• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பரிசு பெற்றுத்தந்த பெரியார் பிஞ்சு

2023_may_14
பிஞ்சுகள் பக்கம்மே 2023

எனக்குப் பிடித்த புத்தகம்

திருவாரூரில் நடைபெற்ற புத்தகக்காட்சியில், பெரியார் பிஞ்சு வெளியீடான உங்கா சிங்கா மங்கா புத்தகத்தைப் பற்றி கட்டுரை எழுதி பரிசு பெற்றுள்ளார் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி ச.ராஜமுகி அவரது கட்டுரையிலிருந்து சில பகுதிகள்…
“ஒரு மனிதனை நெறிப்படுத்தவும் முறைப் படுத்தவும் நல்ல நண்பர்கள் புத்தகங்களே! ஒரு புத்தகத்தைப் படிப்பது ஒரு புதிய நண்பனைப் பெறுவது போன்ற இனிய அனுபவம்!
எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்: “உங்கா சிங்கா மங்கா” சிறுகதை, புகைப்படம், சிறார் நூல்கள் என்று பல தளங்களில் தீவரமாகச் செயல்படுகிறார். எழுத்தாளர்: விழியன். குழந்தைகளுக்காகத் தொடர்ந்து களப்பணி ஆற்றுபவர்.
கதைகளின் கதை:   “உங்கா சிங்கா மங்கா” 10 கதைகளைக் கொண்ட தொகுப்பு. பொங்கல் ராட்டினம் கதை அன்பையும் அக்கறையையும் சொல்கிறது. சர்வகடல் புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற லோலிமாவின் புத்தக ஆர்வமும் அதற்குக் கிடைத்த பரிசும் நம் உள்ளத்தைக் குதூகலப்படுத்தும். அன்பும் இரக்கமும் தேவைகள், ஆடம்பரங்கள் அல்ல. அவை இன்றி மனித இனம் வாழாது என்ற தலாய்லாமா சொல்லை மெய்பிக்கும் வகையில் விலங்குகள் சேர்ந்து மனிதரைக் காப்பதைச் சொல்லும் விலங்கிதம் கதை. உணவுகளை வீண் செய்யாமல் சாப்பிட வேண்டும். ஆரோக்கியம் தரும் பச்சைக் காய்களைச் சாப்பிட வேண்டும் என்ற அறிவுரையை மூக்கோசி, பூமய்யா கதைகள் மூலம் விளக்குவார். அன்பு, கருணை, கனவு, கற்பனை, நட்பு, பாசம், மனித நேயம் எனப் பல உணர்வுகளின் கலவையாக கதைகள் இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த கதை உங்கா சிங்கா மங்கா. மூன்று முயல்கள் உணவு டாப்பாவை மாற்றி மாற்றிப் பிடித்து உணவைச் சாப்பிடுவது மிகவும் சிரிப்பாக இருந்தது.” என்று எழுதியுள்ளார்.
இப்புத்தகத்தை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, “எனக்கு கட்டுரை எழுதுவது ரொம்பப் பிடிக்கும். பெரியார் பிஞ்சு வெளியீடுகளிலேயே எனக்கு பிடிச்ச கதை உங்கா, சிங்கா, மங்கா. மூன்று முயல் உணவுப் பெட்டகத்தை மாற்றி மாற்றிக் குறும்பு செய்யும்; எனக்கு அந்தக் கதை ரொம்பப் பிடிக்கும். விழியன் சார் எழுதுன மியாம்போ என்ற கதையை நான் திருவாரூரில் நடந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன்.
எனக்கு அப்ப கையில வீக்கம் இருந்தது. அதனால என்னால எழுத சிரமமாக இருந்தது. ஆனாலும் நான் அதைப் பற்றி எழுதினேன். பரிசு பெற்று என்னோட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் பெருமையைச் சேர்த்தேன். “ என்று மகிழ்ந்தார்.
மாணவி ராஜமுகியைக் கட்டுரை எழுத ஊக்குவித்த ஆசிரியர் பு.பிரியங்கா அவர்களும் 5+ குழந்தைகளுக்கான சிறார் கதைகள் கொண்ட நூல். இந்நூல் கண் கவர் வண்ணங்களுடன் அழகிய ஓவியங்களுடனும் எல்லோரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர் ஒவ்வொன்றும் வித்தியாசமாக அழகியலுடன் இருக்கிறது. என்று தன் ரசனையை வெளிப்படுத்தினார்.<

26
தொடர் கதை - 5 : நீதிமன்றத்தில் வாதிட்ட பூசணிக்காய்தொடர் கதை - 5 : நீதிமன்றத்தில் வாதிட்ட பூசணிக்காய்4th May 2023
பாரம்மா...பாரம்மா...4th May 2023பாரம்மா...பாரம்மா...

மற்ற படைப்புகள்

8
அக்டோபர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்வாசகர் கடிதம்
4th October 2024 by ஆசிரியர்

ஒரு பெரியார் பிஞ்சின் வாழ்த்து மடல்

Read More
2022_april_29
ஏப்ரல் 2022பிஞ்சுகள் பக்கம்
2nd April 2022 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2021_may_m5
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

ஆறு புதிர்!

Read More
26
டிசம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
7th December 2024 by ஆசிரியர்

பிஞ்சுகளே, ஆசிரியர் தாத்தாவைப் பின்பற்றுங்கள்

Read More
2019_sep_a11
செப்டம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
26th August 2019 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : அலங்கார விளக்குக் கூடு

Read More
2019_nov_v33
நவம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
1st November 2019 by ஆசிரியர்

மாமல்லபுரம் to ஆஸ்கர் விருது

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p