• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by அபி

துணுக்குச் சீட்டு – 14 : தண்ணீரில் நடக்கும் பூச்சி

6
பிஞ்சு 2024மார்ச் 2024

விறுவிறுன்னு தரையில நடக்குற மாதிரி, வேக வேகமா தண்ணீரில நடந்தா எப்படி இருக்கும்? நம்மளோட கால்கள வச்சு நம்மளால நடக்க முடியாதுதான், ஆனா வாட்டர் ஸ்டிரைடர் (water strider) எனும் பூச்சி ஜாலியா, வேகமா தண்ணியில, சொய்ங்க்ன்னு ஓடக் கூட முடியும் என்பது தெரியுமா?! நம்மளால முடியல; ஆனா எப்படி அந்தப் பூச்சியால மட்டும் அதோட கால்கள வச்சி தண்ணியில ஓட முடியுது?
கொஞ்சமா இந்தப் பூச்சியைப் பத்தி யோசனையை ஒத்தி வச்சுட்டு, இப்போ இயற்பியல் தத்துவத்தைப் பார்ப்போமா!
தண்ணீரில் மூலக்கூறுகள் இருக்கு அல்லவா, இதுல, ஒவ்வொரு மூலக்கூறும் தன்னைச் சுற்றி இருக்கும் மற்ற மூலக்கூறுகள் அதனோட நண்பனா இருக்கணும்னு நினைக்கும். அதனால் அதைச் சுற்றி இருக்கும் மூலக்கூறுகளை அதன் பக்கம் இழுக்கும். இப்படி எல்லாம் ஒன்னு மாத்தி ஒன்னு இழுக்கும் போது, தண்ணியோட மேல் பரப்புல இருக்கும் மூலக்கூறுகளை அதுக்குக் கீழ இருக்கும் மூலக்கூறுகள் இழுக்கும். ஆனால், மேல் பரப்புல இருக்கும் மூலக்கூறுகளுக்கு அதோட மேல் புறத்தில் இழுக்கப்படுவறக்கு தண்ணீயோட வேற எந்த மூலக்கூறும் இல்லாததால மேல் பரப்பில் இருக்கும் மூலக்கூறுகள் ஒரு கோடு வரைந்த மாதிரி சீராக இருக்கும். இப்படி நீரின் மூலக்கூறுகள் மேல் பரப்பில் இருப்பதை, மேற்பரப்பு இழுவிசைன்னு (Surface Tension) சொல்லுவோம்.

குவளை நிரம்பி வழியப்போகும் அளவுக்குத் தண்ணீரை ஊற்றினால், யாரோ அணை கட்டிய மாதிரி சீராக ஒரு bubble மாதிரி இருக்கும் அல்லவா? அது மேற்பரப்பிழுவிசையாலதான். மேற்பரப்பிழுவிசையைத் தாண்டி ஏதாவது ஒரு பொருள் தண்ணீருக்குள்ள போகணும்னா, அதுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு எடை/அழுத்தம் தேவை; அல்லது அந்தப் பொருள் ஈரமாகும் தன்மை கொண்டதா இருக்கணும். இப்போதைக்கு இவ்வளவு இயற்பியல் விளக்கம் போதும்.
இப்போ நம்ம வாட்டர் ஸ்ட்ரைடருக்கு வருவோம். இந்த நீரில் மிதக்கும் பூச்சியோட கால்களில் ரோமத்தாலான போன்ற செண்டு வடிவம் இருக்கும் (அதாவது கிளைடரின் கால்களில் உள்ளதைப் போல) இந்த ரோமச் செண்டுக்கும் தண்ணீருக்கும் சண்டை போல, ரெண்டுத்துக்கும் ஒத்துப் போகாது. இப்படி இருக்கும் பொருள்களை hydrophobic-ன்னு சொல்லுவோம். இப்படி hydrophobic ஆக இருக்கும் பொருள்களின் மேல, தண்ணீர் ஒட்டாது, மாறாக, தாமரை இலை மேல நீர் இருக்குற மாதிரி அந்த ரோமச் செண்டுடைச் சுற்றி மேற்பரப்பிழுவிசையால தண்ணீர், உருளையாக இருக்குமே தவிர, அந்தச் செண்டு ஈரம் ஆகாது. அதனால் தண்ணீர் மேல மிதக்கும் தன்மை வாய்ந்ததாக இந்தப் பூச்சி இருக்கு. அதெல்லாம் சரி, இந்தப் பூச்சிக்கு எடை இருக்கும் அல்லவா, அப்புறம் எப்படி தண்ணீரில் மூழ்கவே இல்லை?

இங்குதான் அழுத்தம் (pressure) பயன்படுது. பொதுவாக, அகலம் சின்னதாக இருக்கும் கைப்பட்டை கொண்ட பையைத் தூக்கும்போது, பையில் கொஞ்சம் எடை இருந்தாலும் கை ரொம்ப வலிக்கும். அதுவே, அதே அளவு எடையை அகலம் அதிகமான கைப்பட்டை கொண்ட பையைத் தூக்கும்போது, கை வலி குறைவாக இருக்கும். ஏனென்றால், பரப்பளவு அதிகமானால், அந்த பொருளின் எடை சம அளவில் பரவுவதற்கு நிறைய இடம் இருக்கும் அதனால், அழுத்தம் குறைவாக இருக்கும், நமக்கும் கை வலி குறைவாக இருக்கும்.
இப்போ, நம்ம பூச்சி என்ன பண்ணும்னா, அதனோட நான்கு கால்களையும் ஒன்றுக்கு ஒன்று தூரம் அதிகமா இருக்கும்படி வச்சிக்கும். அதனால் நான்கு கால்களுக்கும் நடுவுல இடம் அதிகமா இருக்குறதால தண்ணீர் மீதான அழுத்தம் குறைவாக இருக்கும். இந்த அழுத்தம் தண்ணீரோட மேற்பரப்பிழுவிசையை உடைக்கும் அளவுக்கு இருக்காது. அதனால, வாட்டர் ஸ்ட்ரைடர் தண்ணீருக்குள்ள மூழ்காம சொய்ங்ன்னு போகுது. ஒருவேளை, அந்தப் பூச்சி, தரையில் இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி அங்கே இருக்கும் மற்ற உயிரினங்களைப் பாத்து, “வரட்டா?”-ன்னு சொல்லுமோ!<

23
PERIYAR'S PERSPECTIVE ON WOMEN'S RIGHTSPERIYAR'S PERSPECTIVE ON WOMEN'S RIGHTS5th March 2024
ஊருக்குப் போய் வந்த கரடி - 7: ”ஜாதியா அப்படின்னா...?5th March 2024ஊருக்குப் போய் வந்த கரடி - 7: ”ஜாதியா அப்படின்னா...?

மற்ற படைப்புகள்

7
2024அறிவியல்ஜுன் 2024பிஞ்சு 2024
5th June 2024 by ப. மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 3 : செங்குத்துப் பாறை மேல் குகைக் கட்டிடம்

Read More
31
செப்டம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
4th September 2024 by ஆசிரியர்

அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உடையணியில்

Read More
1
ஜனவரி 2024பாடல்கள்பிஞ்சு 2024
1st January 2024 by ஆசிரியர்

சுத்தமே சுகமாகும்

Read More
4
பாடல்கள்பிஞ்சு 2024பிப்ரவரி 2024
7th February 2024 by ஆசிரியர்

வெல் வெல் வெல்!

Read More
23
கதைடிசம்பர் 2024பிஞ்சு 2024
7th December 2024 by சா.கா.பாரதி ராஜா

நல்லடதைச் செய்வோமே!

Read More
14
2024ஜுன் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
5th June 2024 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – 4 : மரங்களின் டாக்டர் மரங்கொத்தி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p