• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by மீயாழ்

வரலாறு: வெனிஸ் நகரம் உருவான கதை

18
அக்டோபர் 2024கதைபிஞ்சு 2024

இத்தாலியின் மிக முக்கியமான சுற்றுலா நகரமாகவும், யுனெஸ்கோவால் பாரம்பரிய நகரங்களில் ஒன்றென அறிவிக்கப்பட்டுள்ள மிதக்கும் நகரமான வெனிஸ், ஒரு காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட சதுப்பு நிலமாக இருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சரி, அப்படி இருந்த சதுப்பு நிலம் எப்படி அனைவரும் விரும்பத்தக்க அழகான சுற்றுலாத் தலமாக மாறியது என்று பார்ப்போம் வாருங்கள்…
பொ.ஆ.452க்குப் பிறகு ரோமானியப் பேரரசு சரிவின் விளிம்பில் இருந்து மீண்டதைக் காட்டிலும், வெனிசியர்கள் தண்ணீரில் ஒரு நகரத்தை எவ்வாறு உருவாக்கினார்கள் என்பதைப் பற்றி அறிய எப்போதும் ஓர் ஆர்வம் நம் அனைவருக்கும் இருக்கின்றது அல்லவா!
வறுமையின் விளிம்பிலிருந்து தப்பிக்க, வெனிசியர்கள் கடற்கரைக்கு அருகிலுள்ள சிறிய தீவுகளுக்குப் படகில் தப்பிச் சென்றனர். இந்தத் தீவுகள் இயற்கையாகவே மென்மையான களிமண்ணால் ஆன சதுப்பு நிலங்களாய் இருந்தன, அதாவது ஓர் ஆளின் எடையைக் கூடத் தாங்க முடியாத அளவுக்கு நெகிழ்வுத் தன்மையுடன் இருந்தது, அந்த நிலம். ஆனால், அறைகூவலாக விளங்கிய இத்தகைய இயற்கைச் சூழலில் உலகைத் திகைக்க வைக்கும் ஒரு சாதனையை வெனிசியர்கள் நிகழ்த்த எண்ணினர். அதற்காக அவர்கள் காடுகளில் இருந்து அதிக அளவு மரக் கட்டைகளைச் சேகரித்தனர்.

சதுப்பு நிலப்பகுதியில் மரக்கட்டைகளை அடுக்கி உருவாக்கப்பட்ட தரைகள்

அய்ந்து மீட்டர் ஆழமுள்ள களிமண் அடுக்கில் மரக்கட்டைகளைச் செங்குத்தாக ஒவ்வொன்றாகச் செலுத்தினர், இது களிமண்ணை இறுக்கியது மட்டுமல்லாமல், மரக் கட்டைகளையும் உறுதிப்படுத்தியது. சீரற்ற மரக் குவியல்களைச் சமன் செய்த பிறகு, எடையின் அழுத்தத்தைத் தாங்குவதற்கு மேல் மட்டத்தில் மரப் பலகைகளை அமைத்தனர், பலகைகளின் மேற்புறத்தில் பல அடுக்குகளாகக் கற்களைக் கொண்டு நிரப்பினர். உறுதித் தன்மையுடன் அமைக்கப்பட்ட இந்த செயல்முறை திடமான அடித்தளத்தை உருவாக்கியது.
பின்னர் அதன் மேலே வீடுகளைக் கட்ட ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் மரக்கட்டைகளையே பயன்படுத்தினர். ஆனால், பல பேரழிவுகளைச் சந்தித்த பிறகு, கட்டடங்களின் எடையைக் குறைக்க செங்கற்களுக்கு மாறி, அவற்றை மூன்று அடுக்குகளாக மட்டப்படுத்தி, சிமெண்டிற்குப் பதிலாக சுண்ணாம்பு மற்றும் சாந்தைப் பயன்படுத்தினர்.

இதனால் வீடுகள் மிகவும் நெகிழ்வானதாகவும் வெளிப்புறச் சுவர்களை நிலைப்படுத்தப் பயன்படும் நங்கூரக் கம்பிகளைக் கொண்டு சற்றுத் திரும்பக்கூடியதாகவும் இருந்தது. முதல் வீடு கட்டப்பட்டதும், அதைப் பின்பற்றி நிறைய மக்கள் அதேபோன்ற வீடுகளைக் கட்டத் தொடங்கினர். இதனால் வெனிஸ் நகரம் மெல்ல மெல்ல புது வடிவம் பெற்றது.
முதல் 500 ஆண்டுகளில் இந்த நகரில் எங்கும் பாலங்கள் இருந்ததே இல்லை. போக்குவரத்து முற்றிலும் படகு மூலமாகவே இருந்தது. கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல மிதக்கும் பாலங்களும் மரப்பாலங்களும் கட்டப்பட்டன. இறுதியில் நன்னீர் ஆதாரம் இல்லாத, கடல் நீரால் சூழப்பட்ட, நூற்றுக்கணக்கான தீவுகளை இணைக்கும் கல் பாலங்களுக்கு அதுவே வழிவகுத்துள்ளது.

அதன் மேல் வீடுகள் அமைத்த முறை

மழை நீரைச் சேகரித்த முறை

மக்கள் தொகை பெருகியதால், வெனிசியர்கள் ஆரம்பத்தில் பிரதான நிலத்திலிருந்து படகு மூலம் குடிநீர் கொண்டு சென்றனர். இந்தத் தண்ணீர் அவர்களின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை. ஆகவே, அவர்கள் வெற்று இடங்களைத் தோண்டி, அவற்றை நீர்த்தேக்கத்திற்காக மணல் மற்றும் கற்களால் நிரப்பத் தொடங்கினர். மழை நீரைச் சேமிக்க ஒரு கிணற்றை அமைத்து, கூரைகளிலிருந்து வடிகால் குழாய்களையும் அந்தக் கிணற்றோடு இணைந்தனர். வெனிஸ் முழுவதிலும் உள்ள மக்களைத் தக்கவைக்கத் தேவையான மழைநீரைச் சேகரிக்கும் கிணறுகள் புனல்களைப் போலச் செயல்பட்டன. இவ்வாறாக வெனிஸ் நகரம் மக்கள் வாழ்வதற்குகந்த அழகு நகரமாக மாறியது.
மனித எடையைக் கூடத் தாங்க முடியாத சதுப்பு நிலத்தை உலகப் புகழ் பெற்ற மிதக்கும் நகரமாக வெனிஸ் மக்கள் மாற்றியது உண்மையிலேயே வியக்கத் தக்கது; பாராட்டத்தக்கது. வெனிஸைக் கட்டமைத்தவர்களின் அறிவுக் கூர்மையும், தொழில் நுட்பமும், கலை நுட்பமும் இன்றும் பாராட்டத்தக்கன.

21
திருக்குறள் அறம் - இல்லறவியல்திருக்குறள் அறம் - இல்லறவியல்4th October 2024
நிறைவுடன் வாழ்வாய்!4th October 2024நிறைவுடன் வாழ்வாய்!

மற்ற படைப்புகள்

11
2024சிறார் கதைமே 2024
30th April 2024 by ஸ்ரீஜோதி விஜேந்திரன்

சிறார் கதை : கதை சொல்லப் போறேன்

Read More
30
நவம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்புதிர்கள்
8th November 2024 by பெரியார் குமார்

“கண்டுபிடி… கருத்தைப்படி”

Read More
34
அக்டோபர் 2024கதைபிஞ்சு 2024
4th October 2024 by ஆசிரியர்

அறிவியல் சிறுகதை: இருபால் – ஒரு பறவை

Read More
2023_jan_28
கோமாளி மாமாஜனவரி 2023
6th January 2023 by ஆசிரியர்

கோமாளி மாமா-33 : மு.கலைவாணன்

Read More
15
கதைஜுன் 2024பிஞ்சு 2024
5th June 2024 by ஹூவாமை

இப்ப நான் என்ன சொல்றது? காளியம்மாவா? சூரிக் கத்தியா?

Read More
3
கதைடிசம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
7th December 2024 by எழுத்து, ஓவியம்: மு.கலைவாணன்

தொடர் கதை-காட்டுவாசி-4: எப்படி கடத்தினார்கள்?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p