• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

எண்ணிய எண்ணியாங்கு எய்துபர்!

4
ஆகஸ்ட் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்

(எண்ணியபடியே செயலாற்றுவர்)

மனிதராகப் பிறந்த அனைவருமே பிரச்சனைகளில் நீந்தித்தான் வாழ்க்கையில் கரை சேர்ந்தாக வேண்டும். எதுவும் சுலபமாக வந்துவிடாது. யாரெல்லாம் தம்முடைய பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வைக் காண்கிறார்களோ, அவர்களெல்லாம் அந்தப் பிரச்சனையை சரியாக புரிந்துகொண்டவர்கள் என்று பொருள். புரிந்து கொண்டாலே பாதி தீர்வு கிடைத்தது போல்தான். இது எல்லாத் துறைகளுக்குமே பொருந்தும். இதற்கென்று தனி கல்வி, பட்டம் என்று பரந்துவிரிந்த துறை இது!

அப்படியெல்லாம் படித்துப் பெற வேண்டிய அறிவைத் தானாகவே வெளிப்படுத்தினார் 4 வயதுச் சிறுமி சாய்நிதுரா! ஒருநாள் சென்னை பெரியார் திடலுக்குத் தன் தாயுடன் வந்தார். 14 வயது கவினைச் சந்தித்தார். இருவரும் தங்கள் பெயர்களைப் பரிமாறிக் கொண்டனர். ‘சாய் நிதுரா’ என்ற பெயர் சொன்ன குட்டிப்பெண்ணின் உச்சரிப்பு கவினுக்கு, ‘சாய் நிடுதா’, ‘சாய் நிதுதா’, ‘சாய் நிருடா’ என பல வகைகளில் கேட்டிருக்கிறது. இதைக் கூட சரியாக புரிந்துகொள்ள முடியவில்லையே என்று கவினுக்குக் கவலையை ஏற்படுத்தியதோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால், சாய் நிதுராவுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்திவிட்டது.

நமது பெயரின் சரியான உச்சரிப்பு கவினுக்கு பிடிபட வில்லையே என்று கவலைப் பட்டிருக்கிறார்! அதைப்பற்றி தனியாக சிந்தித்திருக்கிறார்! இறுதியில் நமது உச்சரிப்புதான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்பதை அவராகவே உணர்ந்துகொண்டார்! இவ்வளவு நுட்பமாக 4 வயது குட்டிப்பெண் சிந்தித்திருப்பது அரிதுதானே? ஏன் குட்டிப்பெண் சிந்திக்க கூடாதா? சிந்திக்கும் திறன் பெரியவர் களுக்கு மட்டும் தான் பட்டா போட்டு கொடுக்கப் பட்டிருக்கிறதா என்ன? இதனால்தானே “உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு அச்சாணி” என்கிறார் திருவள்ளுவர்.
ஒரு தீர்க்கமான முடிவெடுத்துவிட்ட சாய் நிதுரா, ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக்கொண்டு கவினுக்கு அருகில் வந்து, ”கவின் இங்க பாருங்க” என்று நிறுத்தி நிதானமாக தன் பெயரை

SAI NITHURAA என்று மழலை எழுத்துகளில் தெளிவாக எழுதிக் காண்பித்திருக்கிறார். அந்தத் தாளை வாங்கி கவின் எழுத்துக்கூட்டி வாசித்து, புரிந்து கொண்டு, “அடடே… சாய் நிதுரா வா?” என்று மகிழ்ச்சியுடன் குட்டிப்பெண்ணைப் பார்த்து அழைத்திருக்கிறார். அதைக் கேட்டவுடன் சாய் நிதுரா வெட்கமும், நிம்மதியும் ஒருசேர முகத்தில் படர, ‘ஆமாம்’ என்பது போல் தலையை அசைத்திருக்கிறார்.
‘ச்சே.. எத்தனை முறைதான் சொல்வது.

இவருக்கு புரியவே இல்லையே’ என்று சாய் நிதுரா சலிப்படைந்து விலகிச் சென்றிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் முதலில் அதை ஒரு பிரச்சனையாக அங்கீகரித்திருக்கிறார். இது முக்கியமான விசயம்! அதைத் தீர்க்க வேண்டும் என்று உறுதியாக ஒரு முடிவெடுத்திருக்கிறார். இது அதைவிட முக்கியமானது! இதைத்தான் வினைத்திட்பம் எனும் குறளில் “எண்ணிய எண்ணியாங்கு எய்துபர் எண்ணியர் திண்ணியர் ஆகப் பெரின்” என்கிறார் வள்ளுவர்! அதாவது, எண்ணியபடியே செயலாற்றுவதில் உறுதியுடையவராக இருப்பவர் கள் அவர்கள் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவார்கள் என்பது அதற்குப் பொருள். அப்படித் தானே இந்தச் சின்னப்பெண் எண்ணியிருக்கிறார்! அதை செயல்படுத்தி இருக்கிறார்! செயலில் சிறிதென்ன? பெரிதென்ன?

21
திருக்குறள் பொருட்பால் - அரசியல்திருக்குறள் பொருட்பால் - அரசியல்5th August 2024
அடேயப்பா...! - 5 : காரா கோட்டோ5th August 2024அடேயப்பா...! - 5 : காரா கோட்டோ

மற்ற படைப்புகள்

19
ஏப்ரல் 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
5th April 2025 by முரளிகிருஷ்ணன் சின்னதுரை

ஏப்ரல் 2: உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் (World Autism Day): மதியிறுக்கம் உடையோரின் உரிமைக்குரலை எதிரொலிப்போம்!

Read More
2021_sep_v43
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
2nd September 2021 by ஆசிரியர்

மாண்டிசோரி (Montessori) முறை என்றால் என்ன?

Read More
37
நவம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
9th November 2024 by ஆசிரியர்

திருக்குறள் பொருள் – அரசியல்

Read More
2020_dec_v14
டிசம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
28th December 2020 by ஆசிரியர்

எனக்குப் பிடித்த பெரியார்

Read More
15
கதைஜுன் 2024பிஞ்சு 2024
5th June 2024 by ஹூவாமை

இப்ப நான் என்ன சொல்றது? காளியம்மாவா? சூரிக் கத்தியா?

Read More
2019_aug_a7
ஆகஸ்ட் 2019பிஞ்சுகள் பக்கம்
2nd August 2019 by ஆசிரியர்

தானாக ’செஸ்’ விளையாடக் கற்ற கணினி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p