• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அறிவியல்: ஏன் எண்களைத் தலைக்கீழா வரிசைப்படுத்தியிருக்காங்க?

2023_may_4
அறிவியல்மே 2023


பாபு .பி.கே

டெலிபோன் எண்கள் வரிசையும் இதர கம்ப்யூட்டர், கால்குலேட்டர் எண்கள் வரிசையும் ஏன் எதிர் மறையாக இருக்கின்றன?
ஏன் இது வரைக்கும் யாரும் இந்தக் கேள்வியை என்கிட்ட கேக்கலை…? சரி, அதுக்கு முன்னாடி Benford’s Law அல்லது First-Digit Law அப்டீன்னா என்னன்னு சுருக்கமாகப் பார்த்துருவோம். 1938ல ஃபிராங்க் பெண்போர்டு (Frank Benford)ங்குற ஒரு இயற்பியலாளர் இதை அறிமுகப்படுத்துனாரு. அதுனால இவர் பேராலயே வழங்குறாங்க.
இயல்பு வாழ்முறைகளில், எண்களின் தகவல் பரிமாற்றப் பரவலில் சிறிய மதிப்புள்ள எண்களே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றனவாம். (அட்டவணையைப் பாருங்க.) அன்றாட வாழ்வில், மின்கட்டண மதிப்புகள், தொகைக்கணக்கீடுகள், இயற்பியல் மற்றும் கணிதவியல் மாறிலிகள்…. என்று பல்வேறு எண் பயன்பாடுகளிலும் இது பொருந்தி வரும்.
பெண்போர்டுக்கு முன்னாடியே  1881ல சைமன் நியூ கோம்ப் (Simon Newcomb) என்பவரு இதைப் பத்திச் சொல்லிருக்காரு. இவரு ஒரு கணிதவியல் மற்றும் வானவியல் அறிஞர். மடக்கை அட்டவணை இருக்குல்ல, அதாங்க logarithm table அதைப் புரட்டிப் பார்க்கையில 1ன்னு தொடங்குற பக்கங்கள் மட்டும் மத்த பக்கங்களை விட அதிகமா கசங்கியும், அழுக்காவும் இருந்ததைப் பாத்துட்டு ஒரு அனுமானத்துக்கு வந்தாரு. அதாவது அதிகப்படியான எண்கள்
1 என்ற எண்ணிலேயே தொடங்குகின்றனன்னு. அதுக்கப்புறம் வந்த பெண்போர்டு 20 வெவ்வேறு தளங்கள்ல இதை வச்சு ஆராய்ச்சி பண்ணி அது உண்மைதான்னு உலகத்துக்குச் சொன்னாரு.
சரி, இப்ப நமக்குத் தெரிய வேண்டியது என்னன்னா…. பெரிய எண்களை விட சிறிய எண்கள்தான் நம்மோட பயன்பாட்டுல அதிகம் இருக்குங்குறதுதான். எலக்ட்ரானிக் கருவிகளில், நாம் தகவல்களை எண்களாகப் பதிவு செய்யவும் உள்ளீடு செய்யவும் ஆரம்பிக்கும்போது…. பல்வேறு முக்கியப் பணிகளைச் செய்யக்கூடிய விசைகளுக்கு (Keys) மேலேயே 1 2 3…ன்னு எண்களுக்கான விசையையும் வச்சாங்க. அது வசதியா இருந்துச்சு.
அதாவது, விரல்களைப் பயன்படுத்துற விதம் எளிதா இருக்கவும், நேரத்தைக் குறைக்கவும், பிழைகளைக் குறைக்கவும் இந்த அமைப்பு முறை எளிதா இருந்துச்சு. இருங்க இருங்க… அதுக்காக, இப்ப இருக்குற மாதிரி 3 ஜ் 3 அமைப்புல இல்லை. உதாரணமா இந்த ஹெக்சாடெசிமல் அமைப்பைப் பாருங்க. 4 ஜ் 4 அமைப்புல இருக்கும். டெசிமலை 2 ஜ் 5 அமைப்புல கூட பயன்படுத்தியிருக்காங்க.
இப்ப ஏன், கம்ப்யூட்டர், கால்குலேட்டர்ல எல்லாம் எண் வரிசை கீழ் இருந்து மேல் நோக்கி போகுதுன்னு தெரிஞ்சிடுச்சா. இப்ப அடுத்து டெலிபோனுக்கு வருவோம். இதுல மட்டும் ஏன் மேல இருந்து வரிசையா கீழ் நோக்கி வருது…?
இதுக்கு பல காரணங்கள் சொல்றாங்க. என்னென்னன்னு பார்ப்போம்.
முதலாவது, 1950ல தொடுபலகைத் தொலைப் பேசிகளோட(Touch Pad Telephones) tone-recognition டெக்னாலஜி ரொம்ப அடாசு மாடலா இருந்துச்சாம். அதுலயும் கால்குலேட்டர் மாதிரி கீழ இருந்துதான் எண்களைத் தொடங்கிருக்காங்க. ஆனா, இந்த டேட்டா என்ட்ரி எக்ஸ்பர்ட்லாம், (Data entry experto) இந்த சுழல் முறைக்கு (Dial Pad) பழக்கங்குறதுனால, செம வேகமா இந்த போன்ல டயல் பண்ணிருக்காங்க. போனோட டோன் ரெகக்னிஷன் டெக்னாலஜியினால அந்த வேகத்துக்கு ஈடுகொடுத்து என்ன நம்பர்னு கன்வெர்ட் பண்ணிக்க முடியலையாம். அதுனால, இந்த வரிசை அமைப்பை மாத்தி வச்சாங்களாம். அதுக்கப்புறம் யாரும் வேகமா டயல் பண்ணாததால பிரச்சனை இல்லாமப் போச்சாம்.  என்னங்க ரொம்ப மொக்கையான காரணமாத் தெரியுதா…? ஃப்ரீயா விடுங்க.
அடுத்த காரணத்தைப் பாக்கலாம். 1960ல பெல் லெபாரட்டரிகாரங்க பலவிதமான தொடுபலகை அமைப்பை ஆராய்ச்சி பண்ணிப் பாத்துருக்காங்க. அவங்கதான் 3 x 3 அமைப்பு பொருத்தமா இருக்கும்னு முடிவுக்கு வந்தாங்க. அதுலயும் எண்களை எந்த வரிசையில அமைக்கிறதுன்னும் பலவாறு யோசிச்சுப் பார்த்துருக்காங்க.
டயலிங் முறை இருந்தப்ப 0 9 8 7 6 5 4 3 2 1 ன்னு வலமிருந்து இடமாத்தான் நம்பர் இருந்துச்சுன்னு 3 x 3 அமைப்புல நம்பர்களை வலமிருந்து இடமால்லாம் வச்சுப் பார்த்துருக்காங்க. ஆனா, பெரும்பாலான மக்கள் இடமிருந்து வலமாத்தான் எழுதுறாங்கங்குறதுனால, இப்ப இருக்குற டெலிபோன் அமைப்புல நம்பர்களை அமைச்சுட்டாங்க.
போகவும், அதுல A B C ன்னு எழுத்துகளையும் பயன்படுத்துறதுக்கு 1ஆம் விசையில A B C யும் 2ஆம் விசையில் D E Fஉம் வச்சுப் பயன்படுத்துறது கொஞ்சம் அர்த்தமுள்ளதா இருக்கும்.
1960ல இந்த பெல் லெபாரட்டரிகாரங்க Human Factor Engineering Studies of the Design and Use of Push-button Telephone Sets
ன்னு ஓர் ஆய்வு உரை வெளியிட்டுருக்காங்க.
அந்தக் கட்டுரை இங்கே இருக்கும். http://www3.alcatel-lucent.com/bstj/vol39-1960/articles/bstj39-4-995.pdf

ஆக, சாதாரண மக்கள் அதிகமாப் பயன்படுத்துறதுக்கு எளிதாவும் வசதியாவும் இருக்குறது இப்ப இருக்குற டெலிபோன் எண் வரிசை அமைப்புதான். கொஞ்சம் மூளையைப் பயன்படுத்தி வேலை செய்யுறவங்களுக்கு பழைய கால்குலேட்டர் அமைப்பு அப்புடியே தொடரட்டும்னு விட்டுட்டாங்க.

29
விந்தை உலகம் : உயிரனங்களைக் கற்களாக மாற்றும் நாட்ரான் ஏரிவிந்தை உலகம் : உயிரனங்களைக் கற்களாக மாற்றும் நாட்ரான் ஏரி3rd May 2023
பிடிச்சிக்கோ4th May 2023பிடிச்சிக்கோ

மற்ற படைப்புகள்

2019_dec_a36
அறிவியல்டிசம்பர் 2019
28th November 2019 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : அழகிய நாய்க்குட்டி

Read More
கணக்கும் இனிக்கும் (தொடர்)ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
21st July 2022 by சந்தோஷ்

உலக நாடுகள் : பிலிப்பைன்ஸ் (Philippines)

Read More
2022_dec_33
அறிவியல்டிசம்பர் 2022
5th December 2022 by ஆசிரியர்

துணுக்குச்சீட்டு

Read More
2020_sep_v37
அறிவியல்செப்டம்பர் 2020
3rd October 2020 by ஆசிரியர்

அறிவியல்: கூகுளின் அக்காவும் குறளமுதனும்

Read More
2022_August_10
அறிவியல்ஆகஸ்ட் 2022
2nd August 2022 by ஆசிரியர்

அசத்தும் அறிவியல்: நெருப்பிலும் வெடிக்காத பலூன்

Read More
2020_feb_v11
அறிவியல்பிப்ரவரி 2020
28th January 2020 by ஆசிரியர்

தெரிந்தது சூரிய கிரகணம் முறிந்தது மூடநம்பிக்கை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p