• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சிறார் கதை: எறும்பின் விருந்தோம்பல்

2023_mar_7
கதைசிறார் கதைமார்ச் 2023

அந்த எறும்பின் பெயர் சுறுவன். சுறுவனால் சும்மாவே இருக்கமுடியாது. எப்பொழுதும் ஊர்ந்து சென்று உணவுப் பொருளைத் தேடியவாறே இருக்கும். உணவு தானியம் எதுவும் கிடைத்தால் அதை வாயால் பற்றிக்கொண்டு சிரமம் பாராமல் இழுத்துக் கொண்டு வந்து தன்னுடைய புற்றில் சேர்த்து வைக்கும்.
அன்றும் அப்படித்தான் சுறுவன் எறும்பு இயங்கிக் கொண்டிருந்தது. தன்னுடைய இருப்பிடத்தை விட்டு அது நெடுந்தொலைவு வந்துவிட்டிருந்தது. அதன் மூக்கில் அரிசி வாசம் வீசியது.
‘ஆகா…’ அருகில்தான் அரிசி உள்ளது என்று எண்ணியவாறே விறுவிறு என ஊர்ந்தது. ஆனால் சுவர் தடுத்தது.
அந்தச் சுவரின் உச்சியில் ஒரு பொந்து இருந்ததை அது கண்டுபிடித்தது. சற்றும் அசரவில்லை. விரைவாகச் சுவரில் ஏறிப் பொந்துக்குள் நுழைந்தது. பொந்தை விட்டு வெளிப்பட்டபோது, ஓர் அறையைக் கண்டது. அங்குதான் அரிசி குவிக்கப்பட்டு இருந்தது.

மகிழ்ச்சியில் அரிசிக் குவியலில் குதித்தே விட்டது சுறுவன். மலை போல் அரிசி குவிந்து இருந்தாலும், அந்த ஒற்றை எறும்பால் ஒரே ஓர் அரிசையைத்தானே இழுத்துச் செல்ல முடியும். ஓர் அரிசியைக் கவ்விப் பிடித்தது. இழுக்க ஆரம்பித்தது. அந்த எறும்பின் எடையை விடவும், அந்த அரிசியின் எடை அதிகம். ஏன் அளவும் கூட அதிகம்.
அதெல்லாம் பொருட்டல்ல, சுறுவனுக்கு! கடமையைச் செய்வது மட்டுமே அதன் கவனத்தில் இருக்கும். அரிசியைச் சிரமப்பட்டு இழுத்தபடியே ஊர்ந்தது. சில சமயங்களில் அரிசி அதன் வாயின் பிடியிலிருந்து நழுவிவிடும். ஆனாலும் அசராது. சுறுவன்’ சுறுசுறுப்புக்குப் பெயர் போனவன் ஆயிற்றே.
அங்கே மூடப்பட்டிருந்த கதவின் அடியில் சிறு துவாரம் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டது. எனவே அதன் வழியே அறையைவிட்டு வெளியே வந்தது. அதற்கே அதற்கு வெகுநேரம் பிடித்தது. இன்னும் தன் இருப்பிடம் வரை இழுத்துச் செல்ல பல மணிநேரம் பிடிக்கும் என்பதைச் சுறுவன் உணர்ந்தது.
‘கடமை காலம் பார்க்காது. ஊக்கம் சிரமம் நோக்காது’ என்பார்கள் அல்லவா? அசராமல் தன் பணியைச் செவ்வனே செய்தது சுறுவன்.
இதோ, தன் புற்றை நெருங்கிவிட்டது. அப்போதுதான் அதன் அருகே ஒரு சிட்டுக்குருவி வந்து நின்றது.

“என்ன… சிட்டு. என்னையே பார்க்கிறாய். என்ன செய்தி?” என்று கேட்டது சுறுவன். “எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. நீ வைத்திருக்கும் அரிசியைக் கொடு. நான் உண்டு பசியாறுகிறேன்” என்றது.
“ஹை… இந்த அரிசியா? நான் எவ்வளவு கடினப்பட்டு, எவ்வளவு தூரம் சென்று இதைக் கொண்டு வந்திருக்கிறேன் தெரியுமா? நீ என்னமோ கொடுத்து வைத்ததுபோல் கேட்கிறாயே. உனக்கு வேண்டியதை நீயே உழைத்து உண்” என்றது சுறுவன் எறும்பு.
சிட்டுக்குருவிக்கோ அதைக்கேட்டு ஏமாற்றமாகி விட்டது.
“நான் என்ன உழைக்காமலா இருக்கிறேன். எவ்வளவு தேடியும் எனக்கு உணவு கிடைக்க வில்லை. அதுதான், மிகுந்த பசியைத் தணித்துக் கொள்ள, இந்த அரிசியைக் கேட்கிறேன். நீ தந்தால் பசியாறுவேன். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற தமிழ்ப்பண்பாடு நீ அறியாததா? நீயும் தமிழ் மண்ணில்தானே வாழ்கிறாய்” என்றது சிட்டு.
“அட… சரியாப் போச்சுது. நாங்க மணிக்கணக்கா உழைச்சு இந்த அரிசியை இவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு வருவோமாம். நீங்க ஒரே கொத்துல அதை அள்ளிக் கொண்டு போவீங்களாமாம். சரி… அது கெடக்கட்டும், உன்னுடைய கடும்பசிக்கு இந்த ஒத்தை அரிசி போதுமா?” என்றும் கேட்டது சுறுவன்.
“போதாதுதான் சுறுவா. ஆனால் சற்றாவது பசியைத் தணிக்கும் அல்லவா? நான் சாப்பிடட்டுமா? உன் அனுமதியைக் கொடு” என்று கேட்டது சிட்டு.
சிட்டு நினைத்தால் சுறுவனிடம் கேட்காமலேயே ஒரே கொத்தாக அரிசியை விழுங்கிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் எவ்வளவு பணிவுடன் தன் இசைவைக் கேட்கிறது என எண்ணியது சுறுவன்.

“சரி… சரி… நீயே சாப்பிடு இந்த அரிசியை!” என்றது சுறுவன்.
“நன்றி சுறுவா.. நான் உனக்குப் பதிலுக்கு தானியம் அதிகம் குவிந்திருக்கும் இடத்தைக் காட்டுகிறேன்” என்றது.
“அதெல்லாம் வேண்டாம். தானிய வாசனையை நான் நுகர்வால் உணர்ந்துகொண்டு விடுவேன்” என்றது சுறுவன்.
சிட்டுக்குருவி ஆசையுடன் அந்த அரிசியைத் தின்றது. அரிசியை விழுங்கிவிட்டு குனிந்தது. அதன் கண்களில் ஆச்சரியம். அதன் முன் நிறைய அரிசிகள் வந்து விழுந்தன. அருகிலுள்ள எறும்புப் புற்றில் இருந்துதான் சுறுவனின் தோழமை எறும்புகள் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த அரிசிகளைக் கொண்டுவந்து சேர்த்திருந்தன. அதெல்லாம் சுறுவனின் ஏற்பாடுதான்.
சுறுவனின் தோழமை எறும்புகள் காட்டிய விருந்தோம்பலில் திக்குமுக்காடிப் போய்விட்டது சிட்டுக் குருவி.
“சிட்டு… நீயோ பசியில் தவித்தாய். ஆனால் நானோ நாளைய பசிக்காகத்தான், இன்றே சேமித்து வைக்க உழைத்தேன். இன்று உன்னுடைய பசியைத் தீர்க்க எங்கள் சேமிப்பும் உதவியது பார்” என்றது.
“சுறுவா… உனது உயிர்நேயம் என்னை வியக்க வைத்துவிட்டது. இனி நானும் உழைப்பேன். தேவைக்குப் போக சேமித்து வைத்து பசித்த உயிருக்குக் கொடுத்து உயிர் காப்பேன்” என்றது சிட்டு.
சுறுவன் மீண்டும் அரிசி வேட்டைக்குக் கிளம்பியது.ம்.

26
பரிசு வேண்டுமா?பரிசு வேண்டுமா?1st March 2023
எண்ணிப்பார் ஏழு வேறுபாடுகள்1st March 2023எண்ணிப்பார் ஏழு வேறுபாடுகள்

மற்ற படைப்புகள்

2015_jun_pinju22
கதை கேளு கதை கேளுஜூன்
10th June 2015 by மு.கலைவாணன்

தாவும் மனிதர்கள்

Read More
2022_june_32
கதை கேளு கதை கேளுஜூன் 2022
3rd June 2022 by விழியன்

எறும்பு பள்ளியில் முதல் நாள்

Read More
2019_jul_a35
கதைஜூலை 2019
27th June 2019 by ஆசிரியர்

”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு?”

Read More
2023_may_3
கதை கேளு கதை கேளுமே 2023
4th May 2023 by விழியன்

பிடிச்சிக்கோ

Read More
11
கதை கேளு கதை கேளுபிஞ்சு 2025பிப்ரவரி 2025
4th February 2025 by விழியன்

கதை கேளு கதை கேளு : ஆரஞ்சு மாயத்தோட்டம்

Read More
கதைஜூலை 2023பிஞ்சு 2023
20th July 2023 by உடுமலை

படக்கதை : கலைஞர் தந்த சேது சமுத்திரத் திட்டம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p