• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அடங்கா ஆர்வம்

2011_september_3-6
செப்டம்பர்

அண்ணன் சொந்தமாக பத்திரிகை ஒன்றினை நடத்திவந்தார்.  அச்சகமும் சொந்தமாக வைத்திருந்தார்.  தம்பி அச்சகத்தில் வேலை செய்து வந்தார்.  எழுத்துகளைக் கோர்த்துக் கொடுப்பது, அச்சடிப்பது, அச்சடித்த பத்திரிகைகளை வீடு வீடாகச் சென்று போட்டு வருவது தம்பியின் வேலைகளாகும்.  நிறையப் படிக்க வேண்டும், அனைத்துச் செய்திகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்ட தம்பி எந்த நேரமும் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டே இருந்தார்.

தானும் எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.  மனதில் தோன்றியதை எழுத ஆரம்பித்தார்.  தான் எழுதியவையும் பத்திரிகையில் வெளிவந்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றியது.  தான் எழுதியதை அண்ணன் வெளியிடுவாரா என்ற அய்யம் ஏற்பட்டது.  எனவே, அண்ணனிடம் காட்டத் தயங்கினார். பின்பு ஒரு முடிவுக்கு வந்தார்.

இரவு நேரத்தில் கட்டுரை ஒன்றை எடுத்துக் கொண்டு சென்று பத்திரிகை அலுவலக ஆசிரியர் அறையின் ஜன்னல் வழியாக யாருக்கும் தெரியாமல் உள்ளே போட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார்.  காலையில் அலுவலகம் வந்த அண்ணன் எடுத்துப் படித்துப் பார்த்தார்.  படித்துவிட்டு, பெயர் எங்காவது ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று தேடிப் பார்த்தார்.  எங்கும் எழுதப்படவில்லை.  தனது நண்பர்களிடம் காட்டினார்.  அருமையாக உள்ளது, பத்திரிகையில் வெளியிடுங்கள் என்றனர்.  இப்படியே பல கட்டுரைகள் வெளிவந்தன.   புகழை விரும்பாத யாரோ ஒருவரே இப்படி ஜன்னல் வழியே போட்டுவிட்டுச் செல்கின்றனர் என அனைவரும் நினைத்தனர்.

ஜன்னல் வழியே கட்டுரைகளைப் போட்டுவிட்டுச் செல்பவர் தம்பிதான் என்று ஒரு நாள் தெரிந்துவிடுகிறது.  அண்ணன் மற்றும் பத்திரிகை அலுவலக நண்பர்கள் பாராட்டி மகிழ்கின்றனர்.  இந்தத் தம்பி, பிற்காலத்தில் தலைசிறந்த பத்திரிகை ஆசிரியராகத் திகழ்ந்த பெஞ்சமின் ஃபிராங்ளின்.

14
சிரிக்கலாம்... சிந்திக்கலாம்...6th September 2011
அரைநாண் கயிறு ஆணுக்கு அவசியமா?6th September 2011அரைநாண் கயிறு ஆணுக்கு அவசியமா?

மற்ற படைப்புகள்

2013_sep_pinju-13
செப்டம்பர்
5th September 2013 by ஆசிரியர்

பூமியை சுற்றிவர 6 மணி நேரம் போதும்

Read More
2011_september_6-4
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

செப்டம்பரில்…

Read More
2011_september_SUDOKU
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

சுடோகு

Read More
2011_september_3-3
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

கதைகேளு கணக்குப்போடு

Read More
2011_september_3-8
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2011_september_WORLDCOUNTRY
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

உலகநாடுகள் – சா டோம் மற்றும் பிரின்சிப்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p