• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by கீதா இளங்கோவன்

நூல் அறிமுகம் : ‘சாந்த நாயகம் ஆணா? பெண்ணா?’

10
2024பிஞ்சுகள் பக்கம்மே 2024

# உலக புத்தக நாள் – ஏப்ரல் 23 | # உலக சிறார் புத்தக நாள் – ஏபரல் 2
நூல் பெயர்:
‘சாந்த நாயகம் ஆணா?
பெண்ணா?’
விலை: ரூ. 50
பதிப்பாளர்: கவின்
கிடைக்குமிடம்:
இடையன் இடைச்சி நூலகம்
தொடர்புக்கு: 9841208152
Online book store:
www.tamilhaiku.com

“நீ பொண்ணு!
இப்படித்தான் முடி வளர்க்கணும்…
இப்படித்தான் நீ டிரஸ் போடணும்…
இப்படித்தான் இருக்கணும்…”
“நீ ஆண் பிள்ளை!
இப்படித்தான் நீ டிரெஸ் போடணும்…
நீ ஆம்பள சிங்கம், அழக்கூடாது…
இப்படித்தான் இருக்கணும்…”
இப்படியெல்லாம் உங்களிடம் சொல்கிறார்களா?
“ஏன் இப்படி ஆண், பெண் எனப் பிரிக்கிறாங்க?”
“இது சரியா?”
“இது நியாயமா?” என்ற கேள்விகள் உங்களுக்குத் தோன்றி இருக்கிறதா? எனக்கும் இந்தக் கேள்விகள் தோன்றியிருக்கின்றன. பலருக்கும் இந்தக் கேள்விகள் தோன்றலாம்.
“சாந்தநாயகம் ஆணா? பெண்ணா?” என்னும் இந்தக் கதைப் புத்தகம் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் என நம்புகிறேன்’ என்று இந்தக் கதைப் புத்தகத்தை வாசிக்கும் சிறார்களுக்குச் சொல்கிறார் நூலாசிரியர் அன்புத் தோழர் நர்மதா தேவி (Narmadha Devi).

குழந்தைப் பருவம் முதலே பாலினச் சமத்துவத்தைக் கற்றுக் கொடுப்பது அவசியம். ஆனால், சிறார்களுக்கு அவற்றைப் புரிய வைப்பது சவாலான பணி. அவர்களுக்கு நெருக்கமான சூழல்கள், கதாபாத்திரங்கள், மூலம் இணக்கமான மொழியில் கதைகளாகச் சொல்லி உணரவைக்கலாம்.
இதனை அழகாகச் செய்கிறது “சாந்தநாயகம் ஆணா? பெண்ணா?” கதைப் புத்தகம். ‘கசின் பர்ட்’ (Cousin Bert) என்ற பிரெஞ்சு குறும்படத்தை தமிழ்நாட்டுச் சூழலுக்குப் பொருத்தமாக, சிறார் படக்கதை நூல் வடிவத்திற்கு ஏற்பத் தழுவி வெளிவந்துள்ளது இந்நூல். ஓவியர் ஜீவானந்தம் அவர்களின் அழகான ஓவியங்களில், தோழர் நர்மதாவின் எழுத்தில் உருவான ஒரு பன்றிக் குடும்பத்தின் கதை, இந்தக் குட்டிப் புத்தகத்தில் வண்ணமயமாக விரிகிறது. குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் பாலினச் சமத்துவத்தை எளிமையாக, சுவாரசியமாக விளக்குகிறது. நூல் வடிவமைப்பும், உருவாக்கமும் அருமை!
‘சாந்தநாயகம் ஆணா? பெண்ணா?’ கதைப் புத்தகத்தை, உங்க வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நீங்க சந்திக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசளித்து பாலின சமத்துவத்தை அறிமுகப்படுத்தலாம் தோழர்களே!

30
சிறார் கதை : கதை சொல்லப் போறேன்சிறார் கதை : கதை சொல்லப் போறேன்30th April 2024
பறவைகள் அறிவோம் - 3 : தூக்கணாங்குருவி30th April 2024பறவைகள் அறிவோம் - 3 : தூக்கணாங்குருவி

மற்ற படைப்புகள்

2021_oct_v34
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
30th September 2021 by ஆசிரியர்

பெரியாரைத் தெரியுமா?

Read More
27
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by ஆசிரியர்

‘அன்பெழில்’ உண்டியல் அறிவுப்பணிக்கு!

Read More
2021_jul_v1
ஆகஸ்ட் 2021பிஞ்சுகள் பக்கம்
4th August 2021 by ஆசிரியர்

மன்னிச்சூ!

Read More
2022_june_10
ஜூன் 2022பிஞ்சுகள் பக்கம்
1st June 2022 by ஆசிரியர்

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் பேட்டி விடை:

Read More
33
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025
3rd March 2025 by ஆசிரியர்

பெரியாரைச் சந்தித்தால்…

Read More
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
30th September 2021 by ஆசிரியர்

”கண்டுபிடி என்னைக் கண்டுபிடி”

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p