகிய நாங்கள் இந்தப் பணியில் இறங்குகிறோம் – வெற்றியாக்குக!எனவேதான், முன்பு இருந்ததைவிட நட்டம் அதிகமானதைக் கணக்கிட்டு, தணிக்கை அதிகாரிகள், கழகத்தவர் எல்லாம் கலந்து ஆலோசனை செய்து,  ‘உண்மை’, ‘மாடர்ன் ரேசனலிஸ்ட்’, ‘பெரியார் பிஞ்சு’ ஏடுகளுக்குக் கீழ்க்காணும் வகையில் 2023 ஜனவரி முதல் தனி இதழ், சந்தாத் தொகைகளை உயர்த்தி இருப்பதை தவிர்க்க இயலாத அறிவிப்பாகத் தங்களுக்கு அறிவிக்கின்றோம்.தாங்கொணாத நட்டம் என்பதால், பல பிரபல நாளேடுகள்கூட கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் மூடப்பட்டன. ஆனால், நமது ஏடுகளை நாம் நிறுத்தவே இல்லை என்பதையும் அறிவீர்கள்.

நாம் வியாபாரத்திற்காக இதில் இறங்கவில்லை; கொள்கை பரப்புவதற்காகவே என்பது அனைவரும் அறிந்த ஒன்று.விளம்பர வருவாய் நமக்கு அறவே இல்லை.ஏராளம் அச்சிட்டும் லாபத்திற்குப் பதில் நட்டப் பெருக்கமே ஏற்படுகிறது. ‘பெரியார் பிஞ்சு’க்கு வரவேற்பு அதிகம், கூடுதல் சர்குலேசன்’ என்றாலும், மேலும் ‘கூடுதல் நட்டம்’ என்ற நிலைதான்.காரணங்கள் நீங்கள் அறியாதவையல்ல. காகித விலை உயர்வு, அச்சு மை முதல் அனைத்தும் விலை உயர்வினால் தாக்கப்பட்டுள்ள நிலை.நமது ஏடுகளைப் பெரும் நட்டத்தோடு பரப்பி வருகிறோம்.

அதிலும் கடந்த 7 ஆண்டுகளாக நாம், ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் ரூபாய்கள் நட்டத்துடன்!நாளும் சந்தாக்கள் கூடுகின்றன என்ற செய்தி தித்திப்பானதுதான்! ஆனால், ஒரு கசப்பான உண்மையையும் கொள்கை உறவுகளான உங்களோடு பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும்.அய்யா தொடங்கிய, ‘விடுதலை’ நாளிதழ், ‘உண்மை’ மாதம் இருமுறை, ஆங்கில மாத இதழான ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’, நாம் தொடங்கிய ‘பெரியார் பிஞ்சு’ என்ற குழந்தைகள் திங்கள் ஏடு இவற்றை நம் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல, மற்ற நாட்டவரும், மொழியினரும்கூட படிக்கின்றனர்!‘‘உலகம் பெரியார்  மயம், பெரியார் உலக மயம்‘’ என்ற உண்மை உலா வருகிறது! அய்யா தந்த அறிவாயுதங்கள் – நமது பட்டறையில் நாளும் முனை மழுங்காது கூர்மைப்படுத்திட களம் காணும் அரிய வாய்ப்புகள்!தொற்றுகள் அச்சுறுத்தல் இன்னும் குறைந்த பாடில்லை என்றாலும், ஜாதித் தொற்று, மதவெறித் தொற்று, மூடத்தன நம்பிக்கைத் தொற்றுகள், சமூக அநீதி ஆதிக்கத்தின் வெறித் தொற்றுகள் ஆகிய கொடுந்தொற்றுகளை எதிர்த்துத் தடுப்பூசி, கவசங்களாகவே நமது பணிகள் நாளும், ‘குடிசெய்வார்க்கில்லை பருவம்‘ என்ற முறையில், அஞ்சாத, அயராத பணியாக தொடர்கின்றன. தந்தை பெரியார் என்ற நம் பேராசான் உடல் ரீதியாக மறைந்தாலும், கொள்கை லட்சிய வடிவில் உலகளாவிய நிலையில் அங்கு இங்கினாதபடி எங்கும் பரவி வருகிறார்.2023 புத்தாண்டு – பொங்கல் – தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!அன்பார்ந்த பெரியார் பிஞ்சு வாசகப் பெருமக்களே, பெற்றோர்களே!

26
தந்தை பெரியார் வேடமிட்டு அழகு மொழியில் உரைதந்தை பெரியார் வேடமிட்டு அழகு மொழியில் உரை6th December 2022
இது புதிது! : சிகரம்5th January 2023இது புதிது! : சிகரம்

மற்ற படைப்புகள்

2020_jan_v27
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்
30th December 2019 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்!

Read More
2021_jan_v27
ஜனவரி-2021பிஞ்சுகள் பக்கம்
21st January 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2023_jan_47
ஜனவரி 2023பாடல்கள்
6th January 2023 by ஆசிரியர்

தங்கும் எங்கும் பேரின்பம்

Read More
2022_dec_15
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th December 2022 by ஆசிரியர்

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

Read More
2020_oct_v46
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்
15th October 2020 by ஆசிரியர்

ஆருயிர் காத்திடும் ஆறுயர் கவசங்கள்!

Read More
16
பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2024
7th February 2024 by சரவணா இராஜேந்திரன்

ரசிக்கலாம்; சிக்கலாமா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p