• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by அபி

துணுக்குச் சீட்டு – 21: தோல் நிறம் எப்படி வருது?

21
செப்டம்பர் 2024பிஞ்சு 2024பொது அறிவு

தோலின் நிறத்தில், கருப்பு அழகா? வெள்ளை அழகா? இல்ல மாநிறம் அழகா? என் கண்ணுக்கு, எல்லா நிறமுமே பேரழகு தான்! அது சரி, இந்த நிறம் எப்படி நமக்கு வருது?
எல்லாம், நம் தோலில் இருக்கும் மெலனோசைட்ஸ் எனப்படும் செல்லின் உதவியால் தான்! மனிதத் தோல் Wafer பிஸ்கட் மாதிரி, பல அடுக்குகளால் செய்யப்பட்டு இருக்கும். இதுல ஒரு அடுக்குதான் எப்பிடர்மிஸ் (Epidermis) இந்த அடுக்கில் தான் மெலனோசைட்ஸ் செல்கள் இருக்கும். இந்த செல்களில் மெலனின் சுரக்குது. இந்த செல்களில் எந்த அளவுல மெலனின் சுரக்குதோ, அந்த அளவுல தான் நம்மளோட தோல் நிறம் இருக்கும்.

அதிகமா மெலனின் சுரந்தால் அவர்களின் தோல் நிறம் கருமையாக இருக்கும். இதுவே குறைவாச் சுரந்தால் வெள்ளையா இருக்கும். இப்படித்தான் நம்மளோட தோல் நிறம் நமக்கு அமையுது.
ஒன்று கவனிச்சு இருக்கீங்களா? ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறைவிட்டு உங்க நண்பர்களுக்கு ‘டாடா’ சொல்லும்போது அவங்க அப்போது இருந்த நிறத்தை விட, ஜூன் மாதம் அவங்களுக்கு மறுபடியும் ‘ஹாய்’ சொல்லும்போது ஒரு ‘ஷேட்’ (Shade) நிறம் குறைஞ்சு இருப்பாங்க. நீங்களும்தான்!
ஏன்னா, மே மாதம் முழுக்க எல்லோரும் “வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி”- ன்னு வெயிலில் சுற்றி இருப்பீங்க அல்லவா? அதனாலதான்.

வெயிலில் சென்றால் மட்டும் ஏன் அப்படி ஒரு ‘ஷேட்’ நிறம் குறைகிறோம்? அதுக்கும் மெலனின்தான் காரணம். சூரிய ஒளியில் பல கதிர்கள் இருக்கு. அதுல ஒன்னு தான் புற ஊதாக் கதிர். இது தோல் புற்றுநோய் வருவதற்கு ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறது. இந்தக் கதிர் நம்ம தோலுக்குள்ள ஊடுருவி எப்பிடர்மிஸ்மேலே படும் போது அங்கிருக்கும் மெலனோசைட்ஸ் செல்கள், “அச்சச்சோ, புற ஊதாக் கதிர்கள்” வந்திருச்சே என்று மெலனினைச் சுரக்குது. புற ஊதாக் கதிர் வந்த உடனே, மெலனின் ஏன் சுரக்குது? ஏன்னா, புற ஊதாக் கதிர்களிடம் இருந்து நம்முடைய தோலைக் காக்க மெலனின் முயற்சி செய்யும். எப்பிடர்மிஸ் அடுக்கில் சுரக்கும் மெலனின், கொஞ்சம் கொஞ்சமா தோலின் மேற்பகுதிக்கு வரும். அங்க வந்து தோல் மேற்பகுதிக்கு ஒரு குடை போல இருந்து மெலனின் நம்மோட தோலை புற ஊதாக்கதிர்களிடம் இருந்து ஓர் அளவுக்குக் காக்கும். திடீர்னு, வெயில் நம்ம மேல படும்போது, மெலனின் அதிக அளவில் சுரப்பதால்தான், நான், நீங்க, உங்க தோழர்கள் என, எல்லாரும், வெயிலில் போனால், ஒரு ‘ஷேட்’ நிறம் குறைஞ்சிடுறோம்.

13
புதிய தொடர்: காட்டுவாசிபுதிய தொடர்: காட்டுவாசி4th September 2024
சின்னக்கைச் சித்திரம்4th September 2024

மற்ற படைப்புகள்

5
அறிவியல்பிஞ்சு 2024பிப்ரவரி 2024
7th February 2024 by ஆசிரியர்

செ.நு. தொடர் – 8 : எந்திரக் கற்றல்

Read More
2
ஏப்ரல் 2024பாடல்கள்
2nd April 2024 by அருப்புக்கோட்டை செல்வம்

செய்தித்தாள் படி!

Read More
3
கதை கேளு கதை கேளுபிஞ்சு 2024மார்ச் 2024
5th March 2024 by விழியன்

“கொத கொத கொதக்”

Read More
2019_sep_a27
செப்டம்பர் 2019பொது அறிவு
26th August 2019 by ஆசிரியர்

உலக நாடுகள் : கம்போடியா (CAMBODIA)

Read More
7
2024பிஞ்சுகள் பக்கம்மே 2024
30th April 2024 by அபி

துணுக்குச் சீட்டு – 15

Read More
17
செப்டம்பர் 2023பிஞ்சு 2023பொது அறிவு
9th September 2023 by அபி

சந்திராயன் 3 : அது எதுக்குத் தங்கக் காகிதம் ?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p