• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by கருத்தோவியன்

சாதனைப் பிஞ்சு : பதினொரு வயது புத்தக ஆசிரியர்!

19
ஆகஸ்ட் 2023பிஞ்சு 2023பிஞ்சுகள் பக்கம்

‘குழந்தைகளை குழந்தைகளாகவே பார்க்க வேண்டும்; அவர்களை எதற்கும் கட்டாயப்படுத்திப் பழக்கக் கூடாது’ என்பது சரியே! ஆயினும் பிஞ்சு வயதிலேயே அறிவாய் வளரும் பிள்ளைகளைப் பாராட்டி மகிழத்தானே வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரியாரியக் குடும்பங்களின் கிளைகளில் ஒன்றான, லண்டனில் வசிக்கும் மருத்துவர் மு.வெங்கடேஷ், மருத்துவர் சந்தனா ஆகியோரின் 11 வயது பெரியார் பிஞ்சு நவீனா, ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதி, ‘அடடே’… என்று வியப்படைய வைத்திருக்கிறார்! 5 வயதிலேயே நவீனா எழுதிய படைப்பு நமது “பெரியார் பிஞ்சு” இதழில் வந்துள்ளது.அதுதான் அவரின் முதல் படைப்பு!

‘The book that changed my world’ (என்னுடைய உலகை மாற்றிய புத்தகம்) என்ற நவீனாவின் புத்தகத்தை 15.7.2023 அன்று சனிக்கிழமை, சென்னையில் இருக்கும் அறிஞர் பெருமக்கள் சூழ, ஆசிரியர் தாத்தாவே வெளியிட, பேரா.சுப.வீரபாண்டியன் இந்நூலைப் பெற்றுக்கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில், ஆசிரியர் தாத்தா நவீனாவுக்கு ஒரு எழுதுகோலைப் பரிசாகக் கொடுத்து, “நவீனாவின் எழுதுகோல், அவருடைய (நவீனா) உலகை மட்டுமல்ல, மற்றவர்களின் உலகையும் மாற்றும் வல்லமை படைத்தது!” என்று பாராட்டினார். பிறகு மறக்காமல், நவீனாவின் முதல் படைப்பு பெரியார் பிஞ்சு இதழில் வந்ததைச் சொல்லி, “நாங்கள் அன்றே நவீனாவை அடையாளம் கண்டுகொண்டோம்.

அன்று மலாலா! இன்று நவீனா!” என்று பாராட்டி மகிழ்ந்தார்.
அறிஞர் பெருமக்கள் இருந்த மேடையில் நவீனா, “இது என்னுடைய வாழ்க்கையில் மிகுந்த சிறப்புக்குரிய நாள்! எனக்குள் நான் செய்த பயணமே இந்தப்புத்தகம்! எனது ஆர்வத்தை ஊக்குவித்த எனது ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், புத்தக உருவாக்கத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி” என்று ஆங்கிலத்தில் ஏற்புரை வழங்கினார்.
“பெரியார் பிஞ்சு” யூடியூப் பக்கத்தில் நிகழ்ச்சியின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பாருங்கள்! நீங்களும் எழுத முயற்சியுங்கள்! வாழ்த்துகள் பிஞ்சுகளே!<

21
சிறார் கதை : வண்ணங்கள் ஏழா?சிறார் கதை : வண்ணங்கள் ஏழா?4th August 2023
எங்கள் பள்ளிக்கூடம்4th August 2023எங்கள் பள்ளிக்கூடம்

மற்ற படைப்புகள்

29
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025
3rd March 2025 by ஆசிரியர்

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பிறந்தநாள்: மார்ச் 10

Read More
2020_may_v35
பிஞ்சுகள் பக்கம்மே 2020
9th May 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2022_July_n1
ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
2nd July 2022 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025வரைந்து பழகுவோம்
3rd March 2025 by பி. இளங்கோ

ஓவியம் வரையலாம், வாங்க! : மாம்பழம்

Read More
2020_mar_v6
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2020
26th February 2020 by ஆசிரியர்

திராவிட வாசகர் வட்டம் நடத்தும் – பேரறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி 2020

Read More
2021_may_m30
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

எண்களுக்கு ஏற்ப வண்ணந் தீட்டுக!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p