• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெரியார் 133 தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17

2011_september_PERI
செப்டம்பர்

பெரியார் பார்த்த கணினி

பெரியாரைப் பற்றிப் பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், மண்டைச் சுரப்பை உலகு தொழும்என்றார். சமூக நோய்களுக்கு மருந்து சொன்ன பெரியார், அறிவியல் வளர்ச்சியைப் பற்றியும் முன்னோக்கிச் சிந்தித்தவர்.

எதிர்காலத்தில் உலகம் எப்படி இருக்கும் என்று தனது தொலைநோக்குப் பார்வையால் எடுத்துச் சொல்லியவர்.

அவர் எழுதிய இனி வரும் உலகம் நூலில் இன்றைய செல்பேசியை அன்றே சொல்லியிருந்தார். அந்நூலில் அவர் சொல்லிய பல அறிவியல் கருவிகளுள் இன்று நம் வாழ்வில் ஒன்றாகிவிட்ட கணினியும் ஒன்று.

அந்தக் கணினியை பெரியாரே நேரில் பார்த்தும்விட்டார் என்பது உங்களுக்குப் புதிய செய்தியாக இருக்கலாம்.

ஆம், அது 1970 ஆம் ஆண்டு, ஜூலை 16ஆம் நாள். சென்னை, கிண்டி பொறியியல் கல்லூரியில் (இன்றைய அண்ணா பல்கலைக் கழகம்) நடைபெற்ற தமிழ் மன்ற  விழாவுக்கு பெரியார் சென்றிருந்தார். அப்போதுதான் கம்ப்யூட்டர் என்ற கருவி கல்லூரிக்காக வாங்கப்பட்டுள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள்.

உடனே பெரியார் அதை நான் பார்க்கவேண்டும் என்று கூறிவிட்டார். கல்லூரி நிருவாகத்தினரும் சரி என்று கூறினர். ஆனால் அந்தக் கணினி இருப்பது முதலாவது மாடியில்.

அய்யா பெரியாரால் நடந்து வரமுடியாது. பிறரின் உதவியால் தூக்கித்தான் செல்ல முடியும். அது பெரியாரின்  உடல்நலத்துக்குச் சிரமமாக இருக்கும். இதை அங்குள்ளவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் அதைப்பற்றி பெரியார் கவலைப்பட வில்லை. என்னைத் தூக்கிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார். அவர்களும் அய்யாவை முதல்மாடிக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.

இப்போது இருப்பது போல மேசையில் வைக்கும் அளவுக்கு சிறிய அளவிலான கணினி அப்போது இல்லை. அது பெரிதாக இருக்கும். பெரிது என்றால் ஒரு அறையையே அடைத்துக் கொண்டிருக்கும். அவ்வளவு பெரியது. அந்தக் கணினியின் பெயர் அய்.பி.எம்.1620. அப்போது கணினி என்று தமிழில் பெயரிடவில்லை. அது கம்ப்யூட்டர் என்றுதான் அழைக்கப்பட்டது.

இந்த இயந்திர மூளையைக் காட்டி விளக்கியவர் அன்றைய பேராசிரியரும், பின்னாளில் துணைவேந்தராகவும் விளங்கிய வா.செ.குழந்தைசாமி அவர்கள். அவரே பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த நிகழ்வை விவரித்தார். அந்தக் கல்லூரியில் 50க்கும் அதிகமான பேராசிரியர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பகுதியினர் இந்தக் கம்ப்யூட்டரைப் பற்றித் தெரிந்து கொள்வதில் காட்டிய ஆர்வத்தைவிட அய்யா பெரியார் காட்டிய ஆர்வம் என்னை வியக்க வைத்தது. அறிவியலின் மீதுதான் அய்யாவுக்கு எத்தனை ஆர்வம்! வினாடிக்கு 333 எழுத்துகளைப் படிக்கும் வேகம் கொண்டது என்பதையும், வினாடிக்கு 10 எழுத்துகளை அச்சடிக்கும் என்ற தகவலையும் சொன்னோம்.

கிறித்துவுக்குப் பிறகு உள்ள எந்தத் தேதியைச் சொன்னாலும் அதன் கிழமையைச் சொல்லும் என்று சொன்னோம். அய்யாவும் அதனைச் சோதித்து அறிய விரும்பினார். 2.12.1933 இந்தத் தேதியின் கிழமை என்ன? என்று கணினியிடம் கேட்கப்பட்டது.

பட்டென்று சனிக்கிழமை என பதில் வந்தது.

17.9.1879 (பெரியாரின் பிறந்த தேதி) என்ன கிழமை என்று கேள்வி பிறந்தது.

அது புதன்கிழமை என்று கணினி பதில் சொன்னது.

 

இன்றைய தேதி, கிழமை என்ன என்பது அடுத்த கேள்வி. 16 ஆம் தேதி, வியாழக்கிழமை என்று பதில் சொன்னது.

இந்தக் கணினி சந்திப்பு பெரியாருக்கு அத்தனை மகிழ்ச்சியை அளித்தது. பின்னர் அங்கிருந்து விடைபெற்றார் என்று அந்த நாளை நினைவு கூர்ந்து வா.செ,குழந்தைசாமி விவரித்தார்.

மனித அறிவின் வளர்ச்சிதான் இன்றைய உலகின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. அறிவியல் கருவிகள் மனிதனின் உடல் உழைப்பைக் குறைக்கப் பயன்படவேண்டும் என்று பெரியார் விரும்பினார். மனித சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

கணிப்பான் என்று தமிழில் அன்று குறிப்பிடப்பட்ட கணினி மனிதனின் மூளை உழைப்பிலும் பங்குகொள்கிறது என்பதில் மகிழ்ச்சி தெரிவித்த பெரியார் அதற்கேற்ப தமிழும் அறிவியலில் வளர்ச்சி பெற வேண்டும் என்றார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி வாங்கிய அந்தக் கணினிதான் அநேகமாக தமிழ்நாட்டில் வாங்கப்பட்ட முதல் கணினியாக  இருக்க வேண்டும். அக்கருவியை 1970லேயே பெரியார் பார்த்தும்விட்டார் என்பது வியப்பான செய்திதானே!

 

அய்.பி.எம் 1620

அய்.பி.எம்.1620 என்ற கணினி 1959ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. மொத்தம் 2 ஆயிரம் கணினிகள்தான் தயாரித்திருக்கிறார்கள். அப்போதே இதன் விலை மிக அதிகம். இந்தியாவில் ஒன்றிரண்டு கணினிகளே வாங்கப் பட்டன. அதில் ஒன்றை சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி வாங்கியுள்ளது.

 

– பிஞ்சு மாமா

20
தெரிந்து கொள்வோம்தெரிந்து கொள்வோம்6th September 2011
அறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 156th September 2011அறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15

மற்ற படைப்புகள்

2013_sep_pinju-13
செப்டம்பர்
5th September 2013 by ஆசிரியர்

பூமியை சுற்றிவர 6 மணி நேரம் போதும்

Read More
2011_september_arkimidies
செப்டம்பர்
27th August 2011 by ஆசிரியர்

ஆராய்ச்சிக்கு அடிகோலிய முதன்மை ஆராய்ச்சியாள்ர்

Read More
2011_september_3-3
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

கதைகேளு கணக்குப்போடு

Read More
2011_september_SEPTEMBER-2011-Pages-3
செப்டம்பர்
27th August 2011 by ஆசிரியர்

எப்படி? எப்படி?

Read More
2011_september_3-4
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

கோழி மொழி

Read More
2011_september_3-6
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

அடங்கா ஆர்வம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p