• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நிறைவுடன் வாழ்வாய்!

36
அக்டோபர் 2024பாடல்கள்பிஞ்சு 2024
கண்ணே மணியே அரும்பே அலரே
கனிவாய்ப் பகர்வேன் உளமதில் கொள்வாய்
எண்ணங்கள் மேன்மை வினையாய் அமைத்தல்
எழில்நிறை வாழ்வை அளிக்குமே என்றும்!
அளவோடு உணவை அமைதியாய் உண்பாய்
வளம்செய் உடற்பயிற்சி ஊக்கமாய்ச் செய்வாய்
நலம்செய் உறக்கத்தை நாள்தோறும் கொள்வாய்
நிலையான வாழ்வினை என்றும் அடைவாய்  
பெரியோரைப் போற்றியே பேருவகை பெற்றிடு
பெற்றோரைப் பேணி பெருமை அடைந்திடு
பேராசை கொன்றே  பெருமகிழ் வெய்திடு
பேராற்றல் வாய்த்திடும் வாழ்வினைச் செய்திடு!
கற்பதைக் காலம் முழுவதும் தொடர்வாய்
கருப்பொருள் கூறும் கருத்தினை அறிவாய்
கலைகள் பலவும் பயனுற ஏற்பாய்
கறையிலா வாழ்வை! களிப்புடன் வாழ்வாய்
இயற்கை அறைந்திடும் உண்மைகள் கேட்டிடு
இயல்பாய் அறிவியல் பார்வை வளர்த்திடு
இலக்கினை நோக்கிய தேடலைப் போற்றிடு
இளமை தொடரும் இனியவாழ் வமைத்திடு
வாழ்க்கை தருமரு வாய்ப்பினைப் பற்று
வலிமை பெறவே வலியையும் போற்று
பிழையும் தவறும் பாடமென் றொப்பு
பிணக்கிலா இன்பம் பயத்திட வாழ்ந்திடு!
வெற்றிச் செருக்கு வலிமை ஆகுமோ
பற்றி எரியும் அழலாய்ப் பொசுக்குமே
கற்றுணர் தோல்வியும் தந்திடும் பாடமே
பெற்று மகிழ்வாய் நிறைவான வாழ்வே
பயிற்சி எதனையும் எளிதென ஆக்கும்
முயற்சி அனைத்தும் ஆக்கிடச் செய்யும்
அயர்ச்சி தவிர்த்தல் வளம்தனைச் சேர்க்கும்
உயர்ச்சி தரும்நனி நல்வாழ்வு தந்திடும்
பாலின பேதமிலா நட்பினைச் செய்வாய்
பாகுபாடு இல்லா உறவினைக் காப்பாய்
ஆகூழ் கணியம் புரட்டென அறிவாய்
ஆக்கம் மிளிரும் நிறைவுடன் வாழ்வாய்
இத்தனை சொல்வதில் எத்தனை வாய்க்கும்
இரண்டொன்று இல்லை எனினும் கரும்பே
இயன்றதைச் செய்திடும் எண்ணம் சமைத்தே
இன்புற்று வாழ்ந்திட வாழ்த்து!
– இறைவி
10
வரலாறு: வெனிஸ் நகரம் உருவான கதைவரலாறு: வெனிஸ் நகரம் உருவான கதை4th October 2024
சிறுவர் பாடல்: படிப்போம் பெரியார் பிஞ்சு!4th November 2024சிறுவர் பாடல்: படிப்போம் பெரியார் பிஞ்சு!

மற்ற படைப்புகள்

10
ஜூலை 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
16th July 2024 by சரவணா இராசேந்திரன்

வரலாறு அறிவோம் – 2 : காகித வரலாற்றுக்குள் ஒரு காலப் பயணம்

Read More
16
ஜனவரி 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
1st January 2024 by ஆசிரியர்

பரிசு: அறிவைத் தடுப்பதும் அறிவை விரிப்பதும்

Read More
2019_sep_a4
செப்டம்பர் 2019பாடல்கள்
26th August 2019 by ஆசிரியர்

செப்டம்பர் 16 – உலக அமைதி நாள்

Read More
28
டிசம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்புதிர்கள்பொது அறிவு
7th December 2024 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2
அக்டோபர் 2024கட்டுரைபிஞ்சு 2024
3rd October 2024 by ப.மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 7 : ஹெஞ்ச் குழிகள்

Read More
4
ஏப்ரல் 2024கதை கேளு கதை கேளு
2nd April 2024 by விழியன்

அக்பர்,சீதா மற்றும் சிலர்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p