• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கதை கேளு கணக்குப் போடு

ஆகஸ்ட்

முத்துக்கள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரிடம் 9 முத்துக்கள் இருந்தன.  அனைத்தையும் ஒரே நேரத்தில் விற்பனை செய்து பணமாக்க விரும்பினார்.  விற்பனை செய்ய யாரிடம் கொண்டு செல்லலாம் என யோசித்தார்.

உடனே அவருக்கு அந்நாட்டு அரசன் நினைவிற்கு வந்தார்.  நம் அரசனுக்குத்தான் 3 பெண்குழந்தைகள் உள்ளனரே!  அரசனிடம் எடுத்துச் சென்றால் அனைத்து முத்துக்களையும் உடனடியாக வாங்கிக் கொள்வார் என நினைத்தார்.

அரண்மனைக்குச் சென்று அரசனிடம் முத்துக்களை வரிசைப்படுத்திக் காட்டினார்.  அரசனுக்கும் அரசிக்கும் முத்துக்களைப் பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது.  என்ன விலை என்று கேட்டனர்.

அந்தக் காலத்தில் விலையைப் பணமாகக் கூறுவது வழக்கம்.  அதன்படி வியாபாரி, முத்துக்களை வரிசையாக வைத்து முதல் முத்து 1 பணம் , இரண்டாம் முத்து 2 பணம், மூன்றாம் முத்து 3 பணம், நான்காம் முத்து 4 பணம், அய்ந்தாம் முத்து 5 பணம், ஆறாம் முத்து 6 பணம், ஏழாம் முத்து 7 பணம், எட்டாம் முத்து 8 பணம், ஒன்பதாம் முத்து 9 பணம் என்றார்.

விலையைக் கேட்ட அரசன் அனைத்து முத்துக்களையும் வாங்க விரும்பினார்.

வியாபாரியே, என் 3 பெண்களுக்கும் இந்த முத்துக்களை நீயே சமமாகப் பங்கிட்டுக் கொடுத்துவிடு.  முத்தும் சரியாக வர வேண்டும், விலையும் சரியாக வரவேண்டும்.  சிறு வேறுபாடுகூட வந்துவிடக் கூடாது என்றார்.

வியாபாரியும், அரசரே தங்கள் விருப்பப்படியே பங்கிட்டுக் கொடுக்கிறேன் என்று பங்கிட்டுக் கொடுத்தார்.  வியாபாரி 9 முத்துக்களையும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தார்?  கண்டுபிடியுங்களேன்.

விடை: இன்னொரு பக்கம்

16
அறிஞர்களின் வாழ்வில்...அறிஞர்களின் வாழ்வில்...26th July 2011
சுடோகு26th July 2011சுடோகு

மற்ற படைப்புகள்

2011_august_AUGUST-2011-Pages-31
ஆகஸ்ட்
29th July 2011 by ஆசிரியர்

வரைந்து பழகுங்கள்

Read More
2011_august_petrorkale
ஆகஸ்ட்
28th July 2011 by ஆசிரியர்

பெற்றோர்களே! இதக் கொஞ்சம் படிங்க!

Read More
2011_august_AUGUST-2011-Pages-26
ஆகஸ்ட்
28th July 2011 by ஆசிரியர்

தகவல் களஞ்சியம்

Read More
2011_august_joserizal
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

உலகப் புகழ் பெற்றவர்கள்

Read More
2011_august_AUGUST-2011-Pages-18
ஆகஸ்ட்
28th July 2011 by ஆசிரியர்

சிந்திப்போம்…

Read More
2011_august_pinju1
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

எப்படி? எப்படி?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p