• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆ.சு.கவின்

அச்சச்சோ…! அமேசான் அனகோண்டா!

21
2024கட்டுரைமே 2024

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். நம் அனைவருக்கும் பாம்பு என்றால் ஒரு வித பயம் கண்டிப்பாக உள்ளுக்குள் ஏற்படும். இருந்தாலும் தண்ணீர் பாம்பு, நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்ற சில பாம்புகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். சில பேர் பார்த்திருப்போம்.
அனகோண்டா பாம்பை அனைவரும் படத்தில் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம், ஆனால், நேரில் பார்த்திருக்க மாட்டோம். அதேபோல பெரும் காடுகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது அமேசான் காடுதான். அந்தக் காட்டில் பாம்பு இனங்கள் பல வாழ்ந்தாலும் அனகோண்டா பாம்புதான் உலகிலேயே அதிகமான எடை கொண்டது. நாம் அனகோண்டா பாம்பைப் பற்றி இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

உலகிலேயே மிக நீளமான அனகோண்டா பாம்பு பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய அந்த அனகோண்டா பாம்பு அண்மையில் உயிர் இழந்தது. அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த இந்த அனகோண்டா பாம்பை பிரயன் ப்ரை என்பவருடைய அறிவியல் ஆராய்ச்சிக் குழு அண்மையில் கண்டுபிடித்தது. இந்தப் பாம்பு பற்றிய ஆவணப்படம் ஹாட்ஸ்டார் தொலைகாட்சியில் வெளியானது. இந்த நிலையில் மர்ம நபர்களால் அந்தப் பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டதாக அங்கு வாழும் பழங்குடியினர் சிலர் சந்தேகம்
தெரிவித்துள்ளனர். அனா ஜூலியா என்று பெயரிடப்பட்ட 26 அடி நீளமும், 200 கிலோ எடையும் கொண்ட பச்சை அனகோண்டா தான் அண்மையில் இறந்த பாம்பாகும்.

அனகோண்டா பாம்பு தென் அமெரிக்காவிலே நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் வாழும் மிகப்பெரிய பாம்பினங்களில் ஒன்று. இது பெரும்பாலும் தென் அமெரிக்காவின் வட பகுதி நாடுகளிலேயே காணப்படுகின்றது (பெரு, கொலம்பியா, பொலிவியா, பிரேசில், வெனிசுலா). இப்பாம்பைப் பற்றி விளக்கமான அறிவு 1992 ஆம் ஆண்டு வரை ஏதும் அதிகமாய் இல்லை.
நன்றாக வளர்ந்த முழுப்பாம்பு சுமார் 8-10 மீ நீளம் இருக்கும் (20-30 அடி), எடையில் 100-200 கிலோ இருக்கும். 30 செ.மீ தடிமன் இருக்கும். உலகிலேயே அதிகமான எடை கொண்டதும் இப்பாம்புதான் (250 கிலோ இருந்ததாக கண்டு இருக்கின்றனர்). இது பெரும்பாலும் எலி, ஆடு, மான், தேப்பிர் என்னும் விலங்கு, சிறு கைமன் என்னும் முதலைகள் மற்றும் பறவைகள் முதலியவற்றைச் சுற்றி வளைத்து, நொறுக்கிக் கொன்று, விழுங்கும். போவா, மலைப்பாம்பு போன்றே இதுவும் இரையை விழுங்குகின்றது. ஆனால், நீர்நிலைக்கு இழுத்துச்சென்று நீரில் மூழ்கடித்துக் கொல்லும் என்கிறார்கள். மாட்டிக்கொண்டால் சிறுத்தைப் புலியைக்கூட விழுங்கிவிடும்.

அனகோண்டா வகையில் பச்சை நிறம் கொண்டது, மஞ்சள் நிறம் கொண்டது, (மஞ்சளும் கருப்பும் கொண்டது) பொலிவியாவில் 2002 ஆம் ஆண்டில் லுட்ஸ் டிர்க்ஸன் (Lutz Dirksen) கண்டுபிடித்த பொலிவிய அனகோண்டா, பிரேசிலில் வடகிழக்கே காணப்படும் கருப்புத் திட்டுகள் கொண்ட வகை என சில அடையாளம் காணப்பட்டுள்ளன.
பாம்பு இனங்கள் அவற்றின் தோலுக்காகவும் இறைச்சிக்காகவும் வேட்டையாடப்படுவதால் அவை அழிந்து போவதுமல்லாமல் இயற்கை உயிரினச் சமநிலையும் பாதிக்கப்படும் அல்லவா? எனவே, பாம்புகளைக் கொல்லாமல் உயிர் சமநிலையைக் காப்போம்.

14
கதை கேளு... கதை கேளு... மெல்லிய தீடர் திருப்பம்கதை கேளு... கதை கேளு... மெல்லிய தீடர் திருப்பம்29th April 2024
அடேயப்பா...! - 2 : சர்வாக்ஸ் வாட்டன் ஏரி29th April 2024அடேயப்பா...! - 2 : சர்வாக்ஸ் வாட்டன் ஏரி

மற்ற படைப்புகள்

1
நவம்பர் 2024பாடல்கள்
4th November 2024 by ஆசிரியர்

சிறுவர் பாடல்: படிப்போம் பெரியார் பிஞ்சு!

Read More
பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்மே 2024
2nd May 2024 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2019_sep_a45
கட்டுரைகட்டுரைசெப்டம்பர் 2019
27th August 2019 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்

Read More
22
அக்டோபர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்புதிர்கள்
3rd October 2024 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா?

Read More
24
ஆகஸ்ட் 2024பாடல்கள்
1st August 2024 by ஆசிரியர்

சிறுவர் பாடல் – குரங்குக் கூட்டம்

Read More
7
2024பிஞ்சுகள் பக்கம்மே 2024
30th April 2024 by அபி

துணுக்குச் சீட்டு – 15

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p