• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலகு சூழ் ஆழி

2011_september_ULAKU
செப்டம்பர்

பசுபிக் பெருங்கடல் 1 உலகில் மிகப் பெரியது பசுபிக் பெருங்கடல்.  பூமியின் 3இல் 1 பகுதியில் பரந்து விரிந்துள்ளது.  அது வடக்கே ஆர்க்டிக் துருவத்திலிருந்து தெற்கே அண்டார்டிகா வரை நீண்டுள்ளது.  அப்பெருங்கடல் ஆசியா, ஆஸ்திரேலியா, வட, தென் அமெரிக்கா கண்டங்களுக்கிடையே விரிந்துள்ளது.  இப்பெருங்கடலில் 20,000 எரிமலைத் தீவுகளும், பவளத் தீவுகளும் உள்ளன.  மிக ஆழமான பெருங்கடல் இதுவே.  மரியானா (Mariana)  என்ற நீண்ட ஒடுக்கமான பள்ளத்தின் ஆழம் 11,033 மீட்டர் (36,197 அடி).  இப்பெருங்கடலின் வழியே மிக முக்கியமான வாணிபம் நடைபெறுகிறது.  ஏனெனில், இதன் கரையில் உலகத்தின் செல்வம் மிக்க நாடுகள் பல உள்ளன.  பசுபிக் என்றால்  அமைதி  என்று பொருள்.  ஆனால், இப்பெருங்கடலில் வலிமைமிக்க நீரோட்டங்கள் செல்கின்றன.  வானிலை மாற்றத்திற்கு அவை பெரும் காரணமாக உள்ளன.

பசுபிக் பெருங்கடல் – சில உண்மைகள்:-

பரப்பு – 16,52,41,000 சதுர கி.மீ. (6,38,00,000 சதுர மைல்கள்)

சராசரி ஆழம் – 4,200 மீ (13,800 அடி)

தீவுகளின் எண்ணிக்கை – 20,000 – 30,000

உயரமான மலை – ஹவாய் தீவில் உள்ள மௌனாயாகி (Mauna kea)
உயரம்

10,205 மீ (27,605 அடி)

பசுபிக்கில் உள்ள தீவுகள்:-

பசுபிக் பெருங்கடலில் பல பெரிய தீவுக்கூட்டங்கள் இருக்கின்றன.  தென் பசுபிக்கில் நியுகினியா (New guinea) நியூகாலிடோனியா (New caledonia), சொசைட்டி தீவுகள் (Society Islands), சாலோமன் தீவுகள் (Salomon Islands) முதலிய தீவுகள் இருக்கின்றன.  வட பசுபிக்கில் ஹவையா (Hawaiiah) தீவுகள் , பிலிப்பைன் தீவுகள், ஜப்பான், மேரியானா முதலிய தீவுகள் இருக்கின்றன.

பவளத் தீவுகள்:- (Coral Islands)

வெப்பம் மிகுந்த தெற்கு பசுபிக் பெருங்கடல் பவளப் பாறைகள் உண்டாக உதவுகிறது.  ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்கள் பவளப் பாறைகளாலும், பவளப் படிவங்களாலும் ஆனவை.  பெரும்பாலான பவளத் தீவுகள் அளவில் சிறியன.

ஹவாய் தீவுகள்: (Hawaii Islands)

இத்தீவுக் கூட்டங்கள் அமெரிக்க அய்க்கிய நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டவை.  எரிமலைகளால் புதிய தீவுகள் உண்டாகின்றன.  ஹவாயில் உள்ள 2 எரிமலைகள் எரிமலைக் குழம்பை (Lava) காற்றில் கலந்து பீச்சி அடிக்கின்றன.

இராணுவத் தலங்கள்:-

பசுபிக்கில் உள்ள பல தீவுகள் அய்க்கிய, அமெரிக்க நாடுகளின் தலங்களாக உள்ளன.  ஹவாய் தீவில் உள்ள குவாம் (Guam) என்ற இடத்தில் கடற்படைத் தளமும், வேக் (wake) என்ற இடத்தில் விமானப்படைத் தளமும் உள்ளன.  ஜான்ஸ்டன் (Johnston) என்ற பகுதி இரசாயன ஆயுதங்களையும், நச்சு சார்ந்த வாயு நிறைந்த ஆயுதங்களையும் வைத்திருக்க உதவுகின்றது.

பறவைகள் சரணாலயம்:-

மக்கள் குடியேறா சில பேக்கர் (Baker), ஹௌலாண்ட் (Howland), ஜார்விஸ் (Jarvis)ஆகிய தீவுகளில் இலட்சக்கணக்கான கடல் பறவைகள் வாழ்கின்றன.

25
சுடோகுசுடோகு6th September 2011
உலகு சூழ் ஆழி2nd October 2011

மற்ற படைப்புகள்

2011_september_WORLDCOUNTRY
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

உலகநாடுகள் – சா டோம் மற்றும் பிரின்சிப்

Read More
செப்டம்பர்
3rd October 2011 by ஆசிரியர்

புத்தர் – 21

Read More
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

குட்டிக்கதை

Read More
2011_september_3-4
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

கோழி மொழி

Read More
2011_september_2-2
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

மனித மூளை சுருங்குமா?

Read More
2011_september_PERI
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

பெரியார் 133 தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p