• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலகு சூழ் ஆழி

2011_july_3-6
ஜூலை

ஆர்க்டிக் பெருங்கடல்:-  ஆர்க்டிக் பெருங்கடல் உலகில் உள்ள மிகக் குளிர் நிறைந்த இடங்களில் ஒன்று.  அது அய்ரோப்பாவின் வடபகுதியாலும் ஆசியா, வட அமெரிக்கா கீரீன்லாந்து ஆகிய பகுதிகளினாலும் சூழப்பட்டுள்ளது.  இப்பெருங்கடல் பகுதி கனிப்பொருள்களாலும் உயிரினங்களாலும் நிறைந்தது.  சில மக்களும் இங்கு வாழ்கின்றனர்.  கோடைக்காலத்தில் பனிக்கட்டிகளை உடைத்து ஆசியா, வட அமெரிக்கா கடற்கரை ஓரங்களில் கப்பல்கள் செல்லும்.

இயற்கைக் கூறுகள்:-

உலகில் உள்ள பெருங்கடல்களில் சிறிய, ஆழம் குறைவான பெருங்கடல் இது.  பெரும்பாலான பகுதியில் 2 மீ உயரத்திற்கு உறைபனி மிதக்கும்.  இப்பெருங்கடலின் நடுவே வடதுருவம் உள்ளது.  இதன் பரப்பு 1,40,89,600 சதுர கி.மீ. சராசரி ஆழம் 1,330 மீ. (4,360 அடி).  சராசரி மேலே படிந்துள்ள பனிப்படிவத்தின் திண்மை 1.5 _ 3 மீ (4.9 _9.8 அடி).  மிகக் குறைவான வெப்பம் – 700நீ (-940யீ). கிரீன்லாந்து வடமுனையில் பெரிய பனிப்பாறைகள் உடைந்து கிரீன்லாந்திற்குத் தெற்கே வடஅட்லாண்டிக் கடலில் சென்றடைகின்றன.  அவைகளில் சில 120 மீ (400 அடி) கடல் மட்டத்திற்கு உயரமானவை.  அவற்றின் சிறு பகுதியே கடல் நீருக்கு மேல் தெரிவதால் அவை கப்பலுக்கு ஆபத்தை உண்டாக்கும்.

வடக்கில் ஒளி:-

இருண்ட இரவுகளில் ஒளி மிக்க பல வண்ணங்கள் கொண்ட வைகறை ஒளியைப் (Aurora)  பார்க்கலாம்.  அது பனிக்காலத்து இடையில் மிக்க ஒளியுடன் தெரியும்.  ஏனெனில், அப்பருவத்தில் அங்கே சூரியன் உதிக்காது.  அவ்வொளி 24 மணி நேரமும் சூரியன் ஒளி வீசும் கோடைக்காலத்தில் தெரியாது.

ஆர்க்டிக் மக்கள்:-

இங்கு 8 இலட்சம் பூர்வ குடிகள் வாழ்கின்றனர்.  தற்போது அவர்கள் நாடோடி வாழ்க்கையை விட்டு சிற்றூர்களில் வாழ்கின்றனர்.  இங்கு தெற்கே இருந்து வந்த ஆயிரக்கணக்கான  பொறியியலாளர்களும், வியாபாரிகளும் பணியாற்றுகின்றனர்.

கிரீன்லாந்து:-

கிரீன்லாந்து தன் ஆளுமை பெற்ற டென்மார்க்கின் ஒரு பகுதி.  இந்நிலத்தில் தென்மேற்குக் கடற்கரையில் பெருமளவு மக்கள் வாழ்கின்றனர்.  காரணம், மக்கள் வாழ்வதற்கேற்ற தட்பவெப்ப நிலை அங்கு நிலவுகிறது.  கிரீன்லாந்து உலகிலேயே மிகப்பெரிய தீவு ஆகும். தலைநகரம் – நவக் (Nuuk) பரப்பு – 21,75,600 சதுர கி.மீ. மக்கள் தொகை – 56,569. பேசும் மொழிகள் – டேனிஷ், கிரீன்லாந்து மொழி.  நாணயம்  – டேனிஷ் குரோன் (krone

26
தமிழில் 100க்கு 100தமிழில் 100க்கு 1001st July 2011
அறிஞர்களின் வாழ்வில்...1st July 2011

மற்ற படைப்புகள்

2011_july_1-5
ஜூலை
29th June 2011 by ஆசிரியர்

அறிவியல் சோதனை

Read More
ஜூலை
1st July 2011 by ஆசிரியர்

விடுகதைகள்

Read More
2011_july_as
ஜூலை
1st July 2011 by ஆசிரியர்

திருக்குறள் புதிர்

Read More
2011_july_1-1
ஜூலை
29th June 2011 by ஆசிரியர்

ஜோதிட நம்பிக்கையே சுத்த நத்திகம்!

Read More
2011_july_1-9
ஜூலை
1st July 2011 by ஆசிரியர்

வண்ணம் தீட்டுங்கள்

Read More
ஜூலை
1st July 2011 by ஆசிரியர்

அறிஞர்களின் வாழ்வில்…

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p