• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by விழியன்

”எனக்கு மீன்களைப் பிடிக்கணும்”

24
கதை கேளு கதை கேளுடிசம்பர் 2023பிஞ்சு 2023

”எனக்கு மீன்களைப் பிடிக்கணும்” இதனை ஒன்றின் சொல்லிக்கொண்டே இருந்தான். அவன் நண்பர்கள் இரண்டின் மற்றும் மூன்றின் இதனைக் கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டனர்.
“கப்பல்ல போய் மீன் பிடிக்கலாமா?” என்பான்.
“இல்லை” என்பார்கள்.
“படகுல போய் மீன் பிடிக்கலாமா?” என்பான்.
“இல்லை” என்பார்கள்.
“கட்டுமரத்தில் போய் மீன் பிடிக்கலாமா?” என்பான்.
“இல்லை” என்பார்கள்.

தூண்டிலும் மீன்களுக்கு இரையும் இருந்தால் போதும் என முடிவிற்கு வந்தனர். அது நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்னர் தெரியவந்தது. தூண்டிலுக்கு எங்கே செல்வது? யாரிடமாவது கேட்டால் ”போய் படி! இதெல்லாம் வேண்டாம்” என்கிறார்கள். மூவரும் சேர்ந்து அவர்களே ஒரு தூண்டில் தயார் செய்துவிட்டனர். கொஞ்சம் மண்புழுக்களையும் சேகரித்தனர். முதலில் கடல் மணலில் புழுக்களைத் தேடி ஏமாந்தனர். கருவாடுகூட வைக்கலாம் என்றான் மூன்றின்.
எல்லாம் தயார். இரவு ஒன்பது மணிக்கு மூவரும் இரண்டின் வீட்டு வாசலில் சந்தித்தனர். கடற்கரைக்கு மெல்ல நடந்தனர். அன்று பவுர்ணமி. முழு நிலவு நன்றாகத் தெரிந்தது. ஆங்காங்கே மேகங்கள். அவை வெண்மேகமா கருமேகமா தெரியவில்லை. மேகங்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன.

“அடேய், இவ்வளவு அலை வருதே இங்கே மீன் வருமா?” என்றான் மூன்றின்.
“எனக்கு மீன்களைக் பிடிக்கணும்” – ஒன்றின்.
“அதுக்குத்தான் வந்திருக்கோம். ஆனால் மீன்கள் கரைக்கு வருமா?” என்றான் இரண்டின்
பேசிக்கொண்டே அமர்ந்து இருந்தனர். அப்போது ஓர் அதிசயக் காட்சியைப் பார்த்தனர். தூரத்தில் பெரிய பெரிய மீன்கள் கடல் மட்டத்தைவிட்டு மேலே துள்ளிக் குதித்தன. குதிப்பதோடு நிற்கவில்லை. அது மேகத்தின் மீது குதித்து மேலே மேலே தாவின. சில பெரிய மீன்கள் நிலா வரைக்குமே தாவின.

“என்னடா இது?” என மூவரும் வியந்து பார்த்தனர்.
இதே போல மீன்கள் துள்ளுவதைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். இப்படி அவர்கள் எப்போதும் பார்த்ததே இல்லை. நிலாவின் உயரத்திற்கு மேலேயும் மீன்கள் தாவின. திடீரென ஒரே இருட்டு.
“நிலா எங்கே போச்சு?” – என்றான் இரண்டின்.
“மேகத்துக்குப் பின்னாடி மறைந்திருக்கும்” என் நான்- மூன்றின்.
அப்போதுதான் ஒன்றினைக் கவனித்தனர். கரையில் அலை அடிக்கவே இல்லை. ஏரியில் இருப்பதைப்போல நீர் ஆடாமல் அசையாமல் இருந்தது.

மேலும், “இப்ப தூண்டில் போடலாம்டா” என்றான் ஒன்றின்.
“எனக்கு மீன்களைப் பிடிக்கணும்” என்றான் மகிழ்வாக.
மீன் ஒன்று சிக்கியது போல இருந்தது. ஒன்றின் மட்டும் தூண்டிலை இழுத்தான். அவனால் முடியவில்லை. இரண்டின் கை கொடுத்தான். இருவராலும் இழுக்க முடியவில்லை. மூன்றினும் கைகொடுத்தான். இப்போது மெல்ல ஏதோ கரைக்கு வருவது தெரிந்தது. மிகப்பெரிய மீன்.

“வா போதும். கிளம்பலாம்” என்றான் ஒன்றின்.
“என்னது போதுமா?” – ஆச்சரியமாகப் பார்த்தனர் இருவரும்.
“ஆமா, போதும். மீன்களைப் பிடிக்கணும் திரும்பிப் போகலாம். இதைக் கடலில் விட்டுடலாம்” என்றான்.
வாயிலிருந்து தூண்டிலை எடுக்க முயன்றனர். சிக்கலாக இருந்தது. “மீனே வாயைத்திற” என்றான் ஒன்றின். ‘ஆ’ எனத் திறந்ததும் ஒரே ஆச்சரியம். மீனின் வாய்க்குள் நிலா! மிக ஒளிமயமாக இருந்தது. ஒன்றின் மீனின் வாய்க்குள் கைவிட்டு நிலாவை வெளியே எடுத்தான். பலம் கொண்டு கடலில் வீசினான். உடனே அலைகள் அடிக்கத் துவங்கின. வேக வேகமாகப் பலமாக அலைகள் அடிக்க அடிக்க நிலா துள்ளியது. மீன்களைப்போலத் தாவியது. பின்னர் மேகத்தின் மீது தாவித்தாவி மீண்டும் அது முதலில் இருந்த இடத்தை அடைந்தது.
டக்கென நிலா மூவரையும் பார்த்துக் கண்ணடித்தது.

22
குறும்படப் போட்டியில் வெற்றி பெற்று ஜப்பானுக்குச் சென்ற அரசுப் பள்ளி மாணவிகுறும்படப் போட்டியில் வெற்றி பெற்று ஜப்பானுக்குச் சென்ற அரசுப் பள்ளி மாணவி13th December 2023
ஓவியம் வரையலாம், வாங்க! சிறுமி13th December 2023ஓவியம் வரையலாம், வாங்க! சிறுமி

மற்ற படைப்புகள்

2023_jan_38
ஜனவரி 2023பிஞ்சுகள் பக்கம்
6th January 2023 by ஆசிரியர்

செயத்தக்க… ப.மோகனா அய்யாதுரை

Read More
21
கதைசெப்டம்பர் 2023பிஞ்சு 2023
9th September 2023 by இனியன்

குறுந் தொடர் – 3 : அம்முவுக்கு வயது 11

Read More
2023_jan_18
இலக்கணம்ஜனவரி 2023
5th January 2023 by ஆசிரியர்

 தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

Read More
2023_feb_12
கோமாளி மாமாபிப்ரவரி2023
2nd February 2023 by ஆசிரியர்

கோமாளி மாமா-34 : வானம் வசப்படும்

Read More
27
ஜூலை 2023பிஞ்சு 2023பிஞ்சுகள் பக்கம்வரைந்து பழகுவோம்
20th July 2023 by பி. இளங்கோ

ஓவியராகலாம் வாங்க!

Read More
2023_mar_30
கதை கேளு கதை கேளுமார்ச் 2023
4th March 2023 by விழியன்

கூலிங் க்ளாஸ் குணாளன்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p