• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலக நாடுகள்

2011_august_AUGUST-2011-Pages-24
ஆகஸ்ட்

தலைநகரம் லுசாகா ( LUSAKA )

ஆங்கிலம் அலுவலக மொழியாகப் பேசப்படுகிறது.

கிறித்தவர்களும், இசுலாமியர்களும் அதிகம் வசிக்கின்றனர்.

நாணயம் க்வாசா (KWACHA) என்றழைக்கப்படுகிறது.

1964 அக்டோபர் 24 அன்று விடுதலை பெற்று குடியரசாகியுள்ளது.

குடியரசுத் தலைவராக ரூபியா பாண்டா (RUPIAH  BANDA) உள்ளார்.

துணைக் குடியரசுத் தலைவராக ஜார்ஜ் குண்டா ( GEORGE KUNDA) உள்ளார்.

செம்பு உற்பத்தியில் முன்னணியில் உள்ள உலக நாடுகளுள் ஒன்று.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாம்பியாவில் வேட்டைக்காரர்களின் குடியேற்றமே இருந்தது. படிப்படியாக பல இன குடியேற்றம் ஏற்பட்டது. அய்ரோப்பியக் கண்டுபிடிப்பாளர்கள் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்தனர். பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்கீழ் 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இருந்தது. முதன்மைத் தலைமைப் பிரதிநிதியாக பிரிட்டிஷ் மன்னர் இருந்தார்.

இதன் பழைய பெயர் வட ரொடீஷியா என்றழைக்கப்படுகிறது. டேவிட் லிவிங்ஸ்டன் என்ற அய்ரோப்பியர் சாம்பசி (Zambezi) ஆற்றின் மேலே உருவாகும் அருவியை 1855இல் கண்டுபிடித்துள்ளார்.

விக்டோரியா அருவி என்று பெயரும் வைத்துள்ளார். பின்பு, குயின் விக்டோரியா (QUEEN VICTORIA) என்று அழைக்கப்பட்டது. சாம்பசி (Zambezi) ஆற்றின் பெயரிலிருந்து சாம்பியா என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. சாம்பசி என்பதற்கு God’s River  என்று பொருள் கூறுகின்றனர். சுதந்திர சிலை ஒன்று அரசு கட்டடத்தின் முன் உள்ளது.

புவியியல் அமைப்பு

இது ஒரு தென் மத்திய ஆப்ரிக்க நாடு. முழுவதும் நிலத்தால் சூழப்பட்டது. வடக்கே காங்கோ, வடகிழக்கில் தான்சானியா, கிழக்கே மாலவி, தெற்கே ஜிம்பாவே, மொசாம்பிக், நமிபியா, மேற்கே அங்கோலா எல்லைகளாக அமைந்துள்ளன.

கல்வி

இரண்டு நிலைகளில் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆரம்பக் கல்வி 1-9 வரையிலும், உயர்கல்வி 10-_12 வரையிலும் வழங்கப்படுகின்றன. 7 ஆண்டுகள் மட்டுமே இலவசமாக கல்வி கற்க முடியும். பின்பு, கல்விக் கட்டணங்களைக் கட்டாயம் கட்ட வேண்டும். எனவே, சில குழந்தைகள் 7 ஆண்டுகளுக்குப் பின் பள்ளிக்குச் செல்லாத நிலையும் காணப்படுகிறது.

சாம்பியா பல்கலைக்கழகம் (University of   Zambia), முலுங்குஷி பல்கலைக்கழகம் (Mulungushi University), காப்பர்பெல்ட் பல்கலைக்கழகம் (Copperbelt University) என்ற மூன்றும் முக்கியமான பல்கலைக்கழகங்களாகும்.

வேளாண்மை

பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்காச்சோளம், கரும்பு, புகையிலை, பருத்தி ஆகியன முக்கிய விளைபொருள்களாக உள்ளன.

தொழில்

மீன் பிடித்தல், சிமெண்ட், செம்புப் பொருள், மரச்சாமான், விவசாயம் சார்ந்த உற்பத்திப் பொருள்கள் தயாரித்தல் ஆகியன நடைபெறுகின்றன.

ஏற்றுமதிப் பொருள்கள்

தங்கம், வெள்ளி, செம்பு, சோடியம், சர்க்கரை, புகையிலை, துணி, அஸ்பெஸ்டாஸ்.

இறக்குமதிப் பொருள்கள்

பெட்ரோலியப் பொருள்கள், எந்திரங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், கோதுமை.

கனிம வளம்

செம்பு, துத்தநாகம், காரியம், கோபால்ட், மாங்கனீசு, சுண்ணாம்புக்கல்.

21
விடுகதைகள்28th July 2011
தகவல் களஞ்சியம்28th July 2011தகவல் களஞ்சியம்

மற்ற படைப்புகள்

2011_august_AUGUST-2011-Pages-32
ஆகஸ்ட்
29th July 2011 by ஆசிரியர்

திருக்குறள் புதிர்

Read More
2011_august_eisenhower
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

அறிஞர்களின் வாழ்வில்…

Read More
2011_august_xray
ஆகஸ்ட்
27th July 2011 by ஆசிரியர்

எக்ஸ் ரே

Read More
2011_august_petrorkale
ஆகஸ்ட்
28th July 2011 by ஆசிரியர்

பெற்றோர்களே! இதக் கொஞ்சம் படிங்க!

Read More
2011_august_sudoku1
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

விடைகள்

Read More
ஆகஸ்ட்
28th July 2011 by ஆசிரியர்

விடுகதைகள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p