• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by அருண் பகத்

பரிணாமம் – கற்கருவிகளைப் பயன்படுத்தும் காப்பசீன் குரங்குகள்!

29
2024கட்டுரைஜூலை 2024பிஞ்சு 2024

பரிணாமப் பாதையில் இன்னொரு மனித இனம்?

குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்றால், இப்போது ஏன் அது நிகழ்வதில்லை?” அறிவியல் பற்றிய பேசும் போது இந்தக் கேள்வியைச் சில நேரம் எதிர் கொண்டிருப்பீர்களே! இப்படி ஒரு கேள்வி பரிணாம மறுப்பாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
மனிதன் உள்ளிட்ட ஒவ்வொரு குரங்கினமும், பிற எல்லா உயிரினங்களும் பரிணாமம் அடைந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்தப் பரிணாமம் என்பது மனித நிலையை எட்டுவதாகவும் இருக்கலாம்; அல்லது அந்த நிலையை எட்டாத வளர்ச்சியாகவும் இருக்கலாம். மாறி வரும் சூழலுக்கேற்ப தகவமைப்புத் திறன்களை வளர்த்துக் கொள்வது என்ற அடிப்படையில் எல்லா உயிர்களும் பரிணாமம் அடைந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்தப் பரிணாம வளர்ச்சிப் போக்கில் மனித நிலை நோக்கிய வளர்ச்சியின் முதல் படியினை ஒரு பகுதி குரங்கினங்கள் எட்டியிருக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்திருக்கிறார்கள். பல லட்ச ஆண்டுகளுக்கு முந்தைய, நமது கற்கால மூதாதைகளின் நிலைக்கு சில குரங்குகள் வந்திருக்கின்றன.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் சில குரங்குகள் (நமது மூதாதை தான்) நிமிர ஆரம்பித்த பின், முன்னங்கால்கள் இரண்டையும் கைகளாகப் பயன்படுத்த ஆரம்பித்தன. அந்தக் கைகளால் கற்களையும், பெரிய எலும்புத் துண்டுகளையும் கருவிகளாகப் பயன்படுத்த ஆரம்பித்த கட்டம், அதுவரை இல்லாத ஒரு பெரும் மாற்றம் பூமியில் தொடங்கியது. கற்களை கருவிகளாகப் பிடித்து உபயோகிக்க ஆரம்பித்த அந்தக் கைகள் தான் இப்போது கணினிகளையும், ஸ்மார்ட் ஃபோன்களையும், James web தொலைநோக்கியையும் இயக்கிக் கொண்டிருக்கின்றன! கருவிகளைப் பயன் படுத்திய, கைகளைக் கட்டுப்படுத்திய மூளை அபார வளர்ச்சியை நோக்கி நகர்ந்ததன் விளைவுகள் இவை.
மனித இனம் கடந்து வந்த பாதையில் மீண்டும் காப்பசீன் வகைக் குரங்குகள் கைகளில் கருவிகளேந்தியுள்ளதை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார். தென் அமெரிக்காவை.

கடின ஓடுகள் கொண்ட விதைகளை உடைக்க கற்களை கச்சிதமாகப் பயன்படுத்துகின்றன இக்குரங்குகள். அவற்றின் பிள்ளைகள் இந்த உத்திகளை கூர்மையாகக் கவனிக்கவும் செய்கின்றன. அடுத்த கட்ட பரிணாமத்தை நோக்கிய ஆரம்பக் கோடுகளை வரைய ஆரம்பித்திருக்கின்றன இக்குரங்குகள்.
இக்குரங்குகள் 3000 ஆண்டுகள் கற்களைக் கருவிகளாகப் பயன்படுத்தியுள்ளன. என்பதற்கு தொல்லியல் ஆதாரங்களும் கிடைத்துள்ளன என்கிறார் லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரியில் தொல்லியலாளர் தாமஸ் ப்ராவிட். இதற்கு முன்பு 4300 ஆண்டுகளுக்கு முந்தைய இத்தகைய சான்று ஆப்பிரிக்காவில் கிடைத்துள்ளது
இவை மனித நிலைக்குப் பரிணாம வளர்ச்சி அடையுமா? நிகழலாம், நிகழாமலும் போகலாம். அல்லது இன்னும் சில லட்சம் ஆண்டுகளில் நம்மை விட மேம்பட்ட உயிரின ஒன்று தோன்றலாய். ஆனால், பரிணாமம் குறித்து மற்றுமொரு சான்றையும் அளித்திருக்கின்றன இக்குரங்குகள்.

20
நல்ல தமிழ்ப் பெயரை... ஈரோடு சோபிகா 'அன்பெழில்' ஆனது எப்படி?நல்ல தமிழ்ப் பெயரை... ஈரோடு சோபிகா 'அன்பெழில்' ஆனது எப்படி?15th July 2024
எண்ணிப்பார் 7 வேறுபாடு16th July 2024

மற்ற படைப்புகள்

15
எண்ணிப்பார் 7 வேறுபாடுபிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2024
7th February 2024 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2024ஜூலை 2024பாடல்கள்
12th July 2024 by ஆசிரியர்

நான் செய்த கப்பல்

Read More
19
நவம்பர் 2024பிஞ்சு 2024
8th November 2024 by சரிதா ஜோ

பிற இதழிலிருந்து…முடி நம் அடையாளமல்ல!

Read More
10
ஜூலை 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
16th July 2024 by சரவணா இராசேந்திரன்

வரலாறு அறிவோம் – 2 : காகித வரலாற்றுக்குள் ஒரு காலப் பயணம்

Read More
23
கதைடிசம்பர் 2024பிஞ்சு 2024
7th December 2024 by சா.கா.பாரதி ராஜா

நல்லடதைச் செய்வோமே!

Read More
28
டிசம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்புதிர்கள்பொது அறிவு
7th December 2024 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p