• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சுவையான செய்திகள்

2012_february_FEB-2012-Pages-29
பிப்ரவரி

நேர்மையுடன் இருந்தவர்

ஏதென்ஸ் நகரத்தின் ஆட்சிக் குழுத் தலைவர்களுள் ஒருவராக சாக்ரடீஸ் இருந்தபோது, தளபதிகள் 10 பேரைக் கொண்டு வந்து குற்றவாளிகள் என்று நிறுத்தியி ருந்தார்கள். ஆர்கினூசா போர் முடிந்திருந்த நேரம் அது.

மற்ற ஆட்சிக்குழுத் தலைவர்கள் அனைவரும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கும் விதமாக, சாக்ரடீசை ஒரு மனதாக முடிவெடுக்கச் சொன்னார்கள்.

அதிகாரம் கையில் இருக்கிறது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களைத் துன்புறுத்தக் கூடாது என நினைத்த சாக்ரடீஸ், தளபதிகளைக் காப்பாற்றினார்.

உடனிருக்கும் ஆட்சிக் குழுத் தலைவர்களுக்கு எதிராக, அந்தத் தளபதிகளின் தண்டனையைத் தடுத்து நிறுத்தினார். பொறுப்பிலிருக்கும் பிற தலைவர்கள் கோபம் கொண்டனர். சாக்ரடீசைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கி, சிறையில் வைக்கத் தயாராக உள்ளனர் என்று தெரிந்தும் உண்மையின் -_ நேர்மையின் பக்கமே இருந்தார் சாக்ரடீஸ்.

நம்பிக்கை

கன்பூசியசின் சீடர்களுள் ஒருவர், ஒரு நல்ல அரசின் அடிப்படைத் தேவைகள் எவை என்று கேள்வி கேட்டுள்ளார். உடனே கன்பூசியஸ், உணவு, போர்க்கருவிகள், மக்களின் நம்பிக்கை என்று பதில் சொல்லியுள்ளார்.

இதனைக் கேட்ட சீடன், இந்த மூன்றுள் ஒன்றை விடவேண்டும் என்ற நிலை வந்தால் எதை விடுவீர்கள் என்றதும், போர்க்கருவிகள் என்று கூறியுள்ளார்.

மற்ற இரண்டினும் ஒன்றை என்றால்… என்றதும், உணவு என்று சொல்லியுள்ளார். விடாத சீடன், உணவு இல்லை என்றால் மக்கள் இறந்து விடுவார்களே என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்.
உடனே கன்பூசியஸ், காலம்காலமாக மரணம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், மக்கள் தம்மை ஆள்பவரிடம் நம்பிக்கை இழந்துவிட்டால் அவர்களின் நிலை பரிதாபத்துக்கு உரியது என்று கூறியுள்ளார்.

 

தியாக உணர்வு

ஆங்கிலேய அரசின் தளபதியாக, இருந்தவர் சர். பிலிப் சிட்னி. ஒருமுறை போரில் கலந்து கொண்டு போரிட்டார். போரில் பல வீரர்கள் உயிரிழந்தனர். சிட்னி மீதும் குண்டு பாய்ந்தது. இறக்கும் நிலையிலிருந்த சிட்னிக்குத் தாகம் அதிகமாக எடுத்தது. அவர் தண்ணீர் கேட்டதும் ஒருவர் கொண்டுவந்து கொடுத்தார்.

கையில் வாங்கிய தண்ணீரைக் குடிக்கப் போன நேரத்தில் அருகிலிருந்த மற்றொரு வீரன் தீனக்குரலில் குடிக்கத் தண்ணீர் கேட்டுக் கொண்டிருப்பது அவருக்குக் கேட்டது.

உடனே, என் தேவையைவிட அந்த வீரனின் தேவை முக்கியமானது என்று சொல்லி தனக்குக் கொடுத்த தண்ணீரை அந்த வீரனுக்குக் கொடுக்கச் சொன்னார்.

வீரன் உயிர் பிழைத்தான். சிட்னி மரணமடைந்தார்.

சிட்னியின் தியாக உணர்வினைப் பாராட்டிய ஆங்கிலேய அரசு அவருக்கு சர் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியது.

மதிப்பதே நியாயம்

பிரான்ஸ் நாட்டினை ஆட்சி செய்தவர் மாவீரன் நெப்போலியன். இந்த மாவீரன் இங்கிலாந்து நாட்டின் மருத்துவரும் விஞ்ஞானியுமான ஜென்னர்மீது அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.

மருத்துவர் ஜென்னர் கொள்ளை நோய் எனப்படும் வைசூரி நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர்.

எதிரி நாட்டு விஞ்ஞானியை ஏன் மதிக்கிறீர்கள் என்று நெப்போலியனிடம் கேள்வி கேட்டனர். அதற்கு, மன்னர்களின் பெருமை போரில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொல்வதில் இருக்கிறது-. அவர்களால் தாங்கள் அழித்த உயிர்களை மீண்டும் தர இயலாது. ஆனால், டாக்டர் ஜென்னர், வைசூரி நோயால் இறக்காமல் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் சேவையைச் செய்துள்ளார். எனவே, ஒரு மன்னர் விஞ்ஞானியை மதிப்பதுதான் நியாயம் என்ற கூறியுள்ளார் மாவீரன் நெப்போலியன்.

27
விடுகதை4th February 2012
அறிஞர்கள் வாழ்வில்4th February 2012அறிஞர்கள் வாழ்வில்

மற்ற படைப்புகள்

2012_february_FEB-2012-Pages-19
பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

சுடோகு

Read More
2012_february_FEB-2012-Pages-20
பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

எது நல்ல சாமி?

Read More
பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

விடுகதை

Read More
2012_february_FEB-2012-Pages-37
பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

விடைகள்

Read More
2012_february_pinju2
பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2012_february_FEB-2012-Pages-9_02
பிப்ரவரி
1st February 2012 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p