• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இன்றைய உலகின் ஆய்வுகள்

2012_may_1
மே

பூமியின் வயது : புதிய செய்தி

பூமியின் தோற்றம் பற்றி புதிய ஆய்வு ஒன்றை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக அறிவியலாளர்கள் மேற் கொண்டிருக்கிறார்கள். பூமி தோன்றி 500 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பதுதான் இவர்கள் வெளியிட்டிருக்கும் புதிய செய்தி.அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கொண்டு இதைக் கண்டறிந்துள்ளதாக இவர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ள செய்திகள்:   பூமி தோன்றிய உடனே அதில் உயிரினங்கள் தோன்றிவிடவில்லை. பூமி தோன்றி பல கோடி ஆண்டுகளுக்குப் பின்னரே உயிரினங்கள் தோன்றியிருக்க முடியும். இந்த உயிரினத் தோற்றமும் இப்போது உள்ளது போல இருந்திருக்க முடியாது. பூமி தோன்றி ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்குப் பின்னரே முதன்முதலாக கடல் நீரில் பாசி (ALGAE) போன்றவை தோன்றின. அக்காலத்தில் கார்பன் கூட்டுப் பொருட்கள் அதிகமாக இருந்ததால், பாசி தோன்றியிருக்கக் கூடும். இதற்குப் பின்னர் 50 கோடி ஆண்டுகள் கடந்த பிறகுதான் உயிரினங்கள் தோற்றம் பெறத் தொடங்கின. அதுவும்கூட பலவித மாறுதல்களை அடைந்தன. கிளிஞ்சல்கள் (OYSTER) போன்ற திடமான கூடுகளில் உயிரினங்கள் வசிக்க ஆரம்பித்தன. இதனையடுத்து 50 கோடி ஆண்டுகள் கழித்து படிப்படியாக சில உயிரினங்கள் தோன்றி வளர ஆரம்பித்தன,என்று கலிபோர்னியா அறிவியலாளர்களின் புதிய ஆய்வு முடிவு கூறுகிறது. என்றாலும் இது முழுமையான முடிவுகள் அல்ல; இன்னும் முக்கியமான சில ஆய்வுகளைச் செய்யவேண்டியுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

விண்வெளியில் ரோபோக்கள்

ரோபோக்கள் பற்றி அறிந்திருப்பீர்கள். மனிதர்களுக்கு உதவும் வகையில் வேலை செய்யும் இயந்திர மனிதர்கள் இவர்கள். இப்போது இந்த ரோபோக்கள் விரைவில் விண்வெளி யிலும் வேலை செய்யப்  போகின்றன. ஏற்கெனவே ஒளிப்படங்கள் எடுப்பதற்காக விண்வெளியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவை உருவ அமைப்பில் மற்ற ரோபோக்களைப் போல இருக்காது. அண்மையில் அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா விண்வெளி ஓடங்களில் எரிபொருட்களை நிரப்பும் பணிக்காக முதன்முறையாக ரோபோக்களை பயன்படுத்துவது குறித்து சோதனை ஒன்றைச் செய்து பார்த்துள்ளது. Robotic Refueling Mission(RRM) என்று பெயரிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் ரோபோக்கள் 250 கிலோ எடையைக் கொண்டது. 83 x 109 x 114 cm என்ற அளவில் இருக்கும். ஒரு முறையில் தமக்குள் 1.7 லிட்டர் எரிபொருளை எடுத்துச் செல்லக்கூடிய இந்த ரோபோக்களின் சோதனைத் திட்டம் 2013ஆம் ஆண்டு வரையும் தொடர்ந்து செய்யப்படும் என நாசா கூறியுள்ளது.

19
தற்கொலை - தவிர்ப்பது எப்படி? ‍தற்கொலை - தவிர்ப்பது எப்படி? ‍26th April 2012
சின்னக்கதை சித்திரம்26th April 2012சின்னக்கதை சித்திரம்

மற்ற படைப்புகள்

2012_may_pinju-16
மே
26th April 2012 by ஆசிரியர்

பிஞ்சுகள் பக்கம்

Read More
2012_may_pinju-24
மே
26th April 2012 by ஆசிரியர்

தற்கொலை – தவிர்ப்பது எப்படி? ‍

Read More
2012_may_ss
மே
2nd May 2012 by ஆசிரியர்

சுடோகு

Read More
2012_may_pinju-18
மே
27th April 2012 by ஆசிரியர்

உலகப் புகழ் பெற்றவர்கள்

Read More
2012_may_slovakia
மே
30th April 2012 by ஆசிரியர்

ஸ்லோவேக்கியா

Read More
2012_may_pinju-21
மே
2nd May 2012 by ஆசிரியர்

மாயமில்லை… மந்திரமில்லை…

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p