• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by `சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்

அறிவின் விரிவு – 5: இரண்டாம் நோபல் பரிசு

19
அறிவியல்டிசம்பர் 2024பிஞ்சு 2024

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கொடுத்த இன்ப அதிர்ச்சியிலிருந்து கணினி உலகம் மீள்வதற்குள் மறுநாள் மற்றுமோர் அதிர்ச்சி. அடுத்து அறிவிக்கப்பட்ட வேதியியலுக்கான நோபல் பரிசும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்த முறை ஆல்பா போல்டு என்ற மென்பொருளை உருவாக்கக் காரணமாக இருந்த டெமிஸ் ஹபீஸ், ஜான் ஜம்பர் ஆகிய இருவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

‘AlphaFold’ செயற்கை நுண்ணறிவு மென்பொருள். இதன் வேலை புரதங்களின் வடிவங்களையும் அதன் கட்டமைப்பையும் ஆராய்ச்சி செய்வது. அதன் மூலம் புதிய புரதங்களை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை விளக்க முனைவது.
நம் உடல் முழுவதும் பல்வேறு புரதங்கள் உள்ளன. ஆனால், நம் உடல் தனக்குத் தேவையான புரதத்தை எவ்வாறு உருவாக்கிக் கொள்கிறது என்பது மிகப்பெரிய மர்மம். புரதத்தின் கட்டுமானம் என்ன? அது எப்படி உடலில் உருவாகிறது என்பதை நாம் புரிந்து கொண்டால் பல்வேறு நோய்களுக்கான மருந்துகளை மிக எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

இந்த ஆராய்ச்சிகளில் கணினியின் பயன்பாடு இருந்தாலும் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மென்பொருளைக் கொண்டு புரதத்தை உருவாக்கும் முயற்சி மிகப் பெரிய வெற்றியைத் தந்துள்ளது. இதன் மூலம் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பதில் மிகப்பெரிய பாய்ச்சல் உருவாகியுள்ளது.
நாம் கோவிட் காலத்திலேயே பார்த்தோம் அல்லவா? ஒரு வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடிப்பதெல்லாம் பல ஆண்டுகளாக நடக்கும் ஆராய்ச்சிகள். சில பத்து ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் கூட சில வைரஸ்களுக்கு நம்மால் சரியான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அண்மைக்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகத்தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை மிக விரைவில் எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தது.

புற்றுநோய் உட்பட பல உயிர்க்கொல்லி நோய்களுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் இந்தச் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் துறை என்பது கணினியின் விளையாட்டுத்துறை அல்ல; அது கணினித் துறைக்கு நோபல் பரிசு பெற்றுத் தரக்கூடிய மிகவும் முக்கியமான துறை என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டி விட்டது.
நாமும் இனிவரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு பற்றி மிகச் சுவையான தகவல்களை மிகவும் கவனமாகவும் அதே நேரம் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு கற்றுக்கொள்ளப் போகிறோம்.

(தொடரும்)

8
எண்ணிப்பார் 7 வேறுபாடு7th December 2024
போட்டிக்கு வாரீங்களா...!7th December 2024போட்டிக்கு வாரீங்களா...!

மற்ற படைப்புகள்

24
ஆகஸ்ட் 2024பாடல்கள்
1st August 2024 by ஆசிரியர்

சிறுவர் பாடல் – குரங்குக் கூட்டம்

Read More
16
செப்டம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
4th September 2024 by அன்பெழில்

பதிவு – 2: எங்கும் பெரியாரைப் பேசுவோம்!

Read More
10
ஆகஸ்ட் 2024கதைபிஞ்சு 2024
5th August 2024 by ஹூவாமை

இப்ப நான் என்ன சொல்றது? மறுபடியும் புதிதாய்ப் பிறந்தேன்!

Read More
28
ஜுன் 2024பிஞ்சு 2024வாசகர் கடிதம்
5th June 2024 by ஆசிரியர்

பிஞ்சு வாசகர் கடிதம்

Read More
28
பிஞ்சு 2024பிப்ரவரி 2024வரைந்து பழகுவோம்
7th February 2024 by பி. இளங்கோ

ஓவியம் வரையலாம், வாங்க! புத்தகம் வரைவோம்!

Read More
6
பிஞ்சு 2024மார்ச் 2024
5th March 2024 by அபி

துணுக்குச் சீட்டு – 14 : தண்ணீரில் நடக்கும் பூச்சி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p