• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கூட்டிக் கழிச்சுப் பாரு… கணக்கு சரியா வரும்!

2012_may_pinju-10
மே

என்ன பிஞ்சுகளே!

தேர்வுகள் முடிந்து விடுமுறை மனநிலையில் இருக்கிறீர்களா? கொண்டாடுங்கள். விடுமுறை சிறப்பாக நாம் ஒரு கணக்கு விளையாட்டு விளையாடுவோமா? ஏன்… தேர்வு முடிந்த பின்னும் கணக்கா என்று சுணக்கப்படாதீர்கள்! விளையாட்டு புதிர்க் கணக்குதான். நான் சொல்லித் தருகிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களோடு விளையாடுங்கள்.  சரிதானா?

எண்களால் விளையாடுவோம்

1. 1 லிருந்து 9க்குள் வரும் எண்கள் இருக்கும்படியாக ஒரு மூன்று இலக்க எண்ணை சொல்லுங்கள். அதாவது 0 (சுழியாக) வரக்கூடாது. அப்படி எழுதப்படும் எண்ணில் ஒரே எண் திரும்ப வரக்கூடாது. எடுத்துக்காட்டாக, 388, 464, 889 இப்படி வரக்கூடாது. 237, 465, 892 இந்த மாதிரியாக இருக்க வேண்டும்.

2. எழுதிய அந்த எண்ணை தலைகீழாக எழுதச் சொல்லுங்கள். (எ.கா.) 237 என்றால் 732.

3. இவை இரண்டில் எது பெரிதோ அதிலிருந்து மற்றொன்றை கழிக்கச் சொல்லுங்கள். (அப்படி எழுதப்பட்ட அந்த எண் முதலில் எழுதிய எண்ணைவிட பெரிய எண்ணாக இருந்தால், அதிலிருந்து முதலில் எழுதிய எண்ணை கழிக்கச் சொல்லுங்கள். அல்லது தலைகீழாக எழுதிய எண் சிறிய எண்ணாக இருந்தால் முதலில் எழுதிய எண்ணிலிருந்து கழிக்கச் சொல்லுங்கள்.)

4. அப்பொழுது விடையாகக் கிடைக்கும் எண்ணை உங்களால் கூறமுடியும். நீங்கள் விடை எந்த எண்ணில் ஆரம்பிக்கின்றது (அதாவது 100வது மதிப்பு (ஸ்தானம்)) என்பதை மட்டும் கேட்டு அது,

0 என்றால் விடை 099

1 என்றால் விடை 198

2 என்றால் விடை 297

3 என்றால் விடை 396

4 என்றால் விடை 495 எனவும் 5லிருந்து 8 வரை என்றால் இந்த எண்களே தலைகீழாகவும் அதாவது 594, 693, 792, 891 எனவும் வரும். இந்த எண்களைத் தவிர வேறு எண்கள் வர வாய்ப்பே இல்லை.

5. சரி, அந்த விடையைச் சொல்லி விட்டீர்களா? இனி மறுபடியும் அவர்களுக்கு கிடைத்த விடையையும் விடை எண்ணையும் தலைகீழாக எழுதச் சொல்லி அந்த எண்ணுடன் கூட்டச் சொல்லுங்கள். (அதாவது விடை 198 என்றால் அதன் தலைகீழான 891 உடன் கூட்டச் சொல்லுங்கள்)

6. இப்பொழுது அவர்களுக்கு கிடைக்கும் விடையையும் நீங்கள் 1089 என்று சொல்லி வியப்படையச் செய்யுங்கள்.

10க்கும் மேற்பட்ட நண்பர்கள் ஒரே இடத்தில் இருந்தாலும் அவர்களுடன் இதனைச் சொல்லி விளையாட முடியும்.

– இறைவி

23
விடைகள்விடைகள்2nd May 2012
தெரிஞ்சுக்கலாம்...8th June 2012தெரிஞ்சுக்கலாம்...

மற்ற படைப்புகள்

2012_may_pinju-18
மே
27th April 2012 by ஆசிரியர்

உலகப் புகழ் பெற்றவர்கள்

Read More
2012_may_pinju-7
மே
2nd May 2012 by ஆசிரியர்

தொலைபேசி உருவான கதை

Read More
2012_may_pinju-24
மே
26th April 2012 by ஆசிரியர்

தற்கொலை – தவிர்ப்பது எப்படி? ‍

Read More
2012_may_ss
மே
2nd May 2012 by ஆசிரியர்

சுடோகு

Read More
மே
2nd May 2012 by ஆசிரியர்

விடுகதைகள்

Read More
மே
2nd May 2012 by ஆசிரியர்

மாணவக் கவிஞரின் துளிப்பாக்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p