• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by சரவணா இராஜேந்திரன்

சந்திரயான் 3 நிலவுக்கனின் கடைசி திக் நிமிடங்கள்

20
அக்டோபர் 2023அறிவியல்

ஆகஸ்ட் 23ஆம் தேதி, மாலை 6:30 அப்போதுதான் இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பதைபதைக்க வைக்கும் 15 நிமிடங்கள் தொடங்கின
அந்தப் பதினைந்து நிமிடங்களில்தான் நிலாவுக்கு மேலே 30 கி.மீ உயரத்தில் இருந்த சந்திரயான்-3 விண்கலத்தை நிலாவில் தரையிறக்கினார்கள்.
கடந்த முறை சந்திரயான் 2 திட்டம் இந்த கட்டத்தில்தான் தோல்வியடைந்தது. அப்போது நடந்த தவறுகளைச் சரிசெய்து, இந்த முறை அதிலிருந்து மேம்படுத்தப்பட்ட சந்திரயான் விண்கலத்தை அமைத்துள்ளார்கள்.
இந்த 15 நிமிடங்களில் சந்திரயான் எட்டு கட்டங்களாகத் தரையிறங்கும் செயல்முறையை மேற்கொண்டது. அந்த எட்டுக் கட்டங்கள் என்னென்ன, கடந்த முறை நடந்த தவறு இப்போது நடக்காமல் இருக்க என்ன மேம்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதைக் காண்போம்.

சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கும் 15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது?
விண்வெளியில் நிலாவை நோக்கிச் சென்ற சந்திரயான் விண்கலம் முதலில் நிலாவைச் சுற்றி வந்தது. பிறகு நீள்வட்டப் பாதையில் கோழி முட்டையைப் போன்ற வடிவில் சுற்றி வந்தது.நீள்வட்டப்பாதை நிலவுக்கு நெருக்கமாக இருக்கையில் 30 கி.மீ. தொலைவிலும் தூரத்தில் இருக்கும்போது 100 கி.மீ. தொலைவிலும் இருக்கும்.
அப்படிச் சுற்றி வரும் நேரத்தில், ஆகஸ்ட் 23ஆம் நாள் 30 கி.மீ. என்ற நெருக்கமான தொலைவில் இருக்கும் சூழலில் தான் நிலாவின் தென் துருவத்தில் மென்மையாகத் தரையிறங்கும் செயல்முறையை அது மேற்கொண்டது.
இந்த நேரத்தில் விண்கலம் தரையிறங்குவதற்குப் பயன்படும் அதன் நான்கு கால்களும் கீழ்நோக்கி இருக்காமல், பக்கவாட்டில் நோக்கியிருந்தது.
அதை எப்படி கீழ்நோக்கித் திருப்பி, தரையிறக்கினார்கள்
ஒருபுறத்தில் ராக்கெட்டின் எரிபொருள் எரியும்போது மறுபுறத்தில் விண்கலத்திற்கு தள்ளுவிசை கிடைக்கும்.

அதற்குப் பின்னால் இருப்பதும் ராக்கெட் தொழில்நுட்பம்தான். வைரத்தை வைரத்தால் அறுப்பது போல, ராக்கெட் உதவியுடன் விண்வெளிக்கு ஏவப்பட்ட சந்திரயான் விண்கலத்தை, அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலாவிலும் தரையிறக்கினார்கள்.
இதை ஓர் எளிமையான சான்றோடு கூற முடியும். தோட்டத்தில் நீர் பாய்ச்சும்போது குழாயில் இருந்து தண்ணீர் படுவேகமாக வரும். அப்போது, அதற்கு எதிர்புறத்தில் குழாயைப் பிடித்திருப்பவர் கைகளில் ஒரு தள்ளுவிசை உணரப்படும். அதுதான் ராக்கெட் தத்துவம்.
ஒருபுறத்தில் ராக்கெட்டின் எரிபொருள் எரியும்போது மறுபுறத்தில் தள்ளுவிசை கிடைக்கும். சந்திரயான் விண்கலத்தின் பக்கவாட்டில் தெரியும் கால்களில் சிறு ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். அவற்றை இயக்கினால் அதற்குப் பின்புறத்தில், அதாவது விண்கலத்தின் மேல் பகுதியில் ஒரு தள்ளுவிசை கிடைக்கும்.
தள்ளுவிசை காரணமாக வேகம் படிப்படியாகக் குறைந்து நிலாவிலிருந்து 7.4 கி.மீ. தூரத்திற்கு வரும்போது அதன் வேகம் மணிக்கு வெறும் 1200 கி.மீ. என்ற அளவுக்கு குறையும்.

அப்போது முன்னோக்கிச் செல்லும் விண்கலத்தின் வேகம் குறையும். அப்படி வேகம் குறைந்தால் அது மென்மையாகத் தரையிறங்கும்.
முப்பது கி.மீ. தொலைவில் நிலவைச் சுற்றி வரும்போது சந்திரயானின் வேகம் மணிக்கு 6000 கி.மீ. இந்தத் தள்ளுவிசை காரணமாக வேகம் படிப்படியாகக் குறைந்து நிலாவிலிருந்து 7.4 கி.மீ தூரத்திற்கு வரும்போது அதன் வேகம் மணிக்கு வெறும் 1200 கி.மீ. என்ற அளவுக்குக் குறையும். இந்த மொத்த நிகழ்வும் நடந்து முடிய 10 நிமிடங்கள் ஆகும். ஆக, தரையிறங்குவதற்கான அந்த 15 நிமிடங்களில் 10 நிமிடங்கள் முடிந்துவிட்டன. அடுத்த அய்ந்து நிமிடங்களில் சந்திரயான் ஏழு கட்டங்களை வெற்றிகரமாகத் தாண்டியது.

இரண்டாவது கட்டம்: நிலாவுக்கு இஸ்ரோ
விஞ்ஞானிகள் வடிவமைத்த கூகுள் மேப்
முடிவு செய்யப்பட்ட இடத்தில் தரையிறங்குவதற்கான பாதையில் சரியாகச் செல்கிறதா அல்லது பாதையைச் சிறிதளவு மாற்றி, சரிசெய்ய வேண்டுமா என்ற முடிவை இரண்டாவது கட்டத்தில் எடுப்பார்கள். இரண்டாவது கட்டத்தில் 7.4 கி.மீ உயரத்தில் இருந்த விண்கலத்தை படிப்படியாகக் குறைத்து 6.8 கி.மீ உயரத்திற்குக் கொண்டு வந்தார்கள்.இந்தக் கட்டத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் நடக்கின்றன. அதில் முதலாவதாக பக்கவாட்டில் பார்த்தவாறு இருக்கும் விண்கலத்தின் கால்களை தரையிறங்க வசதியாக கீழ்நோக்கித் திருப்ப வேண்டும். பக்கவாட்டில் இருக்கும் கால்களை சுமார் 50 டிகிரி அளவுக்குத் திருப்பினார்கள்.
இரண்டாவதாக, முடிவு செய்யப்பட்ட இடத்தில் தரையிறங்குவதற்கான பாதையில் சரியாகச் செல்கிறதா அல்லது பாதையைச் சிறிதளவு மாற்றி, சரிசெய்ய வேண்டுமா என்ற முடிவை இந்தச் சூழலில்தான் எடுக்க வேண்டும்.
நாம் கார் ஓட்டும்போது வழியைத் தெரிந்துகொள்ள கூகுள் மேப்பை பயன்படுத்துவது போலத்தான் இதுவும். விண்கலத்தில் இருக்கும் செயற்கை நுண்ணறிவுக் கருவி அதற்கான பணிகளைச் செய்யும். அதை எப்படிச் செய்யும்? மொபைல்களில் முகத்தை அடையாளம் கண்டு அன்லாக் செய்துகொள்வதற்காகப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் போலவே, விண்கலத்தின் செயற்கை நுண்ணறிவுக் கருவியில் ஒரு தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. அந்தத் தொழில்நுட்பத்தில் ஏற்கெனவே தரையிறங்கும் பகுதியைப் படம்பிடித்து பதிவேற்றியுள்ளார்கள்.படங்களை ஒப்பிட்டு விண்கலத்தின் வழித்தடப் பாதையை முடிவு செய்து செயற்கை நுண்ணறிவுக் கணினி விண்கலத்தை இயக்கும்.
இந்த இரண்டாவது கட்டத்தில் விண்கலத்தின் செயற்கை நுண்ணறிவுக் கருவி அதன் பாதையைப் படம்பிடித்துக்கொண்டே செல்லும். அது எடுத்த படங்களை, அதில் பதிவேற்றி வைக்கப்பட்டிருந்த படங்களோடு ஒப்பிட்டு, சரியான பாதையைக் கண்டறிந்து சென்றது.

மூன்றாவது கட்டம்: விண்கலத்தின் ‘ராக்கெட் பிரேக்’
தற்போது நிலாவின் மேற்பரப்பில் இருந்து 800 மீட்டர் உயரத்தில் விண்கலம் இருக்கும் வகையில் அதைக் கீழே இறக்குவதுதான் மூன்றாவது கட்டம்.
பக்கவாட்டில் 50 டிகிரிக்குத் திருப்பப்பட்ட விண்கலத்தின் கால்களை நேராகக் கீழ்நோக்கி இருக்கும் வகையில் திருப்புவதுதான் இந்தக் கட்டத்தில் செய்யப்படும் முதல் வேலை.
சைக்கிளில் பிரேக் பிடித்தால் வேகம் குறைவதைப் போல், ராக்கெட்டின் இஞ்சினை முன்புறமாக இயக்கியதால் விண்கலத்தின் வேகம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது.மணிக்கு 1200 கி.மீ வேகத்தில் சென்றுகொண்டிருந்த விண்கலம், 800 மீட்டர் உயரத்திற்கு வந்தபோது, அதன் முன்னோக்கிச் செல்லும் வேகம் பூஜ்யமாகிவிடும்.

நான்காவது கட்டம்: அடி மேல் அடி வைத்து நகரும் விக்ரம் லேண்டர்
விண்கலம் அடி மேல் அடி வைப்பதுபோல், 800 மீட்டர் உயரத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திற்கு வந்து சேர்ந்தது.
இந்தக் கட்டத்தில் விண்கலத்தின் ராக்கெட் விசையைக் குறைத்துவிட்டார்கள்.
அப்படி வந்து சேர்ந்ததும், 22 நொடிகளுக்கு அந்தரத்தில் அப்படியே மிதந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் விண்கலத்தில் இருக்கும் ‘இடர் உணர் ஆபத்து தவிர் கேமராக்கள்’ வேலை செய்யத் தொடங்கின.

தரையிறங்கும் விண்கலத்தின் நான்கு கால்களில் ஒன்று பாறை மேல் பட்டாலோ, குழிக்குள் சென்றாலோ விண்கலம் சாய்ந்துவிடும். சரிவில் தரையிறங்கினால் கவிழ்ந்து தலைகுப்புற விழுந்துவிடக்கூடும். இத்தகைய இடர்கள் இல்லாத இடத்தைக் கண்டறிந்தது.
அத்தகைய இடத்தைத் தேர்வு செய்யக்கூடிய செயற்கை நுண்ணறிவுக் கருவி சந்திரயான் 3இன் கணினியில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தில்தான் நிலாவின் எந்தப் பகுதியில் தரையிறங்குவது என்பதைத் துல்லியமாக அந்த விண்கலம் முடிவு செய்தது.
நிலா தனது ஈர்ப்புவிசையால் விண்கலத்தைப் பிடித்து இழுக்கும். அதற்குச் சரிசமமாக விண்கலத்தின் கால்களில் உள்ள ராக்கெட்டுகள் மேல்நோக்கிய தள்ளுவிசையைக் கொடுக்கும் வகையில் இயங்கும். இதன்மூலம் விண்கலம் கீழேயும் விழாமல் மேலேயும் செல்லாமல் அந்தரத்தில் இருக்கும்.
அப்போது கீழே இருக்கும் பகுதிகளில், பெரிய குழிகள் மட்டுமின்றி சின்னச் சின்னக் குழிகள், சிறு சிறு கற்கள் உள்பட அனைத்தையும் அதனால் மிகத் துல்லியமாக ஆராய முடியும். இப்படியே பக்கவாட்டில் நகர்ந்தபடி ஆராய்ந்து துல்லியமாக எந்த இடத்தில் தரையிறங்க வேண்டும் என்பதை முடிவு செய்தது.
(தொடரும்)

26
பெரியார்145 : பெரியார் பன்னாட்டுமைப்பு நடத்திய இரண்டு நாள் கொண்டாட்டம்பெரியார்145 : பெரியார் பன்னாட்டுமைப்பு நடத்திய இரண்டு நாள் கொண்டாட்டம்5th October 2023
நாள் என் செய்யும்? கோள் என் செய்யும்?5th October 2023நாள் என் செய்யும்? கோள் என் செய்யும்?

மற்ற படைப்புகள்

19
அக்டோபர் 2023பிஞ்சு 2023புதிர்கள்
7th October 2023 by பெரியார் குமார்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2020_feb_v11
அறிவியல்பிப்ரவரி 2020
28th January 2020 by ஆசிரியர்

தெரிந்தது சூரிய கிரகணம் முறிந்தது மூடநம்பிக்கை

Read More
2021_jun_v18
அறிவியல்ஜூன் 2021
31st May 2021 by ஆசிரியர்

இது புதுசு! – அய்ன்ஸ்டீனுடன் பேசலாங்களா?

Read More
7
அறிவியல்டிசம்பர் 2024பிஞ்சு 2024
7th December 2024 by முனைவர் சு. தங்கலீலா

அறிவியல் மனப்பான்மை: ஜோதிடம் அறிவியலா?

Read More
2023_april_22
அறிவியல்ஏப்ரல் 2023
5th April 2023 by ஆசிரியர்

அறிவியல் :”ஃபேனைப் பன்னெட்டுல வைங்க”

Read More
17
அக்டோபர் 2023பிஞ்சு 2023பிஞ்சுகள் பக்கம்
7th October 2023 by பி. இளங்கோ

ஓவியராகலாம் வாங்க! : கிளி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p